1 / 57
செம்மஞ்சேரியில் உள்ள குடிசை மாற்று வாரியக் கட்டிடங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை... தற்போது (6.12.2020) தாளம்பூர் ஏரி உபரிநீர் சூழ்ந்துள்ளது. கடந்த ஒருவார காலமாகவே தீவு போல் காட்சியளிக்கும் இந்தக் பகுதி கட்டிடங்கள் சமீபத்தில்தான் திறக்கப்பட்டதால்... இங்கு வசிக்கும் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
படங்கள்: எம்.முத்துகணேஷ்
2 / 57
செம்மஞ்சேரியில் உள்ள சுனாமி குடியிருப்புப் பகுதியை அடுத்த டிஎல்எஃப் குடியிருப்புப் பகுதியில் தற்போது தாழம்பூர் ஏரியின் உபரி நீரும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழைநீரும் கலந்து வெள்ளம்போல் சூழ்ந்து காணப்படுகிறது.
படங்கள்: எம்.முத்துகணேஷ்
3 / 57
4 / 57
5 / 57
மதுரைக்கு வந்திருந்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு அக்கட்சியினர் நேற்று (5.12.2020) சிறப்பாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து அவர் மதுரை - அழகர்கோவிலில் உள்ள பழமுதிர் சோலை முருகன் கோயிலில் வேல் வைத்து வழிபட்டார்.
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
6 / 57
7 / 57
8 / 57
9 / 57
10 / 57
11 / 57
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்றான கொளவாய் ஏரி... கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக... தற்போது (5.12.2020) முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் இந்த ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறி... மீஞ்சல்மடு அணைக்குச் செல்கிறது.
படங்கள்: எம்.முத்துகணேஷ்
12 / 57
13 / 57
செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புப் பகுதி.. கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் மழை நீராலும்... தாழம்பூர் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீராளும் தற்போது (6.12.2020) வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.
படங்கள்: எம்.முத்துகணேஷ்
14 / 57
15 / 57
16 / 57
17 / 57
18 / 57
19 / 57
20 / 57
21 / 57
22 / 57
23 / 57
சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக கோவிலம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறிய உபரிநீர்... சுண்ணாம்பு கொளத்தூர் பகுதிகளின் தெருக்களில் சூழ்ந்தது .தற்போது (5.12.2020) அப்பகுதி மக்கள் முழங்கால் அளவு தண்ணீரில் செல்ல வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது.
படங்கள்: எம்.முத்துகணேஷ்
24 / 57
25 / 57
டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி... தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகம் சத்தியமூர்த்தி பவனில்... அம்பேத்கரின் உருவப்படத்துக்கு இன்று (6.12.2020) காங்கிரஸ் கட்சியினர் மலர்த் தூவி அஞ்சலி செலுத்தினர்.
படம்: க.ஸ்ரீபரத்
26 / 57
கடந்த சில நாட்களாக புயல், மழை, மேகமூட்டம் என இருந்த வானிலை மாறி... இன்று (6.12.2020) சூரியன் தனது வெய்யில் முகம் காட்டத் தொடங்கியது. சென்னை - அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் உடன் இருப்பவர்கள்... தங்களது துணிகளை துவைத்து மருத்துவதுமனை வளாகத்தில் உலர்த்தியிருந்தனர்.
படங்கள்: க.ஸ்ரீபரத்
27 / 57
28 / 57
29 / 57
30 / 57
31 / 57
புயல் மற்றும் கனமழையால் பாதித்த பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நோய் தடுப்புப் பணிகளை... சென்னையில் உள்ள தமிழ்நாடு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில்... தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று (6.12.2020) தொடங்கி வைத்தார். உடன் - சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள்.
படங்கள்: க.ஸ்ரீபரத்
32 / 57
33 / 57
34 / 57
35 / 57
36 / 57
37 / 57
38 / 57
பாபர் மசூதி இடத்தை முஸ்ஸிம்களிடம் வழங்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... திருச்சி - பாலக்கரையில் இன்று (6.12.2020) எஸ்.டி.பி.ஜ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படங்கள்: ஜி.ஞானவேல் முருகன்
39 / 57
40 / 57
41 / 57
திருச்சி - சத்திரம் பேருந்து நிலையம் அருகில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ்... கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாலும்... தற்போது பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகவும்... பேருந்து நிலையச் சுற்று சாலை முழுவதும் சேறும் சகதியும், குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இதனால் தற்போது ((6.12.2020) - அந்த வழியே செல்லும் வாகனங்களும், பொதுமக்களும் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
படங்கள்: ஜி.ஞானவேல் முருகன்
42 / 57
43 / 57
44 / 57
திருச்சி - சத்திரம் பேருந்து நிலையத்தின் வெளியே அமைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பயணிகள் நிழற்குடை அருகே தற்போது (6.12.2020) வடியாமல் தேங்கி நிற்கும் மழைநீருடன் கலந்த கழிவுநீர்.
படங்கள்: ஜி.ஞானவேல் முருகன்
45 / 57
46 / 57
47 / 57
சென்னையை அடுத்த செம்மஞ்சேரி பகுதியில் ஏரி உபரிநீராலும்... கனமழை நீராலும் சூழப்பட்ட வெள்ளம் சாலை முழுவதும் நிரம்பி... வழிகிறது. அத்தியாவசிய தேவைகளுக்காக இப்பகுதி மக்கள் தண்ணீரில் நடந்து செல்க வேண்டிய அவல நிலை ஏற்ப்பட்டுள்ளது.
படங்கள்: எம்.முத்துகணேஷ்
48 / 57
49 / 57
50 / 57
51 / 57
52 / 57
53 / 57
54 / 57
55 / 57
56 / 57
விரைவில் கட்சி ஆரம்பித்து... கட்சியின் கொடி அறிமுகப்படுத்தப்படும் என ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்துள்ளதைத் தொடர்து... மதுரை - கூடலழகர் பெருமாள் கோயில் அருகே... ரஜினி மன்ற நிர்வாகிகள் இன்று (6.12.2020) பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
. படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
57 / 57
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கன மழை காரணமாக... தற்போது (6.12.2020) சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகப் பகுதி முழுவது மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது.
படம்:. எம்.முத்துகணேஷ்