பேசும் படங்கள்... (29.06.2021)
Published on : 29 Jun 2021 21:08 pm
1 / 7
வேலூர் சாரதி மாளிகை வணிக வளாகம், நேதாஜி மார்க்கெட்டை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில், கோட்டாட்சியர் விஷ்ணுப்ரியா, மாநகராட்சி ஆணையர் சங்கரன் மற்றும் வணிகர்கள். படம்: வி.எம்.மணிநாதன்.
2 / 7
வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் பிரச்சினைகள் சரிசெய்தல் குறித்து மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்களுடன் ஆலோசனை கூட்டம் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. அருகில், மாநகராட்சி ஆணையர் சங்கரன் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்.
3 / 7
மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் நீர் தேங்கி உளளதால் பாசம் பிடித்து துர்நாற்றம் வீசுகிறது. படம் ;எஸ். கிருஷ்ணமூர்த்தி
4 / 7
இந்து இளைஞர் முன்னணி சார்பாக ஆன்லைன் விளையாட்டுகள் ரத்து செய்யக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. படம் ;எஸ். கிருஷ்ணமூர்த்தி
5 / 7
கோவையில் தற்போது வழக்கத்துக்கு மாறாக வெயில் கொளுத்தி வருகிற நிலையில் கோவை வ.உ.சி. பூங்கா உயிரியல் பூங்காவில் இந்த காகங்களோ குழாயில் வரும் சொட்டு நீருக்காக சண்டை போட்டுக்கொள்ளும் காக்கைகள். படம்:ஜெ.மனோகரன்
6 / 7
அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்திட வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாதம் ரூ.7.500 வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலூர் அடுத்த பாகயம் பகுதி பேருந்து நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம், சிபிஐ மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர். படம்: வி.எம்.மணிநாதன்.
7 / 7
வேலூர் கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் சிப்பாய் புரட்சியை ஓவியங்கள் மூலம் விளக்கும் வகையில் நடைபெற உள்ள கண்காட்சிக்காக கொண்டுவரப்பட்டுள்ள ஓவியங்களின் டிஜிட்டல் பேனர்கள். படம்: வி.எம்.மணிநாதன்.