Published on : 19 Jul 2023 19:09 pm

டெல்லியில் சேற்றில் அவதியுறும் சாமானிய மக்கள்: போட்டோ ஸ்டோரி

Published on : 19 Jul 2023 19:09 pm

1 / 19
எந்த ஒரு புதிய மாற்றமும் வெகுவிரைவாக எளிய மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் அதே வேளையில், மாற்றத்தின் பாதிப்புகளும் அம்மக்களையே வேகமாக பாதிக்கின்றன.
2 / 19
டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வரலாறு காண அளவில் பொங்கி பிரவாகம் எடுத்தது யமுனை நதி.
3 / 19
ஹரியாணாவில் பெய்த கனமழையால் ஹத்னிகுண்ட் தடுப்பணையின் உபரி வெள்ள நீரை அம்மாநில அரசு டெல்லியின் யமுனை வழியாக திறந்து விட்டது. இதனால், ஏற்கனவே பொங்கிக்கொண்டிருந்த ஆம் ஆத்மி - பாஜக அரசியல் பனிப்போரை யமுனை நதிநீர் மேலும் வலுவேற்றி மாறிமாறி குற்றம்சாட்டி கரைபுரண்டோடச் செய்தது.
4 / 19
இந்த அரசியல் கொந்தளிப்புகளுக்கு மத்தியில் அதுவரை கட்டுப்பட்டு ஓடிய யமுனை கரைகொள்ளாமல் தாழ்வான இடங்களைத் தாண்டி டெல்லி நகர வீதிகளை எட்டிப்பார்க்க வந்தது.
5 / 19
வீதியெங்கும் வெள்ள நீர் நகரின், மேட்டுப்பகுதிகளிலும் தண்ணீர் என தலைநகரம் ஸ்தம்பித்தது. ஆனாலும், டெல்லியன்ஸ் வெள்ள நீரைக் கொண்டாடும் புதிய மழை வாழ்க்கைக்கு பழகத் தொடங்கினர்.
6 / 19
இயற்கையின் பெருங்கருணை, அரசு இயந்திரங்களின் விடா முயற்சி என யமுனையின் வெள்ளம் மெல்ல வடியத் தொடங்கியது.
7 / 19
அழையா விருந்தாளியாய் டெல்லியின் எளிய மக்களின் வீடுகளுக்குள் வந்த யமுனை தன் பரிசாக அதுவரை அடைகாத்து வந்த வண்டல்களை விட்டுச் சென்றிருக்கிறாள்.
8 / 19
வெள்ளநீர் சூழ்ந்திருந்த தெருக்களிலும் வீடுகளிலும் இப்போது களிமண் சகதிகள் சூழ்ந்திருக்கின்றன. வீட்டின் கட்டிலில் இருந்து இறங்கினால் கரண்டைக் காலைக் கவ்விக்கொண்டு நலம் விசாரிக்கின்ற யமுனை விட்டுச் சென்ற ச(ங்)கதி...
9 / 19
வெள்ளநீர் குடித்த தரை எப்படியிருக்குமோ தெரியாது, அதனால் மண்வெட்டி போட்டு வெட்ட முடியாமல் சாப்பாட்டு தட்டு கொண்டு மொண்டு ஊற்றவேண்டியிருக்கிறது சகதியை.
10 / 19
இடுப்பளவு தண்ணீரில் கூட நடந்து விட நீந்தி விட முடிந்ததது. ஆனால், கணுக்காலைக் கவ்வும் சகதியில், துணையில்லாமல், தடுமாறாமல் அடிவைக்க முடியவில்லை.
11 / 19
வெள்ளத்தின்போது வாய்கிழிய பேசிய யாரும் இப்போது சதியைப் பற்றி மூச்சு கூட விடவில்லை. எல்லா மற்றங்களும் எளிய மக்களை சுலபமாக பாதித்துவிடுகிறது. | படங்கள்: சுஷில் குமார் வர்மா.
12 / 19
13 / 19
14 / 19
15 / 19
16 / 19
17 / 19
18 / 19
19 / 19

Recently Added

More From This Category

x