பேசும் படங்கள்... (02.07.2021)
Published on : 02 Jul 2021 19:09 pm
1 / 7
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட குருமலை உள்ளிட்ட மலை கிராமத்தில் அடிப்படை வசதிகளை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்து மக்களிடம் குறைகளை கேட்டார். அருகில், கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா உள்ளிட்ட அரசு அலுவலர்கள். படம்: வி.எம்.மணிநாதன்.
2 / 7
காட்பாடி ரயில்வே மேம்பாலம் புதுப்பித்தல் தொடர்பான துறை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில்
நடைபெற்றது. அருகில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன். படம்: வி.எம்.மணிநாதன்.
3 / 7
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி மாநகராட்சிக்கு உட்பட்ட 13 வார்டுகள் மின்சாரம் தண்ணீர் கோடுகள் போன்றவை ஏற்படுத்த வேண்டும் என்று திருப்பரங்குன்றம் தொகுதி ராஜன் செல்லப்பா எம்எல்ஏ மதுரை மாநகராட்சி ஆணையர் அவர்களிடம் மனு அளித்தார். படம்; எஸ். கிருஷ்ணமூர்த்தி
4 / 7
மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் இயங்கிக் கொண்டிருந்த இதயம் அறக்கட்டளை கிளை அலுவலகத்தை மாவட்ட ஆட்சியில் உள்ள அதிகாரிகள் பூட்டினார்கள். படம் ;எஸ். கிருஷ்ணமூர்த்தி
5 / 7
மதுரை தியாகராஜர் இன்ஜினியரிங் காலேஜில் நடைபெற்ற மின் வினியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மின்வாரியத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. படம் ;எஸ். கிருஷ்ணமூர்த்தி
6 / 7
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த சாலையோர சிறு வியாபாரிகள் சங்கத்தினர் கோவில்களை மீண்டும் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்கள். படம் ;எஸ். கிருஷ்ணமூர்த்தி
7 / 7
மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியில் விஷால் டி மால் அருகே பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் மிக அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. படம் ;எஸ். கிருஷ்ணமூர்த்தி