Published on : 05 Jan 2021 18:42 pm

பேசும் படங்கள்... (05.01.2021)

Published on : 05 Jan 2021 18:42 pm

1 / 76
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக.... இன்று (5.1.2021) தாம்பரம் பகுதிகளில் போக்குவரத்தும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் ஸ்தம்பித்தது. படங்கள்: எம்.முத்துகணேஷ்
2 / 76
3 / 76
4 / 76
5 / 76
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக.... இன்று (5.1.2021) சிட்லபாக்கம் பிரதான சாலையில் தேங்கிய மழை நீரில் வாகனங்கள் மிதந்து சென்றன. படங்கள்: எம்.முத்துகணேஷ்
6 / 76
7 / 76
8 / 76
9 / 76
புதுச்சேரியில் கடந்த இரு நாட்களாக மிதமான மழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில்.... இன்று (5.1.2021) புதுச்சேரி - கடற்கரை சாலையில் வானம் கருமேக மூட்டத்துடன் காணப்பட்டது. படங்கள்: எம்.சாம்ராஜ்
10 / 76
11 / 76
புதுச்சேரியில் கடந்த இரு நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் மிதமான மழை காரணமாக... இன்று (5.1.2021) புதுச்சேரி - தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் வானம் கருமேக மூட்டத்துடன் காணப்பட்டது. படம்: எம்.சாம்ராஜ்
12 / 76
புதுச்சேரியில் கடந்த இரு நாட்களாக தொடர்து பெய்துவரும் மிதமான மழையின் காரணமாக சாலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி - கிழக்கு கடற்கரை சாலை முதலியார்பேட்டை பகுதியில் உள்ள சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. உடனடியாக இச்சாலைகளை பொதுப்பணித் துறை அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். படங்கள்: எம்.சாம்ராஜ்
13 / 76
14 / 76
15 / 76
16 / 76
சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த இரு நாட்களாக தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (5.1.2021) பெருங்களத்தூர் பகுதியில் தேங்கியிருக்கும் மழைநீரில் செல்லும் வாகனங்கள். படங்கள்: எம்.முத்துகணேஷ்
17 / 76
18 / 76
19 / 76
20 / 76
21 / 76
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு.... புதுச்சேரியில் மீண்டும் நேற்று (4.1.2021) முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில்... புதுச்சேரி லப்போர்த் வீதியில் உள்ள எக்கோல் அரசு தொடக்கப் பள்ளிக்கு வந்திருந்த மாணவ - மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் மூகக்கவசம் கொடுத்து வரவேற்கும் ஆசிரியர்கள். படங்கள்: எம்.சாம்ராஜ்
22 / 76
23 / 76
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு.... புதுச்சேரியில் மீண்டும் நேற்று (4.1.2021) முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில்... புதுச்சேரி லப்போர்த் வீதியில் உள்ள எக்கோல் அரசு தொடக்கப் பள்ளிக்கு வந்திருந்த மாணவர்களுக்கு உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்யும் ஆசிரியர். படம்: எம்.சாம்ராஜ்
24 / 76
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு.... புதுச்சேரியில் மீண்டும் நேற்று (4.1.2021) முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில்... புதுச்சேரி லப்போர்த் வீதியில் உள்ள எக்கோல் அரசு தொடக்கப் பள்ளியில் முதல்நாள் ஓரு சில மாணவர்களே வந்திருந்ததால்... வகுப்பறையில் இருக்கைள் காலியாக இருந்தன. படங்கள்: எம்.சாம்ராஜ்
25 / 76
26 / 76
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு.... புதுச்சேரியில் மீண்டும் நேற்று (4.1.2021) முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில்... புதுச்சேரி லப்போர்த் வீதியில் உள்ள எக்கோல் அரசு தொடக்கப் பள்ளிக்கு வந்திருந்த மாணவ - மாணவிகளுக்கு மூகக்கவசத்துடன் வகுப்பு எடுக்கும் ஆசிரியர். படம்: எம்.சாம்ராஜ்
27 / 76
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு.... புதுச்சேரியில் மீண்டும் நேற்று (4.1.2021) முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில்... புதுச்சேரி லப்போர்த் வீதியில் உள்ள எக்கோல் அரசு தொடக்கப் பள்ளிக்கு வந்திருந்த மாணவர்களை வரவேற்கும் விதமாக பள்ளியில் வாழை மரங்கள், கலர் பலுன்கள் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. படங்க: எம்.சாம்ராஜ்
28 / 76
29 / 76
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து முதல்வர் நாராயணசாமி .. ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். இப்போராட் டத்துக்கு அனுமதியளிக்கக் கூடாது எனக் கூறி... நேற்று (4.1.2021) புதுச்சேரி - தலைமைச்செயலரை சந்தித்து மனு அளிக்க வந்த புதுச்சேரி மேற்கு மாநில அதிமுக கழகச் செயலர் ஓம்சக்தி சேகர். படங்கள்: எம்.சாம்ராஜ்
30 / 76
31 / 76
பொங்கல் திருநாளை முன்னிட்டு விரைவில் மதுரை - பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள பகுதியில் மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் நேற்று (4.1.2021) ஆய்வு மேற்கொண்டார். படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
