உ.பி-யில் பாஜகவின் முக்கிய வாக்குறுதிகள் - சிறப்பு புகைப்படத் தொகுப்பு
Published on : 08 Feb 2022 18:19 pm
1 / 9
படங்கள்: சந்தீப் சக்சேனா |
பாஜக உத்தர பிரதேசத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'லவ் ஜிஹாத்' செய்யும் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதுடன் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளது.
2 / 9
விவசாயிகளுக்கு பாசனத்திற்கு இலவச மின்சாரம்.
3 / 9
ரூ.25,000 கோடி செலவில் ‘சர்தார் வல்லபாய் படேல் விவசாய உள்கட்டமைப்பு மிஷன்’ விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சேமிக்க மாநிலம் முழுவதும் குளிர்பதன மையங்கள், குடோன்கள் அமைக்கப்படும்.
4 / 9
மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நவீன வசதிகள் கொண்ட ஓர் அரசு மருத்துவமனை கட்டப்படும்.
5 / 9
கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு 'ராணி லட்சுமிபாய் யோஜனா' என்ற திட்டத்தின் கீழ், இலவச ஸ்கூட்டர் வழங்கப்படும். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் திருமணத்திற்கு ரூ.1 லட்சம் வரை நிதியுதவி.
6 / 9
பெண் குழந்தைகளின் கல்வி திட்டமான 'முக்கிய மந்திரி கன்யா சுமங்கலா யோஜனா’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி ரூ.15,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்படும்.
7 / 9
`சுவாமி விவேகானந்த் யுவ ஷசக்திகரன் யோஜனா' என்ற திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு இரண்டு கோடி டேப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படும்.
8 / 9
60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச பொது போக்குவரத்து பயணம். தொடக்கப் பள்ளிகளில் மேஜை, பெஞ்சுகள் போன்ற தளபாடங்கள் தயாரிக்க ‘மிஷன் காயகல்ப்’ தொடங்கப்படும்.
9 / 9
மாநிலத்தின் 30,000 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை நவீனமயமாக்கப்படும். மாநிலத்தின் தனிநபர் வருமானத்தை இரட்டிப்பாக்குவது.
ரூ.10 லட்சம் கோடி வரை முதலீட்டை ஈர்க்க நடவடிக்கை.