Published on : 13 Feb 2023 20:28 pm

வானில் வியத்தகு சாகசங்கள் நிகழ்த்திய போர் விமானங்கள் - ஏரோ இந்தியா 2023 போட்டோ ஸ்டோரி

Published on : 13 Feb 2023 20:28 pm

1 / 47
14-வது ஏரோ இந்தியா 2023-ஐ பிரதமர் நரேந்திர மோடி இன்று பெங்களூரு யெலஹங்காவில் உள்ள விமானப்படை நிலையத்தில் தொடங்கி வைத்தார். 80-க்கும் மேற்பட்ட நாடுகள் இதில் பங்கேற்றுள்ளன. படங்கள்: முரளிகுமார்.கே
2 / 47
‘மேக் இன் இந்தியா, மேக் ஃபார் தி வேர்ல்ட்’ என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, உள்நாட்டு உபகரணங்கள் / தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டுறவை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் இந்த நிகழ்வு கவனம் செலுத்துகிறது.
3 / 47
இந்திய பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு அடைவது குறித்த பிரதமரின் முக்கியத்துவமும் இதில் முன்னிறுத்தப்படுகிறது.
4 / 47
இந்நிகழ்ச்சியில் நாட்டின் வடிவமைப்புத் தலைமைத்துவம், யு.ஏ.வி. (ஆளில்லாத விமானம்) துறையில் வளர்ச்சி, பாதுகாப்பு விண்வெளி மற்றும் எதிர்காலத் தொழில்நுட்பங்கள் போன்றவற்றில் நாட்டின் முன்னேற்றத்தை வெளிக்கொணரும் விதமாக அமையும்.
5 / 47
உலகளாவிய விநியோகச் சங்கிலியில் உள்நாட்டு குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைக்கவும், மேம்பாட்டுடன் கூடிய உற்பத்திக்காக இணைந்து செயல்படுவது தொடர்பான நடவடிக்கைகள் உட்பட வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் இந்த நிகழ்வு உதவும்.
6 / 47
ஏரோ இந்தியா 2023-இல் 80-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கிறது. ஏரோ இந்தியா 2023-இல் சுமார் 30 நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் உலகளாவிய மற்றும் இந்திய அசல் இயந்திர உற்பத்தித் துறையின் 65 தலைமைச் செயல் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7 / 47
இந்நிகழ்வு, இலகுரக போர் விமானம் (எல்.சி.ஏ)-தேஜாஸ், ஹெச்.டி.டி-40, டோர்னியர் இலகு ரக ஹெலிகாப்டர் (எல்.யு.ஹெச்), எதிர் தாக்குதலில் ஈடுபடும் இலகு ரக ஹெலிகாப்டர் (எல்.சி.ஹெச்) மற்றும் சிறப்பு வாய்ந்த இலகு ரக ஹெலிகாப்டர் (ஏ.எல்.ஹெச்) போன்ற உள்நாட்டு விமான தயாரிப்புகளின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் விதமாக காட்சிப்படுத்தப்படுகிறது.
8 / 47
ஏரோ இந்தியா 2023 கண்காட்சியில் சுமார் 100 வெளிநாட்டு மற்றும் 700 இந்திய நிறுவனங்கள் உட்பட 800க்கும் மேற்பட்ட பாதுகாப்பு நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
9 / 47
கண்காட்சியில் பங்கேற்கும் இந்திய நிறுவனங்களில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களும் அடங்கும். இது நாட்டின் முக்கிய தொழில்நுட்பங்களின் முன்னேற்றம், விண்வெளி மற்றும் பாதுகாப்பு திறன்களின் வளர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அமையும்.
10 / 47
ஏரோ இந்தியா 2023-இல் ஏர்பஸ், போயிங், டசால்ட் ஏவியேஷன், லாக்ஹீட் மார்ட்டின், இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரி, பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ், ஆர்மி ஏவியேஷன், ஹெச்.சி ரோபோடிக்ஸ், எஸ்.ஏ.ஏ.பி., சஃப்ரான், ரோல்ஸ் ராய்ஸ், லார்சன் & டூப்ரோ, பாரத் ஃபோர்ஜ் லிமிடெட், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (ஹெச்.ஏ.எல்), பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பி.இ.எல்), பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (பி.டி.எல்) மற்றும் பி.‌இ‌.எம்‌.எல் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
11 / 47
ஏரோ இந்தியா 2023-இன் கருப்பொருள் “ஒரு பில்லியன் வாய்ப்புகளுக்கான ஓடுபாதை” என்பதாகும். 80-க்கும் மேற்பட்ட நாடுகள் இதில் பங்கேற்றுள்ளன. மேலும் 800 பாதுகாப்பு நிறுவனங்கள், சுமார் 100 வெளிநாட்டு மற்றும் 700 இந்திய நிறுவனங்கள் உட்பட. ‘மேக் இன் இந்தியா, மேக் ஃபார் தி வேர்ல்ட்’ என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, உள்நாட்டு உபகரணங்கள்/தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்துதல், வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டுறவை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் இந்த நிகழ்வு கவனம் செலுத்துகிறது.
12 / 47
13 / 47
14 / 47
15 / 47
16 / 47
17 / 47
18 / 47
19 / 47
20 / 47
21 / 47
22 / 47
23 / 47
24 / 47
25 / 47
26 / 47
27 / 47
28 / 47
29 / 47
30 / 47
31 / 47
32 / 47
33 / 47
34 / 47
35 / 47
36 / 47
37 / 47
38 / 47
39 / 47
40 / 47
41 / 47
42 / 47
43 / 47
44 / 47
45 / 47
46 / 47
47 / 47

Recently Added

More From This Category

x