Published on : 14 Dec 2020 19:19 pm

பேசும் படங்கள்... (14.12.2020)

Published on : 14 Dec 2020 19:19 pm

1 / 56
தமிழகம் முழுவதும் ’அம்மா மினி கிளினிக்’ திட்டத்தை சென்னை - ராயப்புரத்தில் முதல்வர் பழனிசாமி இன்று (14.12.2020) தொடங்கி வைத்து பார்வைையிட்டார். உடன் - துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி. படங்கள்: ம.பிரபு
2 / 56
3 / 56
4 / 56
5 / 56
6 / 56
7 / 56
8 / 56
9 / 56
வேளாண் சட்ட மசோதாக்களைத் திரும்பப் பெற வேண்டும், மின் உற்பத்தியை தனியார்மயமாக்கும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... எழுப்பி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் விவசாயிகளின் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் காத்திருப்பு போராட்டத்தில் இன்று (`4.`2.2020) ஈடுபட்டனர். படங்கள் : ஜெ.மனோகரன்
10 / 56
11 / 56
12 / 56
புதிய வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி கோவை ரயில்நிலையம் முன்பு இன்று (14.12.2020) மனிதநேய மக்கள் கட்சியினர் முற்றுகையிட முயன்றனர். அப்போது - போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்திய போலீஸ்காரர்களுக்கும் மனித நேய கட்சியினருக்கும் சிறிது நேரம் அங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. படங்கள்: ஜெ .மனோகரன்
13 / 56
14 / 56
15 / 56
16 / 56
கரோனா தடைக்காலம் முடிந்து 10 மாதங்களுக்குப் பிறகு மெரினா கடற்கரைக்கு இன்றுமுதல் (14.12.2020) பொதுமக்கள் செல்ல அரசு அனுமதித்துள்ளதால்.... இன்று காலையில் கடற்கரைப் பகுதியில் நடைபயிற்சி செல்வோர் மற்றும் மணல் பரப்பில் விளையாடிக் களிக்கும் சிறுவர்கள், படங்கள்: ம.பிரபு
17 / 56
18 / 56
19 / 56
அம்பானி, அதானி ஆகியோர் நடத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களைக் கண்டித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல எழுத்தாளருமான சு வெங்கடேசன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் மற்றும் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் இன்று (14.12.2020) மதுரை - பைபாஸ் சாலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
20 / 56
புதிய வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி கோவை ரயில்நிலையம் முன்பு இன்று (14.12.2020) மனிதநேய மக்கள் கட்சியினர் முற்றுகையிட முயன்றனர். அப்போது - போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்திய போலீஸ்காரர்களுக்கும் மனித நேய கட்சியினருக்கும் சிறிது நேரம் அங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. படங்கள்: ஜெ .மனோகரன்
21 / 56
டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக... மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே நாம் தமிழர் கட்சியின் சார்பாக இன்று (14.12.2020) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
22 / 56
புதுச்சேரியில் தினக்கூலி ஊழியர்களின் சம்பளத்தில் பிடிக்கப்பட்ட வருங்கால வைப்பு நிதி தொகையில் முறைகேடு நடந்திருப்பதாகம் கூறி... ஜிப்மர் மருத்துவமனை நிர்வாக அலுவலகம் முன்பு இம்மருத்துவமனையில் தினக்கூலி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இன்று (14.12.2020) ஈடுபட்டனர். படங்கள்: எம்.சாம்ராஜ்
23 / 56
24 / 56
கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.. புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள ஜியோ செல்போன் கடையை இன்று (14.12.2020) முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: எம்.சாம்ராஜ்
25 / 56
கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள ஜியோ கடையை இன்று (14.12.2020) முற்றுகையிட்டு... அந்த நிறுவனத்தில் இருந்த செல்போன்களை சாலையில் வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். படங்கள்: எம்.சாம்ராஜ்
26 / 56
27 / 56
28 / 56
கரோனா ஊரடங்கு காரணமாக 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த புதுச்சேரி தாவரவியல் பூங்கா... இன்று முதல் (14.12.2020) பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டதையொட்டி... இன்று பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் மீண்டும் விளையாடத் தொடங்கினர். படங்கள்: எம்.சாம்ராஜ்
29 / 56
30 / 56
கரோனா ஊரடங்கு காரணமாக 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த புதுச்சேரி தாவரவியல் பூங்கா... இன்று முதல் (14.12.2020) பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டதையொட்டி இன்று - பூங்காவுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் குழந்தை மகிழ்ச்சியுடன் விளையாடுகிறது. படங்கள்: எம்.சாம்ராஜ்
31 / 56
32 / 56
கரோனா ஊரடங்கு காரணமாக 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த புதுச்சேரி தாவரவியல் பூங்கா இன்று (14.12.2020) முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டதையொட்டி.. பூங்காவைச் சுற்றிப் பார்க்கவந்த சுற்றுலாப் பயணிகள். படம்: எம்.சாம்ராஜ்
