பேசும் படங்கள்... (30.12.2020)
Published on : 30 Dec 2020 21:04 pm
1 / 11
அவதூறு வழக்கு தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் நீதிமன்றத்தில் இன்று (30.12.2020) தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆஜரானார்.
படம் : ம.பிரபு
2 / 11
3 / 11
சென்னை - பல்லாவரம் ரேடியல் சாலை அருகே அமைந்துள்ள புத்தேரி ஏரி,,, சமூக ஆர்வலர்களால் 2 ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரி சீரமைக்கப்பட்டது, அந்த ஏரியில் தற்போது நீர் நிரம்பி பொலிவுடன் காட்சியளிக்கிறது. குளத்தை சீரமைத்த சமூக ஆர்வலர்களை ‘இந்து தமிழ்’ நாளிதழ் பாராட்டி கட்டுரை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
4 / 11
5 / 11
6 / 11
சென்னை - பல்லாவரம் ரேடியல் சாலை அருகே உள்ள புத்தேரி ஏரி.. சமூக ஆர்வலர்களால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரி சீரமைக்கப்பட்டு பொலிவுடன் காணப்பட்டபோது எடுத்த புகைப்படம் இது. அப்போது இந்த ஏரியை சீரமைத்த சமூக ஆர்வலர்களை ‘இந்து தமிழ்’ நாளிதழ் பாராட்டி கட்டுரை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏரியின் இன்றைய நிலைமை என்ன தெரியுமா... அடுத்த படத்தை பாருங்கள்.... தெரியும்.
7 / 11
சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையையொட்டி அமைந்துள்ள புத்தேரி ஏரியின் இன்றைய நிலைதான் இது. இந்த ஏரியில் சிலர் திடீரென அதிகளவில் குப்பைகளை கொட்டி நிரப்ப முயற்சித்தனர். இதை அறிந்த இப்பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதை அடுத்து... தற்போது (30.12.2020) போலீஸாரும் நகராட்சி அதிகாரிகளும் விரைந்து வந்து ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்களை சமாதானம் செய்ததுடன்... நகராட்சி ஊழியர்களைக் கொண்டு ஏரியில் இருந்து குப்பைகளை அகற்றும் பணியையும் தொடங்கி வைத்தனர்.
படங்கள்: எம்.முத்துகணேஷ்
8 / 11
9 / 11
10 / 11
சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையையொட்டி அமைந்துளள புத்தேரி ஏரியின் இன்றைய நிலைதான் இது. இந்த ஏரியில் சிலர் திடீரென அதிகளவில் குப்பைகளை கொட்டி நிரப்ப முயற்சித்தனர். இதை அறிந்த இப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் இன்று ( 30.12.2020) அங்கு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படங்கள்: எம்.முத்துகணேஷ்
11 / 11