Published on : 02 Nov 2020 19:03 pm

பேசும் படங்கள்... (02.11.2020)

Published on : 02 Nov 2020 19:03 pm

1 / 44
தீபாவளிப் பண்டிகை விரைவில் வருவதையொட்டி... சென்னை- தியாகராய நகரில் உள்ள ரெங்கநாதன் தெருவில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல்... ஏராளமான பொதுமக்கள் நேற்று (1.11.2020) பொருட்கள் வாங்கத் திரண்டிருந்தனர். படங்கள் : பு.க.பிரவீன்
2 / 44
3 / 44
4 / 44
5 / 44
6 / 44
7 / 44
சென்னை - மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளம் இன்று (1.10.2020) நீர் வற்றிய நிலையில் காணப்படுவதை முதல் படம் காட்டுகிறது. அதே தெப்பக்குளத்தில் கடந்த வியாழனன்று பெய்த தொடர் மழையால் நீர் நிறைந்து இருந்ததை அடுத்த படத்தில் காணலாம். படங்கள் : பு.க.பிரவீன்
8 / 44
9 / 44
தமிழக - வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானதையொட்டி... தமிழக அரசு சார்பில் ஒரு நாள் (1.10.2020) துக்கம் அனுசரிக்கப்பட்டட்தைத் தொடர்ந்து... தேசிய கொடி அரை கம்பத்தில் பறந்தது. படம்: பு.க.பிரவீன்
10 / 44
வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியதை அடுத்து... சென்னையில் தாம்பரத்தை அடுத்த வேங்கட மங்கலத்தில்... நெல் நடவுப் பணியை விவசாயிகள் நேற்று முதல் (1.11.2020) தொடங்கியுள்ளனர். படங்கள் :எம்.முத்துகணேஷ்
11 / 44
12 / 44
புதுச்சேரி - விடுதலை நவம்பர் - 1) தினத்தை முன்னிட்டு அணிவகுப்பு மரியாதையில் மூகக் கவசம் அணிந்து வந்த காவல் துறையினர். படங்கள்: எம்.சாம்ராஜ்
13 / 44
14 / 44
புதுச்சேரி - விடுதலை தினத்தை (நவம்பர் - 1) முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை காந்தி சிலையின் முன்பு தேசியக் கொடியை முதல்வர் நாராயணசாமி ஏற்றினார். படங்கள் : எம்.சாம்ராஜ்
15 / 44
16 / 44
புதுச்சேரி - விடுதலை தினத்தை (நவம்பர் - 1) முன்னிட்டு... காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் நாராயணசாமி ஏற்றுக்கொண்டார். படங்கள்: எம்.சாம்ராஜ்
17 / 44
18 / 44
புதுச்சேரி - விடுதலை நாளை முன்னிட்டு... புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று (1.11.2020) தேசியக் கொடியை ஏற்றி வைத்த முதல்வர் நாராயணசாமி. அருகில் அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், சபாநாயகர் சிவக்கொழுந்து. படங்கள் : எம்.சாம்ராஜ்
19 / 44
20 / 44
21 / 44
புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று (1.11.2020) (நடைபெற்ற புதுச்சேரி - விடுதலைநாள் கருத்தரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பாண்டியன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, திமுக அமைப்பாளர் சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் சலீம். படங்கள் : எம்.சாம்ராஜ்
22 / 44
23 / 44
கல்லறை திருநாளையொட்டி இன்று (2.11.2020) திருச்சி - குட்ஷெட் ஆர்.சி.எம்.சி கல்லறைத் தோட்டத்தின் ஒரு பிரிவில்... முகக்கவசம் அணிந்து கல்லறை திருநாளை அனுசரித்த கிறிஸ்தவர்கள். படங்கள்: ஜி.ஞானவேல் முருகன்
24 / 44
25 / 44
26 / 44
கல்லறை திருநாளையொட்டி இன்று (2.11.2020) திருச்சி - குட்ஷெட் ஆர்.சி.எம்.சி கல்லறைத் தோட்டத்தில் கல்லறையின் முன்பாக படையல் வைத்து கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். படங்கள்: ஜி.ஞானவேல் முருகன்
27 / 44
28 / 44
29 / 44
திருச்சியில் உள்ள ஆர்.சி.எம்.சி கல்லறைத் தோட்டத்தில் கரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக... நாளை முதல் (3.11.2020) 30 நாட்களுக்கு கல்லறை திருநாளை அனுசரிக்க வலியுறுத்தி பேனர் வைக்கப்பட்டுள்ளது. படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
30 / 44
விவசாயிகளைப் பெரிதும் பாதிக்கும் வேளாண்மை சட்டத் திருத்த மசோதக்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி.. திருச்சி அருணாசலம் மன்றத்தில்... கையெழுத்து இயக்கத்தை காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் சஞ்சய்தத் இன்று (2.11.1010) தொடங்கி வைத்தார். உடன் அக்கட்சியின் நிர்வாகிகள். படம்: ஜி.ஞானவேல்முருகன்.
31 / 44
திருச்சி - என்.எஸ்.பி சாலையில் தெப்பக்குளம் அருகே காவல் உதவி மையத்தை இன்று (2.11.2020) திருச்சி - மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் திறந்து வைத்து... சிசிடிவி கேமரா பதிவுகளைப் பார்வையிட்டார். படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்
32 / 44
33 / 44
கல்வி உதவித் தொகை மற்றும் முதியோர் உதவித் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... மதுரை ஆட்சியர் அலுவலகத்துக்கும் முன்பாக இன்று (2.10.2020) சீர் மரபினர் தங்களது வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் அட்டை நகல்களை... தெருவில் வீசியெறிந்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
34 / 44
தமிழகத்தில் உள்ள தியேட்டர்கள் அனைத்தும் விரைவில் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்... இன்று (2.11.2020) சென்னை - அண்ணா சாலையில் உள்ள தேவி தியேட்டரில் சுத்தப்படுத்தும் பணிகள் மற்றும் சமூக இடைவெளியை அறிவுறுத்தும் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் நடைபெற்றன. படங்கள்: ம.பிரபு
35 / 44
36 / 44
37 / 44
வடகிழக்குப் பருவமழை பெய்யத் தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே... பனிப் பொழிவும் நிகழ்ந்தது ஆச்சர்யமளிக்கிறது. சென்னை - புறநகர்ப் பகுதியான தாம்பரம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்... இன்று (2.11.2020) காலை 9 மணி வரையில் பனிப் பொழிவு இருந்தது. இவ்வேளையில் சூரியன் கூட வெகுநேரமாக மங்கலாகவே காட்சியளித்தது. படங்கள் : எம்.முத்துகணேஷ்
38 / 44
39 / 44
40 / 44
41 / 44
42 / 44
43 / 44
44 / 44

Recently Added

More From This Category

x