Published on : 17 Dec 2020 20:03 pm

பேசும் படங்கள்... (17.12.2020)

Published on : 17 Dec 2020 20:03 pm

1 / 40
சென்னை - புதுப்பேட்டை தெற்கு கூவம் சாலையில்... சென்னை மாநகராட்சியின் சார்பில் இயங்கும் இயற்கை உரம் தயாரிக்கும் மையத்தில் உரம் தயாரிக்க வசதியாக வீணாய்ப்போன காய் கனிகளை மும்முரமாக வெட்டும் ஊழியர்கள். படங்கள்: க.ஸ்ரீபரத்
2 / 40
3 / 40
4 / 40
5 / 40
தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்துக் கூட்டமைப்பின் சார்பில் மாநில அளவிலான கூட்டம் இன்று (17.12.2020) சென்னை எக்மோரில் நடைபெற்றது. இதில், ’கரோனா’ தொற்று காரணத்தால் பல மாதங்களாக லாரி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் காலாண்டு வரி கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும், சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல ராசாமணி பேசினார் உடன் கூட்டமைப்பின் நிர்வாகிகள். படம்: க.ஸ்ரீபரத்
6 / 40
தமிழ் மாநில டாஸ்மாக் பார் உரிமையாளர்கள், கட்டிட உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில்... டாஸ்மாக் கடையுடன் இணைந்த பார்களை திறக்க அனுமதிக்கக் கோரி... சென்னை எழும்பூரில் இன்று (17.12.2020) ஆர்பாட்டம் நடைபெற்றது. படம்: க.ஸ்ரீபரத்
7 / 40
சென்னை - உள்ளகரம் புழுதிவாக்கம் ஏரியில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்றுவதில் அதிமுகவினருக்கு போட்டியாக படகுகள் மற்றும் மஞ்சள் பனியனுடன் இன்று (17.12.2020) ஏரியை வலம் வந்த திமுக தொண்டர்கள். படங்கள்: எம்.முத்துகணேஷ்
8 / 40
9 / 40
10 / 40
11 / 40
மதுரை- கொடி மங்கலத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று (17.12.2020) மினி கிளினிக்கை திறந்துவைத்து... அதில் உடல் பரிசோதனையும் செய்து கொண்டார். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
12 / 40
13 / 40
சென்னையை அடுத்த உள்ளகரம் - புழுதிவாக்கம் ஏரியில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்றுவதற்கு அதிமுக தொண்டர்கள் மற்றும் மாநகராட்சியினர் படகு உள்ளிட்ட பொருட்களுடன் இன்று (17.12.2020) திரண்டனர். இதை அறிந்த திமுக தொண்டர்களும் ஆகாயத்தாமரையை அகற்றுவதற்கு அங்கு கூடியதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. படங்கள்: எம்.முத்துகணேஷ்
14 / 40
15 / 40
16 / 40
17 / 40
18 / 40
19 / 40
டெல்லியில் தற்போது நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக.. அகில இந்திய முஸ்லிம் லீக் சார்பாக மதுரை கோரிப்பாளையத்தில் இன்று (17.12.2020) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
20 / 40
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக வீடுர் அணை முழுவதும் நிரம்பியுள்ளதையடுத்து.... அணையில் இருந்து அதிகளவில் உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் - இன்று (17.12.2020) புதுச்சேரி செல்லிப்பட்டு தடுப்பணை நிரம்பி காட்டாற்று வெள்ளம் போல் கடந்து செல்கிறது வெள்ள நீர். படங்கள்: எம்.சாம்ராஜ்
21 / 40
22 / 40
கரோனா ஊரடங்குக்குப் பின்னர் பல மாதங்களுக்குப் பிறகு கல்லுாரிகள் இன்று (17.12,2020) திறக்கப்பட்ட நிலையில்... புதுச்சேரி - பாரதிதாசன் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் முதல் நாள் வகுப்புக்கு வந்திருந்த மாணவிகளுக்கு முகக்கவத்துடன் சமூக இடைவெளியுடன் அமர்ந்து வகுப்புகள் நடத்த வலியுறுத்தப்பட்டன. படங்கள்: எம்.சாம்ராஜ்
23 / 40
24 / 40
புதுச்சேரியில் நேற்றும் இன்றும் (17.12.2020) தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வழுவூர் சாலையில் கொட்டும் மழையிலும் செல்லும் வாகன ஓட்டிகள். படங்கள்: எம்.சாம்ராஜ்
25 / 40
26 / 40
புதுச்சேரியில் நேற்றும் இன்றும் (17.12.2020) தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் காந்தி நகர் பகுதியில் தெருப் பகுதி மற்றும் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது. படம்: எம்.சாம்ராஜ்
27 / 40
புதுச்சேரியில் நேற்றும் இன்றும் (17.12.2020) தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ரெயின்போ நகரில் சாலை மற்றும் வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீர். படம்: எம்.சாம்ராஜ்
28 / 40
புதுச்சேரியில் நேற்று (16.1.2020) இரவு முதல் பெய்துவரும் தொடர் மழை காரணமாக செல்வா நகர் பகுதி முழுவதும் மழை நீர் சூழ்ந்தது. இந்த மழை நீரை மின் மோட்டார் கொண்டு நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். படங்கள்: எம்.சாம்ராஜ்
29 / 40
30 / 40
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மூடப்பட்டிருந்த கல்லுாரிகள் பல மாதங்களுக்குப் பிறகு இன்று (17.12.2020) திறந்தது. இந்நிலையில் கல்லூரி திறந்த முதல்நாளே புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியை மழை நீர் சூழ்ந்தது. படம்: எம்.சாம்ராஜ்
31 / 40
புதுச்செரியில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக... விழுப்புரம் மாவட்டம் - பெரம்பை பூத்துறை சாலையில் மண் சரிவு ஏற்பட்டு சாலை அடைக்கப்பட்டுள்ளது. படம்: எம்.சாம்ராஜ்
32 / 40
புதுச்சேரி ஊசுட்டேரி தொடர் மழையின் காரணமாக நிரம்பியுள்ள நிலையில்... ஏரியில் மிதக்கும் கழிவுகள் மற்றும் பாசிகளை ஊழியர்கள் அப்புறப்படுத்தி சுத்தம் செய்தனர். படங்கள்: எம்.சாம்ராஜ்
33 / 40
34 / 40
புதுச்சேரியில் தற்போது தொடர் மழை பெய்து வருவதையடுத்து,,, பத்துக்கண்ணு - தொண்டமாநத்தம் சாலையில் கொட்டும் மழையில் குடை பிடித்தபடிச் செல்லும் பொதுமக்கள். படம்: எம்.சாம்ராஜ்
35 / 40
புதுச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக... ஊசுட்டேரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து ஊசுட்டேரியின் பத்துக்கண்ணு பகுதியில் உள்ள அனைத்து மதகுகளையும் திறந்துவிடும் புதுச்சேரி - பொதுப்பணித் துறை ஊழியர்கள். படம்: எம். சாம்ராஜ்
36 / 40
கடந்த இரு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக புதுச்சேரி - ஊசுட்டேரி முழுவதும் நிரம்பியுள்ளது . இதையடுத்து ஊசுட்டேரிக்கு வரும் உபரிநீர் மதகுகள் வழியாக கடலுக்கு திருப்பிவிடப்படுகிறது. படங்கள்: எம்.சாம்ராஜ்
37 / 40
38 / 40
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 41-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (டிச. 17) நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் மாணவர் ஒருவர் பட்டம் பெற்றார். அருகில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, தமிழக அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்.குமார் ஆகியோர். படம்: ஜெ.மனோகரன்
39 / 40
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 41-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (டிச. 17) நடைபெற்றது. இவ்விழாவில் மாணவ - மாணவியர் பட்டம் பெற்றனர். படம்: ஜெ. மனோகரன்
40 / 40
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 41-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (டிச. 17) நடைபெற்றது. இவ்விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். படம்: ஜெ.மனோகரன்

Recently Added

More From This Category

x