பேசும் படங்கள்... (07.07.2021)
Published on : 07 Jul 2021 19:00 pm
1 / 8
வேலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் ஜுனியர் ரெட்கிராஸ் சார்பில் காட்பாடி கழிஞ்சூர் பகுதியில் கரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதனை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தொடங்கி வைத்தார். அருகில், மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி, மாவட்ட கல்வி அமைப்பாளர் ஜெனார்த்தனன் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்.
2 / 8
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. அருகில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், உதவி ஆட்சியர் ஐஸ்வர்யா, இணை இயக்குநர் சுகாதார பணிகள் யாஸ்மின், சுகாதார பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்.
3 / 8
வேலூர் அண்ணா சாலையோரம் தள்ளுவண்டி பழக்கடையில் விற்பனைக்கு குவிந்துள்ள லம்டான் பழம், மங்குஸ் தான், ஊட்டி ஆப்பிள், தண்ணீர் கொய்யா, முள் சீத்தாப்பழம், டிராகன் பழம், பேரிச்சம் பழங்கள். கிலோ 200 முதல் 600 வரை விற்பனை செய்யப்படுகிறது. படம்: வி.எம்.மணிநாதன்.
4 / 8
வைகை ஆற்று 50வது வார்டு பகுதியில் வாய்க்கால் சுத்தப்படுத்தும் பணியை தெற்கு தொகுதி எம்எல்ஏ பூமிநாதன் தொடங்கி வைத்தார். படம்; எஸ் கிருஷ்ணமூர்த்தி
5 / 8
மதுரை பழங்காநத்தம் ஆர் சி தெருவில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி எந்திரத்தின் மூலம் இடித்தார்கள். படம் ;எஸ். கிருஷ்ணமூர்த்தி
6 / 8
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தையொட்டி நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். படம்: வி.எம்.மணிநாதன்.
7 / 8
வெப்பச்சலனம் காரணமாக, வேலூரில் இன்று மாலை 30 நிமிடத்திற்கு மேலாக லேசான மழை பெய்தது. இதில், நனைந்தபடியே வாகனம் ஓட்டி சென்ற மக்கள். படம்: வி.எம்.மணிநாதன்.
8 / 8
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து குடிநீர் திட்டத்திற்கான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். படம் ;எஸ். கிருஷ்ணமூர்த்தி