Published on : 24 Nov 2020 19:33 pm

பேசும் படங்கள்... (24.11.2020)

Published on : 24 Nov 2020 19:33 pm

1 / 53
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நேற்று (23.11.2020) சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர் - ஜானகி கல்லூரியில் ( பழைய சத்யா ஸ்டுடியோ) நடைபெற்றது. மாலையில் வெளியிடப்பட்ட தேர்தல் முடிவின்படி.... தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து . அவர் தனது ஆதரவாளர்களுடன் இனிப்பு வழங்கி வெற்றி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். உடன் திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்டோர். படங்கள்: பு.க.பிரவீன்
2 / 53
3 / 53
நுங்கம்பாக்கத்தில் உள்ள - சென்னை வானிலை ஆய்வு மையத்தில் நேற்று (23.11.2020) நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் சே.பாலச்சந்திரன் பங்கேற்று தமிழகத்தை தாக்க இருக்கும் நிவர் புயல் தொடர்பாக... வானிலை தகவல்களையும் எச்சரிக்கை செய்திகளையும் வெளியிட்டார். படங்கள்: பு.க.பிரவீன்
4 / 53
5 / 53
திமுக இளைஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து.... மதுரை ஊமச்சிகுளப் பகுதியில் திமுக எம்எல்ஏ மூர்த்தி தலைமையில் நேற்று (23.11.2020) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . படங்கள் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
6 / 53
7 / 53
8 / 53
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையில்... நன்மங்கலம் ஏரி நிரம்பியுள்ளது. ஆனாலும் இந்த ஏரியில் கழிவு நீர் கலப்பதாலும்... ஏரியை ஆக்கிரமித்து ஆகாயத்தாமரை சூழ்ந்துள்ளதாலும்.... இவற்றையெல்லாம் அகற்றி ஏரியை சுத்தப்படுத்தி சீரமைக்க இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். படம் : எம்.முத்துகணேஷ்
9 / 53
10 / 53
இந்த ஆண்டு முதல்முறையாக அமல்படுத்தப்பட்டுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பு உள்ஒதுக்கீட்டின்கீழ்.. சென்னை - அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 7 பேருக்கு.... மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது. அ்வர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனிதா நேற்று (23.11.2020) இனிப்பு வழங்கி பாராட்டினார். அருகில் - அப்பள்ளியின் தலைமை ஆசிரியை சரஸ்வதி. படங்கள்: க,ஸ்ரீபரத்
11 / 53
12 / 53
13 / 53
14 / 53
15 / 53
16 / 53
திமுக வடக்கு மாவட்டச் செயலர் காடுவெட்டி தியாகராஜனைக் கண்டித்து... திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே நேற்று (23.11.2020) திருச்சி மாவட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
17 / 53
18 / 53
19 / 53
திருச்சி ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து ஆட்சியரிடம் நேற்று (23.11.2020) கோரிக்கை மற்றும் புகார் மனுக்களை கொடுக்க திருச்சி - எழில்நகர் அலுவலர்கள் மற்றும் நகர குடியிருப்புவாசிகள் திரண்டு வந்தனர். படங்கள்: ஜி.ஞானவேல் முருகன்
20 / 53
21 / 53
கரோனா தொற்று காரணமாக மாவட்ட அளவில் குறைதீர் கூட்டங்கள் நடைபெறாத நிலையில்... திருச்சி - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு... கோரிக்கை மற்றும் புகார் மனு கொடுக்க வரும் பொதுமக்களின் எண்ணிக்கை வாரம்தோறும் அதிகரித்து வருகிறது. ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் மட்டுமே மனு போட அனுமதிக்கப்படுவதால் ஆட்சியர் அலுவலக வாசலில் கூட்டமாக திரண்டிருக்கும் பொது மக்கள். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்
22 / 53
23 / 53
