நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: கடைசி நாளில் கவனம் ஈர்த்த வேட்புமனு தாக்கல்
Published on : 04 Feb 2022 19:03 pm
1 / 10
திண்டுக்கல்லில் முதல்வர் ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வேடங்களில் வந்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தனர் திமுக வேட்பாளர்கள் | படம்: கார்த்திகேயன்
2 / 10
கோவையில் அமமுக கட்சி வேட்பாளர் நபிஃபிக் தனது மகளுக்கு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வேடம் அணிவித்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.
3 / 10
ராமநாதபுரத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் கடைசி நாளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் முண்டியடித்து வந்தனர். | படம்: எல். பாலசந்தர்
4 / 10
5 / 10
6 / 10
7 / 10
8 / 10
கோவை சிவானந்தா காலனி பகுதியில் உள்ள நகராட்சி பொறியியல் பிரிவு அலுவலகத்தில், பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்து வருவதை சுட்டிக்காட்டும் விதமாக குதிரையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த 32-வது வார்டு சுயேச்சை வேட்பாளர் மகேஷ்வரன் | படம்: ஜெ.மனோகரன்
9 / 10
மதுரை மேற்கு மாநகராட்சி அலுவலகத்தில் எம்ஜிஆர் வேடமிட்டு 17-வது வார்டுக்கு மனு தாக்கல் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பாட்ஷா. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
10 / 10
சென்னை 162 வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வினோத்குமார் மணக் கோலத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்