1 / 84
விஜயதசமியையொட்டி திருச்சி பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் நேற்று (26.10.2020) நடைபெற்ற மாணவர் சேர்க்கை நிகழ்ச்சியில் தமிழ் மொழியின் முதல் எழுத்தான 'அ' வை நெல் மணிகளில் எழுத வைத்த பெற்றோர்.
படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்
2 / 84
3 / 84
தமிழகத்தில் நவம்பர் 6-ம் தேதி முதல்... தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் தொடங்கவுள்ள ’வெற்றி யாத்திரை’ வெற்றி பெற முருகக் கடவுளை வேண்டி... சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் விஜயதசமி நாளான நேற்று (26.10.2020) காப்புக்கட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்
பாஜக நிர்வாகிகளுக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கைகளில் காப்பு கட்டி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
படங்கள்: ம.பிரபு
4 / 84
5 / 84
6 / 84
7 / 84
8 / 84
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமிக்கு நேற்று (26.10.2020) தங்கத்திலான புதிய பாண்டியன் கொண்டை சமர்ப்பிக்கப்பட்ட து. இந்தத் தங்கக் கொண்டையில் வைரம், மரகதப் பச்சை மற்றும் நீலக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளதாகவும்... 2,966 கிராம் தங்கம் கொண்ட இதன் மொத்த மதிப்பு ரூ.1.5 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டது.
படங்கள் : ம.பிரபு
9 / 84
10 / 84
11 / 84
சென்னை - ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு நேற்று (26.10.2020) வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் - ஏராளமான பெற்றோர் கலந்துகொண்டு தாம்பூலத் தட்டில் நிரப்பட்டு இருந்த நெல்மணிகளில் தங்களது குழந்தைகளின் கையைப் பிடித்து தமிழின் முதல் எழுத்தான 'அ' வை எழுத வைத்தனர்.
படங்கள் : பு.க.பிரவீன்
12 / 84
13 / 84
14 / 84
15 / 84
16 / 84
17 / 84
18 / 84
கோவை - சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் விஜயதசமியையொட்டி நேற்று (26.10.2020) நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை மடியில் அமர வைத்து... நெல் மணி பரப்பியிருந்த தாம்பாளத்தில் தமிழின் முதல் எழுத்தான ‘அ’ என்று எழுத வைத்தனர்.
படங்கள் : ஜெ .மனோகரன்
19 / 84
20 / 84
21 / 84
22 / 84
கோவை - சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் விஜயதசமியையொட்டி நேற்று (26.10.2020) நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை மடியில் அமர வைத்து... நெல் மணி பரப்பியிருந்த தாம்பாளத்தில் தமிழின் முதல் எழுத்தான ‘அ’ என்று எழுத வைத்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்கல் குழந்தைகளுக்கு கல்வியைத் தொடங்கி வைக்க... கோயிலுக்கு வெளியே வெயிலையும் பொருட்படுத்தாமல் குழந்தைகளின் மேல் வெயில் படாமல் அவர்கள் மேல் துணிகளைப் போர்த்தியபடி வரிசையில் பெற்றோர் காத்திருந்தனர். அப்படி காத்திருக்கும்போது அழும் குழந்தைகளை பொம்மை குதிரையில் உட்கார வைத்து பெற்றோர் குழந்தைகளை சமாதானப்படுத்தினர்.
படங்கள் : ஜெ .மனோகரன்
23 / 84
24 / 84
25 / 84
விஜயதசமியையொட்டி கோவை ராம்நகர் அங்கன்வாடி மையத்தில் விஜயதசமி நாளான நேற்று ((26.10.2020) மழலையர் வகுப்புகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க குழந்தைகளுடன் கலந்துகொண்ட பெற்றோர்.
படங்கள் : ஜெ.மனோகரன்
26 / 84
27 / 84
28 / 84
29 / 84
புதுச்சேரியில் தேர்தல் களம் இப்போதே சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டதையொட்டி... புதுவை மாநில எதிர் கட்சியான என்.ஆர். காங்கிரஸ் சார்பில் கிழக்கு கடற்கரைச் சாலையில் புதிய அலுவலகம் கட்டுவதற்கான... பூமி பூஜையை நேற்று (26.10.2020) அக்கட்சியின் தலைவர் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
படங்கள் : எம்.சாம்ராஜ்
30 / 84
31 / 84
விஜயதசமி நாளான நேற்று (26.102020) வித்யாரம்பம் நிகழ்ச்சி புதுச்சேரி - முத்தியால்பேட்டையில் உள்ள லட்சுமி ஹயக்கீரிவர் ஆலயத்தில் நடைபெற்றது. இதில் தங்களது குழந்தைகளை நெல் மணியில் தமிழில் முதல் எழுத்தான ‘அ’ வை ஏழுத வைக்க ஏராளமான பெற்றோர் குழுமியிருந்தனர்.
படங்கள் : எம்.சாம்ராஜ்
32 / 84
33 / 84
34 / 84
35 / 84
36 / 84
37 / 84
38 / 84
39 / 84
40 / 84
புதுச்சேரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லுாரி நிர்வாகத்தினர் சான்றிதழ்கள் வாங்க வரும் மாணவர்களை அலைகழிப்பததாக புகார் எழுந்துள்ளதையடுத்து... விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உழவர்கரை வட்டாட்சியர் அலுவலகத்தை நேற்று (26.10.2020) முற்றுகையிட வந்தனர். அந்த அலுவலகத்தின் கதவுகளை மூடி உள்ளே விட மறுத்தபோது விடுதலை சிறுத்தை கட்ட்சியினருக்கும் புதுவை போலீஸாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
படங்கள்: எம்.சாம்ராஜ்
41 / 84
42 / 84
விஜயதசமியை முன்னிட்டு... மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள சாரதா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நேற்று (26.10.2020) குழந்தைகளுக்கு வித்தியாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தங்கள் குழந்தைகளை நெல்மணியில் தமிழின் முதல் எழுத்தான ‘அவை’ பெற்றோர் எழுத வைத்தனர்.