புதுச்சேரி கடல் பகுதியில் புயல் சின்னம் உருவாகியுள்ளதையடுத்து... புதுச்சேரி துறைமுகத்தில் 3-வது புயல் குண்டு நேற்று (23.11.2020) ஏற்றப்பட்டுள்ளது. படங்கள்: எம்.சாம்ராஜ்
24 / 53
25 / 53
புதுச்சேரி கடல் பகுதியில் புயல் சின்னம் உருவாகியுள்ளதையடுத்து... மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என இப்பகுதி மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து... விசைப் படகுகளுடன் கரைக்கு திரும்பும் மீனவர்கள். படங்கள்: எம்.சாம்ராஜ்
26 / 53
27 / 53
28 / 53
29 / 53
30 / 53
புதுச்சேரியில் உள்ள முக்கிய அரசு அலுவலகங்களில் தீவிரவாதிகள் ஊடுருவினால் ஊழியர்களைப் பாதுகாப்பது குறித்த ஆம்லா சோதனையை அடுத்து... சட்டபேரவை அலுவலத்தைச் சுற்றி சிசிடிவி கேமரா பொருத்தும் பணயில் தொழிலாளர்கள் நேற்று (23.11.2020) ஈடுபட்டனர். படங்கள்: எம்.சாம்ராஜ்
31 / 53
புதுச்சேரியில் உள்ள முக்கிய அரசு அலுவலகங்களில் தீவிரவாதிகள் ஊடுருவினால் ஊழியர்களைப் பாதுகாப்பது குறித்த ஆம்லா சோதனைக்காக புதுச்சேரிக்கு வருகை தந்துள்ள என்எஸ்ஜி பாதுகாப்பு படையினர். படம்: எம்.சாம்ராஜ்
32 / 53
33 / 53
நிவர் புயல் காரணமாக புதுச்சேரி கடல் மிகுந்த சீற்றத்துடன் இன்று (24.11.2020) காணப்பட்டது. இந்நிலையில் கடலில் இருந்து புதுச்சேரி - துறைமுக பழைய பாலம் வரை அலைகள் ஆர்ப்பரித்து எழுந்தன. படங்கள்: எம்.சாம்ராஜ்
34 / 53
35 / 53
36 / 53
நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் இன்றும் (24.11.2020) நாளையும்... 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து - கடற்கரை சாலையில் இருந்த பொது மக்களை காவல்துறையினர் வெளியேற்றினர். படம்: எம்.சாம்ராஜ்
37 / 53
நிவர் புயல் காரணமாக இன்று (24.11.2020) புதுச்சேரி துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 7 ஏற்றப்பட்டுள்ளது. படங்கள்: எம்.சாம்ராஜ்
38 / 53
39 / 53
கிருஷ்ணா கால்வாயில் இருந்து சென்னை புறநகரில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வருவது தற்போது (24.11.2020) நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுவட்டாரங்களில் பெய்த மழைநீரானது இந்தக் கால்வாய் மூலமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. படங்கள்: எம்.முத்துகணேஷ்
40 / 53
41 / 53
நிவர் புயலால் சென்னையையொட்டியுள்ள... கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பூந்தமல்லி - பெங்களூரு நெடுஞ்சாலை இன்று (24.11.2020) மாலையில் வெறிச்சோடி காணப்பட்டது. இடம் பூந்தமல்லி புறவழிச் சாலை படங்கள்: எம்.முத்துகணேஷ்
42 / 53
43 / 53
நிவர் புயல் இன்று (24.11.2020) தமிழகத்தில் மாமல்லபுரம் - காரைக்காலுக்கு இடையே கரையை கடக்க உள்ளதையொட்டி... கோவளம் கடற்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. படங்கள்: எம்.முத்துகணேஷ்
44 / 53
45 / 53
46 / 53
நிசர் புயல் தமிழகத்தை கரை கடப்பதாக அறிவித்ததையடுத்து தமிழக தீயணைப்புத் துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.தாம்பரம் தீயணைப்பு துறையில் உள்ள தண்ணீர் மற்றும் கயிறுகளை திறமையாகக் கையாளும் கமாண்டோக்கள் தகுந்த உபகரணங்களுடன் காத்திருக்கின்றனர்.தாம்பரம் மற்றும் அதனை சுற்றி உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்கின்றநிலையில் மக்களை மீட்க படகுகள் கயிறுகள் போன்ற முக்கிய உபகரணங்களுடன் தயார் படுத்தப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. படங்கள்:எம்.முத்து கணேஷ்
47 / 53
48 / 53
49 / 53
50 / 53
51 / 53
52 / 53
53 / 53

Recently Added

More From This Category

x