32 / 76
33 / 76
பொங்கல் திருநாளை முன்னிட்டு விரைவில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள நிலையில்... ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான வழக்குகளை ரத்து செய்யக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டக் குழு சார்பில் நேற்று (4.1.2021) மனு கொடுக்கப்பட்டது. இதே போல் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும் இக்குழுவினர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
34 / 76
தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் நேற்று முதல் (4.1.2021) பொங்கல் பரிசு தொகுப்புப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. சென்னை புழுதிவாக்கம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள நியாய விலைக் கடையொன்றில் பொங்கல் தொகுப்புப் பொருள்களை வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள். படங்கள்: எம்.முத்துகணேஷ்
35 / 76
36 / 76
37 / 76
38 / 76
39 / 76
தமிழக அரசின் பொங்கல் பரிசான ரு 2,500 பணம் மற்றும் அரிசி, சர்க்கரை, கரும்பு உட்பட பரிசு தொகுப்புப் பொருட்களை... நேற்று (4.1.2021) சென்னை அயனாவரம் நியாய விலைக்கடையொன்றில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றனர். படங்கள்: ம.பிரபு
40 / 76
41 / 76
42 / 76
43 / 76
44 / 76
45 / 76
46 / 76
சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று (4.1.2021) சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிராமாணம் செய்து, அதற்கான உத்தரவை வழங்கினார். உடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலர் சண்முகம் . மேலும் இந்நிகழ்ச்சியில் .தலைமை நீதிபதியாக பதவியேற்கும் சஞ்சீப் பானர்ஜியின் குடும்பத்தினர். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அமைச்சர்கள், காவல் துறை அதிகாரிகள் உடனிருந்தனர் படங்கள்: ம.பிரபு.
47 / 76
48 / 76
49 / 76
50 / 76
51 / 76
சென்னையில் கடந்த இரு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக... இன்று (5.1.2021) பாடி மேம்பாலத்தின்கீழ் மழைநீர் தேங்கியுள்ளதால்... இப்பகுதியில் ஊர்ந்து செல்லும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. படங்கள்: ம.பிரபு
52 / 76
53 / 76
54 / 76
சென்னையில் கடந்த இரு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக - குரோம்பேட்டை அரசு மருத்துவமனையின் முன்பு சாலையை ஆக்கிரமித்து தேங்கியுள்ள மழைநீர். இதனால் இப்பகுதியில் செல்லும் வாகனங்களும் பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகினர். படங்கள்: எம்.முத்துகணேஷ்
55 / 76
56 / 76
57 / 76
58 / 76
59 / 76
சென்னையில் கடந்த இரு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் தொடர் மழை காரணமாக தாம்பரம் பகுதியில் உள்ள நெஞ்சக மருத்துவமனை வளாகத்தில் (சானட்டோரியம்) மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் இம்மருத்துவமனைக்கு வரும் வெளிநோயாளிகளும், மருத்துவமனை ஊழியர்களும், பொதுமக்களும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். படங்கள்: எம் முத்துகணேஷ்
60 / 76
61 / 76
62 / 76
63 / 76
64 / 76
65 / 76
கரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நடைப்பெற்று வரும் நிலையில்.... தற்போது (5.1.2021) தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்துக்கு சொந்தமான அண்ணா நகர் குளிர் பதனக் கிடங்கில் கரோனா தடுப்பூசி மருந்துகளை சேமித்து வைக்கும் வகையில்... இந்தக் குளிர் கிடங்கை தயார் செய்யும் ஊழியர். தமிழ் நாட்டிலேயே மிகப்பெரிய மருந்து சேமிப்பு கிடங்கான இந்த கிடங்கில்தான் கரோனா தொற்றுக்காக சுகாதாரத் துறை சார்பில் வழங்கப்பட்ட அனைத்து மருந்து மாத்திரைகளும் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. படங்கள்: ம.பிரபு
66 / 76
67 / 76
68 / 76
சென்னையில் - கடந்த இரு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்று (5.1.2021) சென்னை - சாந்தோம் நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரில் செல்லும் வாகனங்கள். படங்கள்: பு.க.பிரவீன்
69 / 76
70 / 76
சென்னையில் - கடந்த இரு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்று (5.1.2021) சென்னை மெரினா கடற்கரையின் சர்வீஸ் சாலையில் தேங்கியிருக்கும் மழை வெள்ளம். படங்கள்: பு.க.பிரவீன்
71 / 76
72 / 76
சென்னையில் - கடந்த இரு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்று (5.1.2021) சென்னை சிட்கோ தொழிற்பேட்டையின் தெற்கு பகுதி சாலையில் தேங்கியிருக்கும் மழை வெள்ளம். படங்கள்: பு.க.பிரவீன்
73 / 76
74 / 76
75 / 76
76 / 76

Recently Added

More From This Category

x