Published on : 24 Oct 2020 16:35 pm

பேசும் படங்கள்... (24.10.2020)

Published on : 24 Oct 2020 16:35 pm

1 / 44
ஆயுத பூஜையை முன்னிட்டு... பல வியாபார கடைகளில், நிறுவனங்களில் சுத்தம் செய்து வண்ணம் பூசி புதுப்பொலிவுடன் இப்பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். இந்நாளில் அந்நிறுவனங்களில் முகப்பில் திருஷ்டி பொம்மைகள் மற்றும் பொருட்களை கட்டிவிடுவதையும் வழக்கமாக அவர்கள் கொண்டுள்ளனர். இந்நிலையில் மதுரை - மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே திருஷ்டி பொம்மைகள் விற்கிறார் ஒரு பெண்மணி. படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
2 / 44
நாளை நடைபெறவுள்ள ஆயுத பூஜை மறுநாள் கொண்டாடவுள்ள விஜயதசமி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு... கோவை ஆர்.எஸ்.புரம் மலர் சந்தையில்... பூஜைப் பொருட்களான பூக்கள், பழங்கள், பொரி, கடலை, கரும்பு, திருஷ்டி கழிக்க பூசணிக்காய் போன்றவற்றை வாங்க இன்று (24.10.2020) பொதுமக்கள் திரண்டிருந்தனர். படங்கள் : ஜெ.மனோகரன்
3 / 44
4 / 44
5 / 44
6 / 44
7 / 44
8 / 44
9 / 44
10 / 44
11 / 44
நாளை நடைபெறவுள்ள ஆயுத பூஜை மறுநாள் கொண்டாடவுள்ள விஜயதசமி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு... பூஜைப் பொருட்களான பூக்கள், பழங்கள், பொரி, கடலை, கரும்பு, தேங்காய், திருஷ்டி கழிக்க பூசணிக்காய் போன்றவற்றை வாங்க இன்று (24.10.2020) மதுரை - கீழமாசி வீதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
12 / 44
13 / 44
14 / 44
அமாவாசை மற்றும் சில பண்டிகை நாட்களில் சில வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்களில் திருஷ்டி கழிவதற்காக பூசணிக்காய் உடைப்பது வழக்கம். இதேபோல் மதுரை மத்திய சிறைச்சாலையின் முன்பு வாராவாரம் வெள்ளிக்கிழமையன்று சிறைச்சாலைக்கு திருஷ்டி சுற்றி... பூசணிக்காய் உடைக்கிற வழக்கத்தில் இன்றும் (24.10.2020) அவ்வாறு பூசணிக்காய உடைத்தனர். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
15 / 44
நாளை நடைபெறவுள்ள ஆயுத பூஜை மறுநாள் கொண்டாடவுள்ள விஜயதசமி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு... சென்னை - பாரிமுனையில் பூஜைப் பொருட்களான பூக்கள், பழங்கள், பொரி, கடலை, கரும்பு, திருஷ்டி கழிக்க பூசணிக்காய், தேங்காய் போன்றவற்றை விற்க இன்று (24.10.2020) எராளமான தற்காலிகக் கடைகள் முளைத்திருந்தன. படம் : ம.பிரபு
16 / 44
நாளை நடைபெறவுள்ள ஆயுத பூஜை மறுநாள் கொண்டாடவுள்ள விஜயதசமி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு... பூஜைப் பொருட்களான பூக்கள், பழங்கள், பொரி, கடலை, கரும்பு, திருஷ்டி கழிக்க பூசணிக்காய் போன்றவற்றை வாங்க இன்று (24.10.2020) சென்னை - பாரிமுனையில் அதிக அளவில் மக்கள் கூடியதால் சாலையின் இருபுறங்களிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது. படம்: ம.பிரபு
17 / 44
சென்னை - பத்ரியன் தெரு மலர் சந்தையில் ஆயுதபூஜையை முன்னிட்டு அதிக அளவில் பொதுமக்கள் பூக்கள் வாங்க இன்று (24.10.2020) திரண்டிருந்தனர். படங்கள்: ம.பிரபு
18 / 44
19 / 44
பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை தினத்தையொட்டி... சென்னையின் முக்கிய இடங்களில் இருந்து மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இன்று (24.10.2020) முதல் சென்னையின் மையப் பகுதியான பாரிமுனை பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்பட்டன. படங்கள் : ம.பிரபு
20 / 44
21 / 44
22 / 44
நாளை நடைபெறவுள்ள ஆயுத பூஜை மறுநாள் கொண்டாடவுள்ள விஜயதசமி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு... திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பூஜைப் பொருட்களான பூக்கள், பழங்கள், பொரி, கடலை, கரும்பு, திருஷ்டி கழிக்க பூசணிக்காய் போன்றவற்றை வாங்க இன்று (24.10.2020) பொதுமக்கள் திரண்டிருந்தனர். படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்
23 / 44
24 / 44
25 / 44
26 / 44
27 / 44
28 / 44
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தில் இன்று (24.10.2020) திருச்சியில் ஆட்சியர் அலுவலகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்
29 / 44
30 / 44
மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கக் கோரி... திமுகவின் சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் .... சென்னையில் ஆளுநர் மாளிகையின் முன்பு இன்று (24.10.2020) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படங்கள் : பு.க.பிரவீன்
31 / 44
32 / 44
33 / 44
34 / 44
35 / 44
36 / 44
37 / 44
38 / 44
39 / 44
40 / 44
41 / 44
கரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நிகழ்ச்சிகள் தற்போது இணையவழியில் நேரலையாக ஒளிபரப்பப்படுகின்றன. இந்நிலையில் சென்னை - தியாகராய நகரில் அமைந்துள்ள பெங்கால் அசோசியேஷன் (வங்காளிகள் சங்கம்) சார்பில் ஸ்ரீ துர்க்கை வழிபாடு இணையவழியில் நேரலையாக இன்று (24.10.2020) ஒளிபரப்பப்பட்டது. படங்கள் : பு.க.பிரவீன்
42 / 44
43 / 44
44 / 44

Recently Added

More From This Category

x