இயந்திரமாக சுழலும் ரயில்வே கூட்ஸ்ஷேட் தொழிலாளர்கள்..! - புகைப்படத் தொகுப்பு
Published on : 21 Jan 2023 20:05 pm
1 / 9
நெல்மணிகளை அரிசியாக மாற்றும் பயணத்தின் பின்னணியில் பலரின் உழைப்பு கலந்திருக்கிறது. இதில் இவர்களின் கரங்களுக்கு முக்கியமான பணி இருக்கிறது. | படங்கள் - ஆர். வெங்கடேஷ்.
2 / 9
நாம் அன்றாடம் உணவாகப் பயன்படுத்தும் அரிசி முதலில் மண்ணில் நெல் விதையாகப் புதைந்து, இயற்கையின் அருள் பெற்று முளைத்து மண்ணை முட்டி மோதி, பயிராக வளர்ந்து, பூத்து, நெல் மணியாக வளர்ந்து அரிசியைத் தருகிறது.
3 / 9
3 முதல் 5 மாதங்கள் வரை பிள்ளையை வளர்ப்பது போல் வளர்த்து, இயற்கை இடர்களுடன் போராடி சாகுபடி செய்து நெல் மணிகளை நெல் மூட்டைகளாக்கி லாரியில் ஏற்றி ஆலைக்கு அனுப்பப்படுகிறது.
4 / 9
ஆலையில் நெல், அரிசியாக உருமாறுகிறது. அது மாநிலம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளின் மூலம் மக்களுக்குக் கிடைக்க வேண்டுமானால், முதலில் நெல் மூட்டைகளாக இவர்கள் கைகளுக்கு வர வேண்டும்.
5 / 9
யார் இவர்கள்?. விவசாயிகளின் வேர்வைக்கு மேலும் உறுதுணையாக இருந்து கைரேகை மறைந்து போக உழைத்து, திசையெங்கும் நெல், அரிசியை ரயில் மூலம் கொண்டு சேர்க்கும் ரயில்வே கூட்ஸ்ஷேட் தொழிலாளர்கள்.
6 / 9
நெல் உற்பத்தியில் முக்கிய மாவட்டமான தஞ்சாவூரிலிருந்து எடுத்துச் செல்லப்படும் நெல் மூட்டைகள் இவர்களின் மூட்டை தூக்கும் ஊக்கினால் நிச்சயம் துளையிடப்பட்டே செல்லும்.
7 / 9
வெயில், மழை, பனி, இரவு, பகல் என்று பாராது வேலை செய்து கொண்டே இருக்கும் மூட்டை தூக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின், லட்சக்கணக்கான வியர்வைத் துளிகளோடு நெற்களஞ்சியத்திலிருந்து மற்ற பகுதிக்கு நெல்லை பயணிக்க வைக்கும் நிகழ்வோடு கலந்த காட்சிகள் நிறைந்த புகைப்படத் தொகுப்பு.
8 / 9
9 / 9