பேசும் படங்கள்... (18.12.2020)
Published on : 18 Dec 2020 18:45 pm
1 / 18
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளையொட்டிய பார்களை உடனடியாகத் திறக்கக் கோரி... தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் இன்று (18.12.2020) சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படம்: ம.பிரபு
2 / 18
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி... திருச்சி வயலூர் சாலையில் இன்று (18.12.2020) மாட்டு வண்டி மற்றும் டிராக்டர்களில் பேரணியாகச் சென்று சோமரசம் பேட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சமூக நீதிப் பேரவை உள்ளிட்ட விவசாய அமைப்புகள்.
படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்
3 / 18
4 / 18
5 / 18
6 / 18
திருச்சி - புதுக்கோட்டை சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அகற்றப்படவுள்ள தங்கள் குடியிருப்புகளுக்கு மாற்றாக தாங்கள் குறிப்பிடும் இடத்தில் நிலம் வழங்க வேண்டி.... இன்று (18.12.2020) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நகர் குடியிருப்புவாசிகள்.
படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
7 / 18
8 / 18
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 4-ம் நாளான இன்று (18.12.2020) கிருஷ்ணர் சவுரிக் கொண்டை, வைர அபயஹஸ்தம், மார்பில் மஹாலட்சுமி பதக்கம், முத்துசரம், பவளமாலை, அவுரிசரம் உள்ளிட்ட திருவாபரணங்களுடன் பக்தர்களுக்கு சேவை சாதித்த நம்பெருமாள்.
படம்: ஜி.ஞானவேல்முருகன்.
9 / 18
டெல்லியில் போராட்டும் விவசாயிகளுக்கு ஆதரவாக....
சென்னை ஆளுநர் மாளிகை
முன்பு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ... விவசாயிகளின் தலைவர் பி.ஆர் பாண்டியன் தலைமையில் இன்று (18.12.2020) முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
படங்கள்: ம.பிரபு
10 / 18
11 / 18
12 / 18
13 / 18
மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிராக இயற்றிய 3 சட்டத்
திருத்தங்களை கண்டித்தும், அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரியும் கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் காமராஜர் பவனில் இருந்து
தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் ஊர்வலமாக சென்ற காங்கிரஸ் கட்சியினர் இன்று (18.12.2020) ஏர்கலப்பை பேரணி நடத்தினர்.
படம்: ஜெ.மனோகரன்
14 / 18
15 / 18
16 / 18
புதிய வேளாண் சட்டங்களின் நன்மைகளை விளக்கும் வகையில்... கோவை அடுத்த பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் இருந்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் அக்கட்சியின் மகளிர் அணியினர் இன்று (18.12.2020) டிராக்டர் ஊர்வலம் சென்றனர்.
படங்கள்: ஜெ. மனோகரன்
17 / 18
18 / 18
சென்னை புறநகர் பகுதிகளில் ஏரி மற்றும் குளங்கள் முழுவதும் தண்ணீர் நிறைந்துள்ளதால்... விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். மாடம்பாக்கம் ஏரிப் பகுதியில் அடுத்தகட்ட விவசாயப் பணியான நாற்று நடும் பணி இன்று (18.12.2020) தொடங்கியது.
படம்: எம்.முத்துகணேஷ்