1 / 50
மதுரை தெற்கு சித்திரை வீதியில் உள்ள வெள்ளியம்பலம் ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில்... தொழில் பிரிவு பாடத்திட்டத்தை ரத்து செய்ததைக் கண்டித்து.... இந்து மக்கள் கட்சி சார்பாக இன்று (9.11.2020) மதுரை முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
2 / 50
தமிழக அரசு தடை விதித்திருந்தபோதிலும் பாஜகவினர் நடத்த முயற்சிக்கும் வேல் யாத்திரையை எதிர்க்கும் விதமாக.... மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அமைந்திருக்கும் இந்திய மாணவர் சங்கம் சார்பாக.. மதுரை மாவட்ட தலைமை கல்வி அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (9.11.2020) நடைபெற்றது.
படம்; எஸ். கிருஷ்ணமூர்த்தி
3 / 50
மதுரை - கோரிப்பாளையத்தில் உள்ள பொன்முடியார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பள்ளி திறப்பது தொடர்பான ஆலோசனை மற்றும் கருத்துக்கேட்புக் கூட்டம் இன்று (9.11.2020) நடைபெற்றது.
படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
4 / 50
5 / 50
கரோனா தொற்றை காரணமாக சுட்டிக்காட்டி போனஸ் அளvai குறைத்ததைக் கண்டித்தும்.... கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தும்... மதுரை - பைபாஸ் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனையின் முன்பு... டி என்எஸ்டிசி மண்டல அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பாக இன்று (9.11.2020) முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
6 / 50
சென்னையில் இருந்து அனைத்து ஊர்களுக்கும் தீபாவளி சிறப்புப் பேருந்துகள் வரும் புதன் (11.11.2020) கிழமையில் இருந்து இயக்கப்படவுள்ளன. இதையொட்டி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே பேருந்து எண், வழித்தடம், எத்தனை மணிக்கு பேருந்துகள் புறப்படும் போன்ற விவரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகள் தற்போது (9.11.2020) வைக்கப்பட்டுள்ளன. உடல் வெப்பப் பரிசோதனைக்குப் பிறகே பேருந்து நிலையத்துக்குள் பயணிகள் அனுமதி என விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அனைத்து அரசுப் பேருந்துகளும் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.
படங்கள்: ம.பிரபு
7 / 50
8 / 50
9 / 50
10 / 50
11 / 50
12 / 50
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்துக் கேட்பு முகாம் அனைத்து பள்ளிகளிலும் இன்று (9.11.2020) நடைபெற்றது. இந்நிலையில் சென்னை - அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கருத்து கூறவந்த பெற்றோரை உடல் வெப்பப் பரிசோதனைக்குப் பிறகே பள்ளி வளாகத்துக்குள் அனுமதித்தனர். இதையடுத்து அவர்களை சமூக இடைவெளியுடன் அமர வைத்து... விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டு... பூர்த்திசெய்யப்பட்ட மனுக்களை பள்ளி நிர்வாகிகள் பெற்றனர்.
படங்கள்: ம.பிரபு
13 / 50
14 / 50
15 / 50
16 / 50
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தி... அனைத்து போக்குவரத்துக் கழக சங்கக் கூட்டமைப்பு சார்பில் இன்று (9.11.2020) அனைத்துப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகங்கள் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் சென்னை - பல்லவன் இல்லத்தின் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
படங்கள்: க.ஸ்ரீபரத்
17 / 50
18 / 50
19 / 50
தமிழகத்தில் விரைவில்... திரை அரங்குகள் திறக்கப்படவுள்ளதை அடுத்து... கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக... பல மாதங்கள் மூடப்பட்டிருந்த சென்னை - எக்மோர் ஆல்பட் தியேட்டரை இன்று (9.11.2020) சுத்தம் செய்யும் பணியில் தியேட்டர் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
படங்கள்: க.ஸ்ரீபரத்
20 / 50
21 / 50
22 / 50
23 / 50
24 / 50
25 / 50
சென்னை - சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது... காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளர் குண்டுராவ் பேசினார். உடன்... தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி, மற்றும் சஞ்சை தத் ஆகியோர் உள்ளனர்.
படங்கள்: க,ஸ்ரீபரத்
26 / 50
27 / 50
28 / 50
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்த பெற்றோர் - ஆசிரியர் ஆலோசனை கூட்டம் இன்று (9.11.2020) நடைபெற்றது. இந்நிலையில் சென்னை - தாம்பரம் அருகே பீர்கன்காரணை அரசுப் பள்ளியில்.... சமூக இடைவெளியுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் வந்த மாணவர்கள் பள்ளி வளாகத்துக்கு வெளியில் காத்திருந்தனர்.
படங்கள்: எம்.முத்துகணேஷ்
29 / 50
30 / 50
31 / 50
32 / 50
33 / 50
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
கடந்த 7 மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த வண்டலூர் - உயிரியல் பூங்கா நாளை (10.11.2020) திறக்கப்படவுள்ளது. இதையொட்டி பூங்கா நிர்வாகம் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
34 / 50
35 / 50
36 / 50
37 / 50
38 / 50
39 / 50
40 / 50
41 / 50
கரோனா காரணமாக கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டிருந்த வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை (10/11/2020) திறக்கப்படவுள்ளது.
இந்நிலையில் - அங்குள்ள விலங்குகள் மற்றும் பறவைகளை எப்போதும்போல் உற்சாகமாகவும் குதூகலமாகவும் இருந்ததை இன்று (9.11.2020) பார்த்த நமக்கும் குதூகலம் ஒட்டிக்கொண்டது.
கூண்டில் இல்லாமல் புள்ளி மான்கள் சில சுற்றி திரிந்தன. ஒரு வயதை நெருங்கிய வெள்ளை வங்க புலிக் குட்டியொன்று பார்வையாளர்களின் வலைக்கு அருகில் வந்து மனிதர்களை உற்றுப் பார்த்தது பரவசமாக இருந்தது.
படங்கள்: எம்.முத்துகணேஷ்
42 / 50
43 / 50
44 / 50
45 / 50
46 / 50
47 / 50
48 / 50
49 / 50
50 / 50