Published on : 31 Dec 2020 21:47 pm

பேசும் படங்கள்... (31.12.2020)

Published on : 31 Dec 2020 21:47 pm

1 / 28
கடந்த 10 மாதங்களுக்கு மேலாக ’கரோனா’ தொற்றின் பிடியில் சிக்கித் தவித்த மக்கள் தற்போதுதான் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் - நாளை ஆங்கிலப் புத்தாண்டை புத்தாடை உடுத்தி சிறப்பாக கொண்டாட...2020 -ம் ஆண்டின் கடைசி நாளான இன்று (31.12.2020) சென்னை - தியாகராய நகர் ரெங்கநாதன் தெருவில் ஆடைகள் வாங்க குவிந்திருந்த பொதுமக்கள். படங்கள்: க.ஸ்ரீபரத்
2 / 28
3 / 28
4 / 28
பணி ஆணையை உறுதி செய்யக் கோரி... புதுச்சேரி அரசுப் பணியாளர் நலக் கூட்டமைப்பு சார்பில் இன்று (31.12.2020) புதுச்சேரி அண்ணா சாலையின் முன்பு போராட்டம் நடைபெற்றது. படங்கள்: எம்.சாம்ராஜ்
5 / 28
6 / 28
புதுச்சேரியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் பணியில் காவல் துறையினருடன் இணைந்து என்.சி.சி மாணவர்களையும் ஈடுபடுத்துவது குறித்து இன்று (31.12.2020) போக்குவரத்து போலீஸாருடன் கலந்துரையாடும் காவல் துறை அதிகாரி ராகுல் அல்வால் . படங்கள்: எம்.சாம்ராஜ்
7 / 28
8 / 28
9 / 28
புதுச்சேரி கடற்கரை சாலை மற்றும் காந்தி திடலின் முன்பு ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடுவற்காகக் கூடும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் இன்று (31.12.2020) இப்பகுதிகளில் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. படங்கள்: எம்.சாம்ராஜ்
10 / 28
11 / 28
12 / 28
சென்னையில் ஜார்ஜ் டவுன் அம்மன் கோயில்ல் தெருவில் திமுகவின் சார்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம் இன்று (31.12.2020) தயாநிதி மாறன் தலைமையில் நடந்தது. படங்கள்: பு.க.பிரவீன்
13 / 28
14 / 28
15 / 28
16 / 28
சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனமும் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககமும் இணைந்து... ’தமிழும் தமிழ் மருத்துவமும்’ என்கிற விழிப்புணர்வு விழா மற்றும் ’சித்தர் திருநாள்’ விழாவை இன்று (31.12.2020) நடத்தின. இதில் இரண்டு நிறுவனங்களும் தனித்தமிழ் சொற்களுடன் தமிழ் மருத்துவச் சொற்களை இணைப்பது தொடர்பாக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. படங்கள்: எம்.முத்துகணேஷ்
17 / 28
18 / 28
19 / 28
சென்னை - பெசன்ட் நகர் எலியர்ட்ஸ் கடற்கரை சாலையில் இன்று ( 31.12.2020) காலை 6 மணி முதல் (2. 1. 2021) காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. படங்கள் : பு.க.பிரவீன்.
20 / 28
21 / 28
22 / 28
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி புதுச்சேரிக்குள் புத்தாண்டை கொண்டாட வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வருவோரால்... புதுச்சேரியில் எல்லா சாலைகளிலும் இன்று (31.12.2020) மதியத்தில் இருந்தே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. படம்: எம்.சாம்ராஜ்
23 / 28
24 / 28
2021 புத்தாண்டை உற்சாகமாக வரவேற்கும் வகையில் கல்லூரி மாணவிகள் தங்கள் முகங்களில் வண்ணங்களை தீட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். படங்கள்: வி.எம்.மணிநாதன்
25 / 28
26 / 28
27 / 28
28 / 28

Recently Added

More From This Category

x