1 / 40
விபத்து இல்லா தீபாவளி கொண்டாடும் வகையில்... பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்... சென்னை- எஸ்பிளனேடு தீயணைப்பபுத் துறை வீரர்களால் விழிப்புணர்வு பேரணி... சென்னை - உயர் நீதிமன்ற வளாகம் முதல் சென்ட்ரல் வழியாக மின்ட் தீயணைப்புத் துறை குடியிருப்பு வளாகம் வரை நேற்று (9.11.2020) நடைபெற்றது.
படம் : பு.க.பிரவீன்
2 / 40
3 / 40
4 / 40
5 / 40
6 / 40
சென்னை - கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்... தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வார்டு... மருத்துவமனையின் டீன் வசந்தாமணியால் நேற்று (9.11.2020) திறந்து வைக்கப்பட்டது. இந்த சிறப்பு வார்டில் வெடி விபத்தில் சிக்கியோருக்கும், தீக்காயத்துக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனை டீன் வசந்தா மணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
படம்: பு.க.பிரவீன்
7 / 40
8 / 40
9 / 40
தமிழக கல்லூரிகளில் முதுநிலைப் படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக்க வேண்டும்... இளங்கலை அரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியலை விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... வள்ளுவர் கோட்டம் அருகே இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் தலைமையில் நேற்று கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படங்கள் : பு.க.பிரவீன்
10 / 40
11 / 40
குன்றத்தூர் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ்... சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து... சென்னை - குரோம்பேட்டை அ ரசு மருத்துவமனையின் முன்பாக நேற்று (9.11.2020) பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
படங்கள் :எம்.முத்து கணேஷ்
12 / 40
13 / 40
14 / 40
பிஹார் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில்... பாஜக கூட்டணி முன்னிலை வகிப்பதைத் தொடர்ந்து... சென்னை - தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக தொண்டர்கள் இன்று (10.11.2020) பட்டாசு வெடித்து... இனிப்பு வழங்கி... வெற்றியைக் கொண்டாடினர்.
படங்கள் : ம.பிரபு
15 / 40
16 / 40
17 / 40
18 / 40
கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த... சென்னை - எழும்பூர் அரசு அருங்காட்சியகம் மீண்டும் இன்று (10.11.2020) முதல் திறக்கப்பட்டு... பார்வையாளர்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டது.
படங்கள் : ம.பிரபு
19 / 40
20 / 40
21 / 40
22 / 40
23 / 40
தீபாவளியை முன்னிட்டு இனிப்பு பலக்காரக் கடைகளில் விற்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளின் தரம் குறித்து... தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சென்னை - தியாகராய நகரில் உள்ள இனிப்பு விற்பனை கடைகளில் இன்று (10.11.2020) ஆய்வு செய்தனர்.
படங்கள்: ம.பிரபு
24 / 40
25 / 40
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்து 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் இன்று (10.11.2020) மீண்டும் திறக்கப்பட்டதை முன்னிட்டு... அரசு வலியுறுத்திய வழிகாட்டு நெறிமுறைகளுடன் ரசிகர்கள் திரைப்படம் பார்த்தனர். இந்நிலையில் புதுப்படங்கள் வெளியாகாததால் சென்னை - சத்யம் சினிமாஸ் திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் குறைவாகத்தான் காணப்பட்டது
படங்கள் : பு.க.பிரவீன்
26 / 40
27 / 40
28 / 40
29 / 40
30 / 40
31 / 40
பணிகள் நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மதுரவாயல் - துறைமுகம் மேம்பாலத்தை விரைந்து முடிக்கக் கோரி... திமுக சட்டப்பேரவை உறுப்பினர்
மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் தலைமையில் மதுரவாயல் மின்சார வாரிய அலுவலகம் முன்பு இன்று (10.11.2020) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படங்கள்: பு.க. பிரவீண்
32 / 40
33 / 40
34 / 40
35 / 40
36 / 40
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் யாசகர் பூழ் பாண்டி. இவர் தினந்தோறும் பல்வேறு இடங்களில் யாசகம் பெற்று சேர்த்து வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை இன்று (10.11.2020) மதுரை - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா நிவாரண நிதியாக வழங்கினார். இவர் இப்படி கரோனா நிதி வழங்குவது 21 முறையாகும்.
படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
37 / 40
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி நாளன்று பசும்பொன் கிராமத்துக்கு அஞ்சலி செலுத்த வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்... அங்கு வழங்கப்பட்ட திருநீறை பூசிக்கொள்ளாமல் - கீழே கொட்டியதை கண்டித்து... மதுரை - கோரிப்பாளையம் தேவர் சிலையின் முன்பு இன்று (10.11.2020) பார்வர்ட் பிளாக் கட்சியின் மதுரை மாவட்டச் செயலர் கதிரவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
38 / 40
பட்டியல் சாதிப் பிரிவில் உள்ள 7 உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து 'தேவேந்திர குல வேளாளர்' என அரசாணை அறிவிக்கக் கோரி.. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் நிறுவனர் ஜான் பாண்டியன் தலைமையில்.... . மதுரை அண்ணா நகர் அம்பிகா தியேட்டர் அருகே கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம் இன்று (10.11.2020) நடைபெற்றது.
படங்கள்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி
39 / 40
40 / 40
மதுரை சுப்ரமணியபுரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பழங்காநத்தம் பகுதியில்... இன்று (10.11.2020) வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸார்... உசிலம்பட்டியில் இருந்து வந்த மினி லாரியை பரிசோதித்தபோது... அதில் கஞ்சா மூட்டை இருந்ததை கண்டு... அந்த மினி லாரியில் இருந்து 350 கிலோ கஞ்சாவை கைப்பற்றி மேலும் விசாரித்து வருகின்றனர்.
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி