1 / 20
ஆடி மாதம்தானா இது என்று மக்களே ஐயப்படும் அளவுக்கு சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டிவந்த நிலையில், வியாழக்கிழமை திடீரெனப் பெய்த மழை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. | படங்கள்: ஆர்.ரகு, அகிலா ஈஸ்வரன், ஸ்ரீநாத், சத்தியசீலன், வேளாங்கண்ணி ராஜ்.
2 / 20
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும்(மே 10, 11) சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
3 / 20
அதேபோல, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று ஏற்கெனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
4 / 20
இந்நிலையில், இன்று மாலை சென்னையில் பரவலாக கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அடித்துப் பெய்த மழை தற்போதும் தூரல் போட்டுக் கொண்டே இருக்கிறது. வெப்பம் தணிந்து மக்களை மகிழ்வித்துள்ளது. அதேவேளையில், திடீர் கனமழையால் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.
5 / 20
சென்னையில் எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, சென்ட்ரல், கோயம்பேடு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கிண்டி, மாம்பலம், சைதாப்பேட்டை, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, புரசைவாக்கம், பட்டினப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், கிண்டி, ஆலந்தூர்,வேளச்சேரி, தாம்பரம், சேலையூர் எனப் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்தது.
6 / 20
7 / 20
8 / 20
9 / 20
10 / 20
11 / 20
12 / 20
13 / 20
14 / 20
15 / 20
16 / 20
17 / 20
18 / 20
19 / 20
20 / 20