Published on : 17 Jul 2023 21:14 pm

எப்படி இருக்கிறது மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம்? - ஒரு விசிட் | போட்டோ ஸ்டோரி

Published on : 17 Jul 2023 21:14 pm

1 / 31
மதுரையின் புதிய அடையாளமாக உருவெடுத்துள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
2 / 31
அடித்தளம், தரைத்தளம், 6 மாடிகளிலும் புத்தக அரங்குகள் என முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் இந்நூலகம் அமைந்துள்ளது.
3 / 31
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நூலகத்தில் முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டனர்.
4 / 31
குறிப்பாக, குழந்தைகளுக்கென பிரத்யேகமாக விளையாட்டு அரங்குகள் உள்ளன.
5 / 31
மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்யேக வசதிகள் உள்ளன.
6 / 31
நூலகம் முன்புள்ள கலைஞர் கருணாநிதி சிலை அருகே நின்று பொதுமக்கள் ஆர்வமுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
7 / 31
“குழந்தைகளுக்கு அனைத்து வகையான புத்தகங்களும் உள்ளன. அறிவியல் விளையாட்டுகள், சிறுவர்களுக்கான நவீன திரையரங்கு, மாதிரி விமானப் பயிற்சி போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் கவர்ந்தன. நான் முதன் முதலில் வந்து நூலகத்தைப் பார்த்தது பற்றி தோழிகளிடம் கூறி அவர்களையும் வந்து படிக்கச் சொல்வேன்” என்றார் சிறுமி ஷிபானா.
8 / 31
“அறிவை வளர்க்கும் வகையில் லட்சக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. போட்டித்தேர்வர்கள் அமர்ந்து படிக்க நவீன வசதிகள் உள்ளன. நான் எம்ஏ ஆங்கில இலக்கியம் படித்துள்ளேன். நான் எதிர்பார்த்து வந்த ஆங்கில புத்தகங்கள் உள்ள அறைகள், அரங்குகள் திறக்காதது ஏமாற்றமாக உள்ளது” என்றார் சிம்மக்கல் ஆர்.யமுனா.
9 / 31
“எம்ஏ தமிழ் இலக்கியம் படித்துள்ளேன். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருகிறேன். தமிழில் ஏராளமான புத்தகங்கள் உள்ளன. போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களும் உள்ளன. நூலகத்தைப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் முழு அளவில் பயன்படுத்த வேண்டும்” என்றார் செல்லூர் வி.கார்த்திகா.
10 / 31
“சென்னை அண்ணா நூலகம் போல், மதுரைக்கு கலைஞர் நூலகம் அமைந்துள்ளது. நான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகிறேன். முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு எழுதிய நூல்களை ஆர்வமுடன் படித்து வருகிறேன்” என்றார் கடச்சனேந்தல் எம்.பரமசிவம்.
11 / 31
“நான் சென்னையில் தங்கியிருந்தபோது அண்ணா நூலகம் போன்று மதுரையில் நூலகம் அமையாதா என எதிர்பார்த்தேன். அது தற்போது நிறைவேறியுள்ளது. தமிழக அரசுக்கு நன்றி. நூலகத்தை அனைவரும் பயன்படுத்த வேண்டும்” என்றார் வடக்கு மாசி வீதி வி.தீபா.
12 / 31
மதுரை - நத்தம் சாலையில் நவீன கட்டுமான அம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடத்துக்காக மொத்தம் ரூ.215 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது.
13 / 31
இந்நூலகத்தில் ரூ.60 கோடிக்கு புத்தகங்கள், ரூ.18 கோடிக்கு தளவாடப் பொருட்கள், புத்தகங்களை அடுக்கி வைக்கத் தேவையான ரேக்குகள் மற்றும் கட்டுமானத்துக்காக ரூ.130 கோடியும் செலவிடப்பட்டது.
14 / 31
2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் அடித்தளம், தரைத்தளம், அதனுடன் 6 தளங்களைக் கொண்டதாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
15 / 31
அடித்தளத்தில் வாகன நிறுத்துமிடம், செய்தி - நாளிதழ் சேமிப்பு, நூல்கள் கட்டும் பிரிவு போன்றவை அமைந்துள்ளன.
16 / 31
தரைத்தளத்தில் கலைக்கூடம், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவு, மாநாட்டு கூடம், ஓய்வறை, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, பல்வகை பயன்பாட்டு அரங்கம், உறுப்பினர் சேர்க்கை பிரிவு உள்ளிட்டவை அமைந்துள்ளன.
17 / 31
முதல் தளத்தில் கலைஞர் பகுதி, குழந்தைகள் நூலகம், நாளிதழ்கள் - பருவ இதழ்கள் படிக்கும் பகுதி, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, அறிவியல் கருவிகள் பிரிவு உள்ளிட்டவை அமைந்துள்ளன.
18 / 31
இரண்டாம் தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவு, கலைஞரின் நூல்களைக் கொண்ட பிரிவு எனச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.
19 / 31
மூன்றாவது தளத்தில் ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி இதழ்கள் உள்ளன.
20 / 31
நான்காவது தளத்தில், எதிர்காலக் கனவுகளுடன் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணாக்கர் மற்றும் இளைஞர்களின் கனவு நனவாகும் வகையில் ஏறத்தாழ 30 ஆயிரம் புத்தகங்களுடனான பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
21 / 31
ஐந்தாவது தளத்தில் மின்னணுத் தொழில்நுட்பத்தின் வாயிலாக இன்றைய தலைமுறைக்குத் தேவையான அறிவுச் செல்வங்கள் அனைத்தையும் தருவதற்கான பகுதி உலகத் தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
22 / 31
ஆறாவது தளத்தில் நூல் பகுப்பாய்வு, நூல் பட்டியல் தயாரித்தல் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் சார்ந்த பகுதிகள் இடம்பெற்றுள்ளன. | படங்கள்: நா.தங்கரத்தினம், ஆர்.அசோக்.
23 / 31
24 / 31
25 / 31
26 / 31
27 / 31
28 / 31
29 / 31
30 / 31
31 / 31

Recently Added

More From This Category

x