1 / 52
வன்னியர் சமூகத்துக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு... சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில் அக்கட்சியினர்
2-வது நாளாக இன்று (2.12.2020) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படங்கள்: க,ஸ்ரீபரத்
2 / 52
3 / 52
4 / 52
5 / 52
6 / 52
7 / 52
8 / 52
சென்னையில் நடைபெற்ற தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்ற நிர்வாகிகளின் பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு இன்று (2.12.2020) வெற்றிபெற்ற நிர்வாகிகளை கவுரவித்தார்.
படங்கள்: க.ஸ்ரீபரத்
9 / 52
10 / 52
விவசாயிகளையும் விவசாயத்தையும் பாதிக்கும் விவசாய விரோத வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி... டெல்லியில் தற்போது நடைபெற்றுவரும் விவசாயிகளின் மாபெரும் போராட்டத்தை ஆதரித்து...மதுரை - தலைமை அஞ்சல் நிலையம் முன்பு... நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் தலைமையில் அக்கட்சியினர் மறியல் போராட்டத்தில் இன்று (2.12.2020) ஈடுபட்டனர்.
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
11 / 52
12 / 52
13 / 52
14 / 52
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாய விரோத வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் இன்று (2.12.2020) திருச்சி - உறையூரில் ஏர் கலப்பையுடன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
15 / 52
16 / 52
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும்... விவசாய விரோத வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும்... திருச்சி - மேலப்புதூர் ரயில்வே பாலத்தின் தண்டவாளத்தில் அமர்ந்து இன்று (2.12.2020) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படம்: ஜி.ஞானவேல்முருகன்.
17 / 52
18 / 52
19 / 52
அரசுத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவது உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி... திருச்சி ஆட்சியர் அலுவலகத்தின் முன் மாற்றுத் திறனாளிகள் இன்று (2.12.2020)
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்
20 / 52
21 / 52
22 / 52
சென்னை மக்களின் குடிநீர் தேவைகளைப் பூர்த்திசெய்யும் முக்கிய ஏரியான புழல் ஏரி... கடந்த வாரத்தில் பெய்த கனமழை காரணமாக தற்போது நீர் நிறைந்து காணப்படுகிறது. அதிக நீர்வரத்து காரணமாக குடிநீர் வாரிய அதிகாரிகள் நீரின் தரத்தை இன்று (2.12.2020) ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். இந்த ஏரியில் ஜோன்ஸ் டவர் முழு கொள்ளவை எட்டுவதற்கு இன்னமும் 2 அடிகள் மட்டுமே உள்ளது. இந்நிலையில் ஏரியின் ஷட்டர் பகுதியின் மேல் பகுதிவரை நீர் நிரம்பியுள்ளதால் ... அடுத்து கனமழை தொடந்து பெய்தால் ஏரியில் இருந்த் உபரி நீரை திறந்துவிட அனைத்து ஏற்ப்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
படங்கள்: ம.பிரபு
23 / 52
24 / 52
25 / 52
26 / 52
27 / 52
28 / 52
29 / 52
விவசாய விரோத வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி... தற்போது டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாய சங்க நிர்வாகிகளை அழைத்து மத்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... டி .ஆர்.யு மற்றும் சிஐடியு தொழிற்சங்கங்களின் சார்பாக.... இன்று (2.12.2020) மதுரை - ரயில்வே நிலைய நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
30 / 52
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டிருந்த ராணி மேரி கல்லுரியில் இன்று (2.12.2020) முதல் வகுப்புகள் மீண்டும் தொடங்கின. முதுநிலை இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளுக்கு வருகை தந்த மாணவிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றன.
படங்கள்: ம.பிரபு
31 / 52
32 / 52
33 / 52
34 / 52
35 / 52
36 / 52
37 / 52
கரோனா தொற்றுப் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 8 மாதங்களாக மூடிகிடந்த கல்லூரிகளில் சில வகுப்புகள் இன்று (2.12.2020) திறக்கப்பட்டதையொட்டி... கோவை அரசு கலை கல்லுரி முதுநிலை பட்டப்படிப்பு மாணவ - மாணவிகள் வகுப்புகளுக்கு வந்தபோது... கல்லூரி நுழைவு வாயிலில் மாணவ - மாணவியரின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் அந்த மாணவ - மாணவியர் தனி மனித இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர்.
படங்கள்: ஜெ. மனோகரன்
38 / 52
39 / 52
40 / 52
41 / 52
42 / 52
43 / 52
44 / 52
20 சதவீத இட ஒதுக்கீடு கோரி பாமகவினரின் போராட்டம் 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இதையொட்டி சென்னை - செங்கல்பட்டு மாவட்ட எல்லையான வண்டலூர் பகுதியில் பாமகவினர் சென்னை நகருக்குள் நுழையாத வகையில் அவர்களது வாகனங்களை சோதனை செய்து போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினர்.
படங்கள்: எம்.முத்துகணேஷ்
45 / 52
46 / 52
47 / 52
48 / 52
49 / 52
தாம்பரத்தை அடுத்த மேலக்கோட்டையூரில்
உள்ள தங்கள் நிலத்தை அரசு அதிகாரிகள் அளவீடு செய்ததை... நிலத்தை கையகப்படுத்துவதாக கருதி... அதைக் கண்டித்து கிராமத்து மக்கள் நேற்று தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
50 / 52
51 / 52
52 / 52