1 / 57
போக்குவரத்து ஊழியர்களின் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை ஆக்கபூர்வமான முறையில் நடத்தக் கோரி... அனைத்து தொழிற்சங்கk கூட்டமைப்பு சார்பில்... சென்னை - பல்லவன் இல்லம் முன்பு இன்று (7.1.2021) காத்திருப்புப் போராட்டம் நடைப்பெற்றது. இதில் - தொமுச தலைவர் கி.நடராஜன், சிஐடியு தலைவர் கே.ஆறுமுகநயினார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
படம்: ம.பிரபு
2 / 57
14-வது ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலிறுத்தி... அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில்... திருச்சி மண்டல தலைமை அலுவலகம் முன்பு இன்று (7.1.2021) காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்றது.
படம்: ஜி.ஞானவேல்முருகன்
3 / 57
வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி... திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து இன்று (7.1.2021) ஊர்வலமாக வந்து மாநகராட்சி அலுவலகத்தை பாமகவினர் முற்றுகையிட்டனர்.
படம்: ஜி.ஞானவேல்முருகன்
4 / 57
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக தாம்பரம் அருகே வரதராஜபுரம் பகுதி சாலை மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர்.
படங்கள்: எம்.முத்துகணேஷ்
5 / 57
6 / 57
7 / 57
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்து 3 நாட்களாக தொடர்ந்து பெய்து வந்த கனமழையின் காரணமாக... தற்போது (6.1.2021) தாம்பரம் அருகே மணிமங்கலம் - வரதராஜபுரம் பிடிசி காலனிப் பகுதியில் சூழ்ந்துள்ள மழைநீர்.
படங்கள்: எம்.முத்துகணேஷ்
8 / 57
9 / 57
10 / 57
11 / 57
சென்னை மற்று புறநகர் பகுதிகளில் கடந்த இரு நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக முடிச்சூரை அடுத்த வரதராஜபுரம், பரத்வாஜ புரம் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இப்பகுதி குடியிருப்புவாசிகள் முழங்கால் அளவு மழைநீரில் நடந்து செல்கின்றனர். மேலும் - மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மின்மோட்டார் மூலம் நீரை வெளியேற்றி வருகின்றனர்.
படங்கள்: எம்.முத்துகணேஷ்
12 / 57
13 / 57
14 / 57
15 / 57
16 / 57
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து... புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில்... மதுரை - பழங்காநத்தம் பகுதியில் நேற்று (6.1.2021) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
17 / 57
18 / 57
19 / 57
சென்னையில் நேற்று (6.1.2021) பெய்த கனமழை காரணமாக ஜி.என்.செட்டி சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் வாகனங்கள் சிரமப்பட்டு சென்றன.
படங்கள் : ம.பிரபு
20 / 57
21 / 57
22 / 57
23 / 57
24 / 57
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்து இரு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில்... நேற்று (6.1.2021)தலைமைச் செயலகம் அமைந்துள்ள சாலையில் சிரமப்பட்டு செல்லும் வாகனங்கள்.
படங்கள்: ம.பிரபு
25 / 57
26 / 57
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரு நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில்... மெரினா கடற்கரையில் மணற்பகுதியில் தேங்கியிருக்கும் மழைநீர்.
படம்: ம.பிரபு
27 / 57
கிராம உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,809 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து... தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில்... மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று (7.1.2021) காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
28 / 57
கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதையொட்டி... வைகை ஆற்றில் தற்போது (7.1.2021) கரைபுரண்டு தண்ணீர் செல்கிறது.
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
29 / 57
போக்குவரத்துத் தொழிலாளர்களின் 14 -வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக அரசு தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து... இன்று (7.1.2021) மதுரை - பைபாஸ் சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு அனைத்து போக்குவரத்துக் கழகச் சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
30 / 57
புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் துணைநிலை ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்... ஆளுநர் மாளிகையைச் சுற்றிலும் மூன்று அடுக்கு பாதுகாப்புப் பணியில் மத்திய பாதுகாப்புப் படையினர் இன்று (7.1.2021) ஈடுபட்டுள்ளனர்.
