Published on : 28 Nov 2020 23:30 pm

பேசும் படங்கள்... (28.11.2020)

Published on : 28 Nov 2020 23:30 pm

1 / 51
சென்னை - வில்லிவாக்கம் பாபா தெருவில் வெளியேற வழியின்றி மழை நீர் தேங்கியுள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் இன்று (28.11.2020) அந்த மழை நீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். படங்கள்: பு.க.பிரவீன்
2 / 51
3 / 51
4 / 51
5 / 51
6 / 51
7 / 51
8 / 51
9 / 51
சென்னை - நந்தம்பாக்கத்தில் உள்ள யுத்த கல்லறைத் தோட்டத்தில் மழை நீர் குளம் போல் தற்போது (28.11.2020) தேங்கியுள்ளது. படங்கள்: பு.க.பிரவீன்
10 / 51
11 / 51
சென்னையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக சென்னை - சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து இந்தப் பள்ளம் உடனடியாக சரிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து... இன்று (28.11.2020) முதல் அந்த வழியாக வாகனங்கள் மீண்டும் சென்ரு வர காவல் துறையால் அனுமதிக்கப்பட்டன. படங்கள்: பு.க.பிரவீன்
12 / 51
13 / 51
மதுரை வைகை ஆற்றை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்றும் பணியில் மதுரை - மாநகராட்சி மற்றும் பொதுப்பணித் துறை ஊழியர்கள் இன்று (28.11.2020) ஈடுபட்டனர். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
14 / 51
மதுரை கரிசல் குளத்தில் உள்ள பாண்டிய நகரில் நேற்று இரவு கனமழை பெய்தததைத் தொடர்ந்து... தெருக்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
15 / 51
16 / 51
உயர்நீதி மன்ற உத்தரவையடுத்து திருச்சி - காந்தி மார்க்கெட்டில் கடைகள் முன்பு ஏற்படுத்தியிருந்த தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் திருச்சி நகராட்சி ஊழியர்கள் இன்று (28.11.2020) ஈடுபட்டனர். படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்
17 / 51
18 / 51
19 / 51
திருச்சி பகுதிகளில் மழைநீர் செல்லும் கால்வாய்களை தூர்வாரி சீரமைக்கும் பணியில் இன்று (28.11.2020) ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள். படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்
20 / 51
21 / 51
மதுரை - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மன்னார்புரம் வளைவின்கீழ் பகுதியில்.... இன்று (28.11.2020) இரும்பு குழாய் உடைந்து விழுந்தது. பாலங்களின் அடியில் மழைநீர் கடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இது போன்ற இரும்பு குழாய்கள் பெரும்பாலும் துருப்பிடித்து உடையும் நிலையிலேயே உள்ளது. படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்
22 / 51
23 / 51
24 / 51
கடந்த சில நாட்களாக பெய்து கனமழை காரணமாக மதுரை - மீனாம்பாள்புரத்தில் உள்ள கால்வாயில் நுரை ததும்பத் ததும்ப ஓடும் மழைநீர் . படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
25 / 51
26 / 51
27 / 51
28 / 51
தமிழகமெங்கும் நாளை நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திருநாளையொட்டி... வீடுகளில் தீபம் ஏற்றி வைக்கவேண்டி... சென்னை - மயிலாப்பூர் மாடவீதியில் அகல் விளக்கு வாங்கும் பெண்கள். படங்கள்: க.ஸ்ரீபரத்
29 / 51
30 / 51
31 / 51
32 / 51
தமிழகமெங்கும் நாளை நடைபெறவுள்ள கார்த்திகை தீபத்திருநாளையொட்டி... கொழுக்கட்டைகள் செய்ய இன்று (28.11.2020) மயிலாப்பூர் பகுதியில் பனை ஓலை வாங்கும் பெண்கள். படங்கள்: க.ஸ்ரீபரத்
33 / 51
34 / 51
35 / 51
36 / 51
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடங்கி 7-ம் ஆண்டு விழாவையொட்டி.. சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்.... இன்று (28.11.2020) அக்கட்சி கொடியை ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். படங்கள்: க.ஸ்ரீபரத்
37 / 51
38 / 51
சென்னை கீழ்பாக்கம்‘பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரம்’ வளாகத்தில் இன்று (28.11.2020) பாரதிய வித்யா பவன் சார்பில் நடைபெற்ற‘ பவன் இசை திருவிழா’ தொடக்க நிகழ்ச்சியில் கர்னாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பரிசு வழங்கி கவுரவித்தார். உடன்பாரதிய வித்யா பவன் சென்னை கேந்திரா துணைத் தலைவர் நல்லி குப்புசாமி செட்டி, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், பாரதிய வித்யா பவன்தலைவர் ‘இந்து’ என்.ரவி, அதன் இயக்குநர் கே.என்.ராமசாமி ஆகியோர். இதைத் தொடர்ந்துசுதாரகுநாதனின்இசைநிகழ்ச்சிநடைபெற்றது. படங்கள்:க.ஸ்ரீபரத்
39 / 51
40 / 51
41 / 51
42 / 51
43 / 51
சென்னை கீழ்பாக்கம் ‘பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரம்’ வளாகத்தில் இன்று (28.11.2020) பாரதிய வித்யா பவன் சார்பில் நடைபெற்ற ‘பவன் இசை திருவிழா’ தொடக்க நிகழ்ச்சியில் கர்னாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பரிசு வழங்கி கவுரவித்தார். உடன் பாரதிய வித்யா பவன் சென்னை கேந்திரா துணைத் தலைவர் நல்லி குப்புசாமி செட்டி, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், பாரதிய வித்யா பவன் தலைவர் ‘இந்து’ என்.ரவி, அதன் இயக்குநர் கே.என்.ராமசாமி ஆகியோர். இதைத் தொடர்ந்து சுதா ரகுநாதனின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பார்வையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் அமர்ந்து இசையை ரசித்தனர். படங்கள்: க.ஸ்ரீபரத்
44 / 51
45 / 51
46 / 51
47 / 51
48 / 51
49 / 51
50 / 51
51 / 51

Recently Added

More From This Category

x