படங்கள் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
43 / 84
44 / 84
45 / 84
46 / 84
47 / 84
48 / 84
சென்னை - மெரினா கடற்கரை பகுதியில் காமாரஜர் சாலையில்... பருவநிலை மாற்றத்தால் இன்று (27.10.2020) மதிய வேளையிலும் பணி மூட்டத்துடனேயே காணப்பட்டது வானிலை.
இடம்: படம்: பு.க.பிரவீன்.
49 / 84
50 / 84
51 / 84
52 / 84
53 / 84
மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கான தமிழக சட்டப்பேரவை மசோதாவுக்கு தமிழக ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி... மதுரை பழங்காநத்தம் பகுதியில் இன்று (27.10.2020) சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாக கவனஈர்ப்புப் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
54 / 84
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதை அடுத்து... காங்கிரஸ் கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் சஞ்சய் தத் தலைமையில் மதுரையில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் இன்று (27.10.2020) நடைபெற்றது. இதில் மதுரை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் மற்றும் அக்கட்சியின் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
55 / 84
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பெண்களை இழிவாகப் பேசியதாகக் கூறி... அவரை கண்டித்து பாஜக பெண்கள் அமைப்பு சார்பாக மதுரை ஜெயந்திபுரம் பகுதியில் இன்று (27.10.2020) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
56 / 84
புதுச்சேரி விடுதலை நாளாக நவம்பர் 1-ம் தேதியை கொண்டாடுவதையொட்டி... புதுச்சேரி - கடற்கரை சாலையில் இன்று (27.10.2020) அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் காவல் துறையினர் ஈடுபட்டனர்.
படங்கள்: எம்.சாம்ராஜ்
57 / 84
58 / 84
59 / 84
கடந்த 10 மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை வழங்கக் கோரி... புதுச்சேரி - அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள்... புதுவை சட்டப்பேரவை முன்பு இன்று (27.10.2020) போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கோரிமேடு போலீஸார் கைது செய்து.. சமுதாய நலக் கூடத்தில் தங்க வைத்திருந்தனர். இந்நிலையில் ஊதியத்தை பெறாமல் வீடுகளுக்கு திரும்ப மாட்டோம் எனக் கூறி ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படங்கள்: எம்.சாம்ராஜ்
60 / 84
61 / 84
62 / 84
புதுச்சேரி தீயணைப்புத் துறைக்கு 4 புதிய தீயணைப்பு வாகனங்களை... புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று (27.10.2020) வழங்கி... புதிய வாகனங்களின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
படங்கள்: எம்.சாம்ராஜ்
63 / 84
64 / 84
65 / 84
மருத்துவ கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டுக்கான மசோதாவுக்கு... தமிழக ஆலுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி... அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் இன்று (27.10.2020) சென்னை - வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படம்: ம.பிரபு
66 / 84
முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான வாழப்பாடி ராமமூர்த்தியின் நினைவு நாளையொட்டி... சென்னை - சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று (27.10.2020)
அவரது உருவப்படத்துக்கு அக்கட்சி நிர்வாகிகள் மலர் தூவி... அஞ்சலி செலுத்தினர் படம் : ம.பிரபு
67 / 84
ஆண்டுக்கு 3 பருவங்களில் பயிரிடப்படும் பச்சை மிளகாய் செடிகளை பூஞ்சைத் தாக்குதலில் இருந்து பாதுகாக்க வேண்டி...வேலூரை அடுத்த அப்துல்லாபுரத்தில்... மருந்து தெளிக்கும் பணியில் இன்று (27.10.2020) மும்முரமாக ஈடுபட்டுள்ள விவசாயி ஒருவர்.
படம் : வி.எம்.மணிநாதன்
68 / 84
69 / 84
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் வில்லிவாக்கம் பகுதியில் ஐ.சி.எப் சாலையின் சுற்றுச் சுவரையொட்டி மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் - இப்பாலத்தில் இருந்து கீழ் நோக்கி வரும் சாலை கட்டும் பணிக்கு இடையூறாக அமைந்திருந்த 32 குடும்பத்தினருக்கு... வில்லிவாக்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ப.ரெங்கநாதனின் முயற்சியால்... அம்பத்தூர் அத்திப்பட்டு திட்டப் பகுதியில் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து இன்று (27.10.2020) 32 குடும்பத்தினரும் மாநகராட்சி மூலம் அத்திப்பட்டு பகுதிக்கு ப.ரெங்கநாதன் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து மீண்டும் மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகளை தொடங்கின.
படங்கள் : ம.பிரபு
70 / 84
71 / 84
72 / 84
73 / 84
துரைப்பாக்கம் - பல்லாவரம் ரேடியல் சாலையில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் மேம்பாலப் பணிகள் தற்போது மீண்டும் வேகம் எடுத்துள்ளது. கீழ்கட்டளை அருகே அமைந்துள்ள பாலத்தின் திறப்பு விழா அநேகமாக டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
படங்கள்: எம் .முத்துகணேஷ்
74 / 84
75 / 84
76 / 84
77 / 84
78 / 84
79 / 84
80 / 84
சென்னையின் புறநகர் பகுதியான பெருங்களத்தூரில் கட்டப்பட்டு வரும் பாலத்தின் கட்டுமானப் பணிகள் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. இதற்காக - இச்சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டைகள் (சென்டர் மீடியன்) அனைத்தும் அகற்றப்பட்டு சாலையை அகலப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
81 / 84
82 / 84
83 / 84
84 / 84