33 / 56
கரோனா ஊரடங்கு காரணமாக 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த புதுச்சேரி தாவரவியல் பூங்கா இன்று (14.12.2020) முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டதையொட்டி.. பூங்கா வைச் சுற்றிப்பார்க்க வந்தவர்கள் செல்1பி எடுத்து மகிழ்ந்தனர். படம்: எம்.சாம்ராஜ்
34 / 56
மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தியும்... டெல்லியில் தோடர்ந்து போராட்டம் நடத்திவரும்... விவசாயிகளுக்கு ஆதரவாகவும் திருச்சி - ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று (14.12.2020) திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்
35 / 56
36 / 56
37 / 56
மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தியும்... டெல்லியில் தோடர்ந்து போராட்டம் நடத்திவரும்... விவசாயிகளுக்கு ஆதரவாகவும்... திருச்சி - மேல சிந்தாமணி அண்ணா சிலை அருகே திருவோடு ஏந்தியும், தூக்கு கயிறு மாட்டிக் கொண்டும்... தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் இன்று (14.12.2020) நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்
38 / 56
39 / 56
40 / 56
திருச்சி செங்குளம் காலனியில் தெரு விளக்கு எரியாததால் மாநகராட்சியைக் கண்டித்து... அப்பகுதி பொதுமக்கள் பாலக்கரை குடிசை மாற்று வாரிய அலுவலகத்தின் முன்பு இன்று (14.12.2020) கைகளில் சிமிலி விளக்கு ஏந்தி... போராட்டத்தில் ஈடுபட்டனர். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
41 / 56
42 / 56
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும்... அம்பானி, அதானி ஆகியோரின் கார்ப்பரேட் நிறுவனப் பொருட்களை எதிர்த்தும்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் மதிமுக சார்பில் சென்னை - குரோம்பேட்டையில் உள்ள ரிலையன்ஸ் கடையின் முன்பு இன்று (14.12.2020) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படங்கள்: எம்.முத்துகணேஷ்
43 / 56
44 / 56
45 / 56
46 / 56
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும்,,, மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும்... தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்தபடி கட்டுப்பாட்டு அறை அமைத்து ஆட்டோக்களுக்கு இலவச ஜிபிஎஸ் மீட்டரை பொருத்தக் கோரியும்... அனைத்து ஆட்டோ தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் சென்னை - அண்ணா சாலை தாராப்பூர் டவர் அருகே கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பாலசுப்பிரமணியம் தலைமையில் இன்று (14.12.2020) போராட்டம் நடைபெற்றது . படம்: பு.க.பிரவீன்
47 / 56
மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களை எதிர்த்தும்... டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும்... அம்பானி, அதானி குழுமப் பொருட்களை புறக்கணிக்க வலியுறுத்தியும்... தமிழகம் முழுவதும் ரிலையன்ஸ் கடைகள் முன்பு... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக சென்னை - கொட்டிவாக்கத்தில் உள்ள ரிலையன்ஸ் கடை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக கட்சிகள் சார்பில் இன்று (14.12.2020) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படங்கள்: பு.க.பிரவீன்
48 / 56
49 / 56
50 / 56
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று (14.12.2020) நடைப்பெற்றது. இதில் - அமைச்சர்கள். மாவட்டச் செயலர்கள், அதிமுக மண்டலப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். படங்கள்: பு.க.பிரவீன்
51 / 56
52 / 56
53 / 56
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி...தற்போது (14.12.2020) வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கோபுரங்கள். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்
54 / 56
55 / 56
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி... ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வளாகத்தில் இன்று (14.12.2020) புறக்காவல் நிலையத்தை மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் திறந்து வைத்து ...சி.சி.டி.வி கேமராக்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். உடன் - கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன். படம்: ஜி.ஞானவேல்முருகன்.
56 / 56
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி... ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வளாகத்தில் இன்று (14.12.2020) முதல் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து - கோயில் பாதுகாப்புப் பணிக்கு வந்திருந்த போலீஸாருக்கு அறிவுரை வழங்கிய காவல் ஆணையர் ஜெ.லோகநாதன். படம்: ஜி.ஞானவேல்முருகன்.

Recently Added

More From This Category

x