1 / 31
சென்னையில் திங்கள்கிழமை இரவு தொடங்கி விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. | படங்கள்: எம்.வேதன், ஆர்.ரவீந்திரன், பி.வேளாங்கண்ணி ராஜ், எம்.கருணாகரன், ஜோதி ராமலிங்கம், ஸ்ரீனிவாசன்
2 / 31
சென்னை கனமழைக்கு திங்கள்கிழமை 2 பேர் பலியாகினர். புளியந்தோப்பில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் ஒருவரும், வியாசர்பாடியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மின்சாரம் தாக்கி மரணம் அடைந்தார்.
3 / 31
எழும்பூர் தமிழ் சாலை, நுங்கம்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, பாரிமுனை, வடபழனி, மயிலாப்பூர் முசிறி சுப்ரமணியன் சாலை, கோயம்பேடு உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் சாலைகளில் ஓடும் மழை நீரில் வாகனங்களை இயக்க முடியாமல், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
4 / 31
தமிழகத்தில் பரவலாக அடுத்த 5 நாட்களுக்கு கனமழையும், சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5 / 31
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து நேற்று (அக். 31) முதல் இன்று (நவ.1) மாலை சராசரியாக சென்னையில் மட்டும் 13.37 செ.மீ. மழை பெய்துள்ளது.
6 / 31
திரு.வி.க.நகர் பகுதியில் 23.56 செ.மீ, திருவொற்றியூரில் 21.02 செ.மீ, கத்திவாக்கத்தில் 20.85 செ.மீ. மழை பெய்து உள்ளது.
7 / 31
கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 6 மற்றும் 7ம் தேதி அதிகபட்சமாக 12.52 செ.மீ., மழை பெய்தது. அதை விட சற்று அதிகமாக இந்த ஆண்டு மழை பெய்துள்ளது.
8 / 31
கே.கே. நகர், அசோக் நகர் 6வது அவென்யூ, ஜி.பி. சாலை, புளியந்தோப்பு டிகாஸ்டர் சாலை, டிமெல்லோஸ் சாலை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, பட்டாளம், சூளைமேடு, உள்ளிட்ட சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
9 / 31
சென்னையில் 17 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளது. இதில் 15 மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. 2 இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதிக அளவு தண்ணீர் தேங்கிய 10-க்கு மேற்பட்ட இடங்களில் மோட்டார் பம்புகளை கொண்டு தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
10 / 31
கணேசபுரம் சுரங்கப்பாதை மற்றும் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்து. இதன் காரணமாக அம்பேத்கர் கல்லூரி சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
11 / 31
கடந்த ஆண்டுகளில் அதிகளவில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் இந்த ஆண்டு தற்போது வரை பெரிய அளவில் மழைநீர் தேங்கவில்லை. இதற்கு, சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் வாயிலாக, 277.04 கோடி ரூபாய் மதிப்பில் 60.83 கி.மீ., நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்ட வடிகால் பணிகள் கைகொடுத்துள்ளது.
12 / 31
மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, தலைமைப் பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை அனைவரும் வீட்டிற்கு செல்லாமல் இரவு முழுவதும் தொடர்ந்து பணியாற்றினர். பல்வேறு இடங்களில் பணியாளர்களுடன், அந்தந்த வார்டு கவுன்சிலர்களும் மழைநீர் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
13 / 31
காய்ச்சல் மற்றும் உடல் உபாதைகளால் பாதிக்கப்படுவோர் 1913 என்ற உதவி எண்ணை தொடர்பு கொண்டால், வீடுகளுக்கு வந்த சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை மேயர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
14 / 31
சென்னையில் புதிதாக தண்ணீர் தேங்கிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் தெரிவித்தனர். முன்னதாக, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் அமைந்துள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையினை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
15 / 31
கடந்த ஆண்டு தண்ணீர் தேங்கிய இடங்களில் வடிகால் பணிகள் நடைபெற்றதால் இந்த ஆண்டு மழைநீர் அதிகம் தேங்கவில்லை என்றும், மழைநீர் வடிகால் இல்லாத இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்தப் பகுதிகளில் மோட்டார்கள் கொண்டு மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது என்றும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.
16 / 31
சென்னையில் மழை நீரால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ளும் வகையில், 1913 என்ற உதவி எண்ணை அறிவித்துள்ளது. இந்த எண்ணில் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம்.
17 / 31
சென்னை மாநகராட்சியில் உள்ள வெள்ளத்தடுப்பு கட்டுப்பாட்டு அறையை 044-25619206, 044-25619207 மற்றும் 044-25619208 என்ற தொலைபேசி வழியாகவும் தொடர்புகொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
18 / 31
சென்னை மாநகராட்சியின் "நம்ம சென்னை செயலி" மற்றும் மாநகராட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தின் வாயிலாகவும் பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
19 / 31
வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வு மேற்கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பருவமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
20 / 31
“சிறு தவறு என்றாலும் பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதையும், சிறு உதவி என்றாலும், அது பெரிய நல்ல பெயரையும் ஏற்படுத்தும் என்பதையும் யாரும் மறந்துவிட வேண்டாம்” என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
21 / 31
கழிவுநீர் அடைப்பு, கழிவுநீர் தேக்கம், மழைநீர் அகற்றும் பணிகளை சீர் செய்யும் வகையில் 2000 களப்பணியாளர்கள் 24 மணி நேரமும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று சென்னை குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
22 / 31
23 / 31
24 / 31
25 / 31
26 / 31
27 / 31
28 / 31
29 / 31
30 / 31
31 / 31