Published on : 25 Apr 2023 20:42 pm

கொச்சி 'வாட்டர் மெட்ரோ' முதல் பயணமும் 8 அம்சங்களும் - போட்டோ ஸ்டோரி

Published on : 25 Apr 2023 20:42 pm

1 / 21
கேரள மாநிலம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை நாட்டின் முதல் 'வாட்டர் மெட்ரோ' சேவையைத் தொடங்கிவைத்தார். இந்த நீர்வழி மெட்ரோவின் 5 முக்கிய அம்சங்களாவன: 1. கொச்சி 'வாட்டர் மெட்ரோ' சேவை மூலம் கொச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் பயனடைவார்கள். சுற்றுலா பயணிகளை இது ஈர்க்கும்.
2 / 21
2. கொச்சி 'வாட்டர் மெட்ரோ' , அத்துறைமுக நகரைச் சுற்றியுள்ள 10 தீவுகளை இணைக்கும். உயர் நீதிமன்றம் - விபின் மற்றும் விட்டிலா - கக்கநாட் இடையே என இரண்டு முனையங்கள் இயங்கும்.
3 / 21
3. இந்த சேவையை பயன்படுத்தி பயணிகள் விபினில் இருந்து உயர் நீதிமன்றத்திற்கு 20 நிமிடங்களில் செல்லலாம். விட்டிலாவில் இருந்து கக்கநாடு பகுதிக்கு 25 நிமிடங்களில் செல்லலாம்.
4 / 21
4. அன்றாடம் காலை 7 மணி முதல் மாலை 8 மணி வரை சேவை தொடரும். பீக் அவர்களில் உயர் நீதிமன்றம் - விபின் இடையே 15 நிமிடங்களுக்கு ஒருமுறை கொச்சி வாட்டர் மெட்ரோ இயக்கப்படும்.
5 / 21
5. பயணிகளின் சவுகரியத்தைக் கருதி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.20 முதல் ரூ.40 வரை டிக்கட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வழக்கமாகச் செல்லக்கூடிய பயணிகள் ட்ராவல் பாஸ் பெற்றுக் கொள்ளலாம்.
6 / 21
6. மாதாந்திர சந்தா ரூ.600, அரையாண்டு சந்தா ரூ.1500 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் மற்றும் பாஸ்களை முனையங்களில் உள்ள கவுன்ட்டர்களில் க்யூ ஆர் கோட் பயன்படுத்தி வாங்கிக் கொள்ளலாம்.
7 / 21
7. கொச்சி 'வாட்டர் மெட்ரோ' திட்டமானது ரூ.1,137 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. ஜெர்மன் வங்கி, KFW நிதி வழங்கியுள்ளது. கொச்சி கப்பல்கட்டுமான லிமிடட் தான் வாட்டர் மெட்ரோ படகுகளை கட்டமைத்துள்ளது.
8 / 21
8. முதற்கட்டமாக 8 எலக்ட்ரிக் ஹைப்ரிட் படகுகள் கொச்சி 'வாட்டர் மெட்ரோ' சேவையில் இணைக்கப்படுகின்றன.
9 / 21
கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய விளையாட்டரங்கில், ரூ.3,200 கோடி மதிப்பிலான பல்வேறு வளரச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டியதோடு, நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்தத் திட்டங்கள் கொச்சி நீர்வழி மெட்ரோ போக்குவரத்தையும், பல்வேறு ரயில் திட்டங்களுக்கும், திருவனந்தபுரத்தில் டிஜிட்டல் அறிவியல் பூங்காவிற்கும் அடிக்கல் நாட்டியதையும் உள்ளடக்கியதாகும்.
10 / 21
கொச்சி நீர்வழி மெட்ரோ போக்குவரத்து என்பது இந்தியாவில் உருவாக்கப்பட்ட திட்டம் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், இதற்காக கொச்சி கப்பல் கட்டும் தளத்திற்கு பாராட்டுத் தெரிவித்தார். கொச்சிக்கு அருகே உள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு எளிதான, மலிவான போக்குவரத்து சாதனமாகும் என்றும் பேருந்து முனையம் மற்றும் மெட்ரோ வலைப்பின்னலுக்கு இடையே போக்குவரத்து தொடர்பை இது வழங்கும் என்றும் பிரதமர் கூறினார்.
11 / 21
நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு அப்பால் முகத்துவார சுற்றுலாவுக்கும் இது பயனளிக்கும் என்று தெரிவித்தார். கொச்சி நீர்வழி மெட்ரோ போக்குவரத்து நாட்டின், மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
12 / 21
போக்குவரத்து தொடர்புக்கான முதலீடுகள் சேவைகளை விரிவுபடுத்துவது மட்டுமின்றி தூரத்தைக் குறைத்து சாதி, மதம், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி பல்வேறு கலாச்சாரங்களை இணைக்கிறது என்பதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். படங்கள்: ஹெச்.விபு, துளசி கக்கட்.
13 / 21
14 / 21
15 / 21
16 / 21
17 / 21
18 / 21
19 / 21
20 / 21
21 / 21

Recently Added

More From This Category

x