படன்கள்: எம்.சாம்ராஜ்
31 / 57
32 / 57
33 / 57
34 / 57
புதுச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரு நாட்களாக தொடர்ந்து பெய்துவந்த கனமழையின் காரணமாக இன்று (7.1.2021)ஆரோவில் பகுதி கிழக்குக் கடற்கரை சாலையில் குளம் போல் தேங்கியுள்ள மழை நீரை கடந்து செல்லும் வாகனங்கள்.
படங்கள்: எம்.சாம்ராஜ்
35 / 57
36 / 57
சென்னை மாநகராட்சி சார்பில் முக்கிய பாலங்களுக்கு கீழ் வெர்டிக்கல்
பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது சென்னை தி. நகர் பனகல் பார்க் மேம்பாலத்துக்கு கீழ் அமைக்கப்பட்ட செடிகள் வானிலை மாற்றம் மற்றும் பராமரிப்பு காரணமாக நன்கு வளர்ந்து பசுமையாக காட்சியளிக்கிறது படம் பிரபு
37 / 57
38 / 57
39 / 57
40 / 57
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக - செம்பாக்கம் ஏரி முழுமையாக நிரம்பி, அதன் உபரிநீர் நன்மங்களம் ஏரிக்கு செல்கிறது. இந்நிலையில் நன்மங்களம் ஏரிக்கு நீர் செல்லும் கால்வாய் குறுகலாக இருப்பதால்... ஏரி நீர் அஸ்தினாபுரம் - திருமலை நகர் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்தது. இதன் காரணமாக இப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.
இதைத் தொடர்ந்து கால்வாய் நீர் குடியிருப்புக்குள் செல்லும் ஓரிடத்தில் நகராட்சியினர் மணல் மூட்டையை அடுக்கி வெள்ளத்தை தடுத்தனர். செம்பாக்கம் ஏரியில் இருந்து நன்மங்களம் ஏரிக்கு நீர்வரத்து கால்வாயை அகலப்படுத்தினால்தான் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என இப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
படங்கள்: எம்.முத்துகணேஷ்
41 / 57
42 / 57
43 / 57
44 / 57
45 / 57
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த இரு நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக.... மாடம்பாக்கத்தை அடுத்த அகரம் தென் பெரிய ஏரி நிரம்பி வழிகிறது. இந்த ஏரியில் இருந்து வழிந்தோடும் உபரிநீர் சித்தாலபாக்கம் ஏரிக்கு சென்று அந்த ஏரியை நிரப்பி வருகிறது.
படங்கள்: எம்.முத்துகணேஷ்
46 / 57
47 / 57
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த இரு நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக.... மாடம்பாக்கத்தை அடுத்த அகரம் தென் பெரிய ஏரி நிரம்பி வழிகிறது . இந்நிலையில் - வேகமாக ஓடும் தண்ணீரின் ஆபத்தை உணராமல் பாலத்தை கடக்கும் மூதாட்டி மற்றும் சிறுவர்கள்.
படங்கள்: எம்.முத்துகணேஷ்
48 / 57
49 / 57
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் சமுதாயத்துக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி... பாமகவினர் சென்னையை அடுத்த பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் இன்றி (7.1.2021) ஆர்பாட்டம் செய்தனர். இதில் ஏராளமான வன்னிய சமுதாயப் பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கமிட்டனர்.
படங்கள்: எம்.முத்துகணேஷ்
50 / 57
51 / 57
52 / 57
சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் அமைந்துள்ள குடிசை மாற்று வாரிய சுனாமி குடியிருப்பு மற்றும் ஜவஹர் நகர் பகுதி முழுவதும் தற்போது (7.1.2021) மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
படங்கள்: எம்.முத்துகணேஷ்
53 / 57
54 / 57
55 / 57
56 / 57
57 / 57