1 / 75
வெங்காயத்தின் கடுமையான விலையேற்றத்தைத் தொடர்ந்து... புதுச்சேரியில் மொத்த விற்பனை கடைகள் மற்றும் குடோன்களில் புதுச்சேரி - அமைச்சர் கந்தசாமி தலைமையில் அரசு அதிகாரிகள் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதான் என இன்று (22.10.2020) ஆய்வு செய்தனர்.
படங்கள் : எம்.சாம்ராஜ்
2 / 75
3 / 75
4 / 75
5 / 75
கரோனா தொற்றுப் பரவலைத் தொடர்ந்து கடந்த 7 மாதங்களாக
புதுச்சேரியில் இயங்காமல் இருந்த தனியார் பேருந்துகள் (22.10.2020) முதல் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து... கிராமப் பகுதிகளுக்கு இயங்க தொடங்கின
படம் : எம்.சாம்ராஜ்
6 / 75
அதிகளவில் வெங்காயத்தை இருப்பு வைக்கும் வகையில் சென்னை - கோயம்பேட்டில் குடோன் வசதிகளை அரசு செய்து தரவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும்... வெங்காயத்தை அதிகளவில் இருப்பு வைக்க தற்போது வசதியில்லாததாலும்... கோயம்பேடு சில்லரை வியாபாரிகள் அமைப்பு சார்பில்
விருகம்பாக்கம் பகுதியில் வெங்காயத்தை இலவசமாக வழங்கப்பட்டது
படங்கள்: ம.பிரபு
7 / 75
8 / 75
9 / 75
10 / 75
11 / 75
12 / 75
சென்னையில் கடந்த இரு நாட்களாக பெய்த மழையின் காரணமாக - மதுரவாயலில் செயல்படும் பூ மார்கெட் முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளதால் பூ வாங்க வரும் வியாபாரிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாயினர்.
படங்கள்: ம.பிரபு
13 / 75
14 / 75
15 / 75
16 / 75
17 / 75
18 / 75
19 / 75
20 / 75
விடுமுறை தினம், ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு மதுரவாயலில் செயல்படும் பூ மொத்த விற்பனை மார்க்கெட்டில் இன்று (23.10.2020) காலையில் பூ வாங்க வியாபாரிகளும் பொதுமக்களும் சமுக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு அதிகளவில் திரண்டிருந்தனர்.
படங்கள் : ம.பிரபு
21 / 75
22 / 75
23 / 75
24 / 75
விடுமுறை தினம், ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு.... மாதவரம் பேருந்து நிலையத்தில் செயல்பட்டுவரும் பழங்கள் மொத்த மார்க்கெட்டில் இன்று (23.10.2020) அதிகாலையில் இருந்தே பழ விற்பனை சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது.
படங்கள்: ம.பிரபு
25 / 75
26 / 75
27 / 75
28 / 75
29 / 75
30 / 75
31 / 75
ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் விடுமுறை தினம் ஆகியவற்றை முன்னிட்டு புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் அதிகளவில் சாமந்திப் பூக்கள் விற்பனைக்காக கொட்டி வைக்கப்பட்டுள்ளன.
படம் : எம்.சாம்ராஜ்
32 / 75
ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம், - செஞ்சியில் இருந்து புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் விற்பனைக்காக வந்துள்ள சாமந்திப் பூக்களை மூட்டைகளில் இருந்து பிரித்து எடை போடும் பணியில் ஊழியர்கள் இன்று (23.10.2020) ஈடுபட்டனர்.
படம் : எம்.சாம்ராஜ்
33 / 75
ஆயுதபூஜையை முன்னிட்டு பொரி, கடலை, அவல், வெல்லம், உள்ளிட்ட பொருட்கள் புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் விற்பனைக்காக இன்று (23.10.2020) குவிக்கப்பட்டுள்ளன
இடம்: எம்.சாம்ராஜ்
34 / 75
35 / 75
ஆயுதபூஜையை முன்னிட்டு புதுச்சேரி - நெல்லித்தோப்பு மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக வந்துள்ள பூசணியை அடுக்கி வைக்கும் ஊழியர்.
படங்கள் : எம்.சாம்ராஜ்
36 / 75
37 / 75
நவராத்திரி மற்றும் ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு மதுரை - யானைக்கல் பகுதியில் உள்ள வாழைக்காய் மண்டியில் சில்லரை மற்றும் மொத்த விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள வாழைத்தார்கள்.
படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
38 / 75
கரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி தீயணைப்புத் துறையினரால்... இன்று (23.10.2020) மதுரை நீதிமன்றம் பகுதியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக நடைபெற்றது. இதில் கரோனா விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் பொதுமக்களிடம் தீயணைப்புத் துறையினரால் வழங்கப்பட்டன.
படங்கள் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
39 / 75
40 / 75
கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து... நேற்று (22.10.2020) அத்தண்ணீரில் வரும் மீன்களை அப்பகுதியினர் மூங்கில் கூடைகளில் பிடித்து அங்கேயே விற்பனை செய்தனர்.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
41 / 75
42 / 75
43 / 75
44 / 75
45 / 75
46 / 75
47 / 75
48 / 75
49 / 75
50 / 75
51 / 75
பூண்டி ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் நேற்று (22.10.2020) தண்டலம் பகுதியில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வந்து சேர்ந்தது.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
52 / 75
53 / 75
54 / 75
55 / 75
56 / 75
57 / 75
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரில் ஒரு பகுதி செம்பரம்பாக்கம் ஏரிக்கும் திருப்பிவிடப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியின் நுழைவாயிலான தண்டலம் பகுதி கால்வாயில் நேற்று (22.10.2020) ஆர்ப்பரித்து நுழைந்த தண்ணீர்.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
58 / 75
59 / 75
60 / 75
61 / 75
62 / 75
63 / 75
துர்கா பூஜையை முன்னிட்டு... நேற்று (22.10.2020) சென்னை - மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தில் துர்கை வழிபாடு சிறப்பாக நடைப்பெற்றது.
படங்கள் : பு.க.பிரவீன்
64 / 75
வடகிழக்குப் பருவ மழை விரைவில் தீவிரமடையவுள்ள நிலையில்... சென்னையின் பிரதான வடிகால் அமைப்பான அடையாறு ஆற்றை தூர்வாரி கரையை உயர்த்தும் பணிகள் சைதாப்பேட்டை பகுதியில் மும்முரமாக தற்போது (22.10.2020) நடைபெற்று வருகின்றன.
படங்கள்: பு.க.பிரவீன்
65 / 75
66 / 75
சென்னை- தேனாம்பேட்டையில் உள்ள பண்ணைப் பசுமை கடையில்...
ஒரு கிலோ வெங்காயம் ரூ.45 க்கு விற்கப்பட்டதைத் தொடர்ந்து... வெங்காயம் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் நேற்று (22.10.2020) பொதுமக்கள் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.
படங்கள்: ம.பிரபு
67 / 75
68 / 75
69 / 75
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் 69- வது பிறந்த நாளையொட்டி நேற்று (22.10.2020) சென்னை
- சத்தியமூர்த்தி பவனில் 69 கிலோ எடையுள்ள கேக்கை... அக்கட்சியின் செயல் தலைவர் கே.ஜெயக்குமார் எம்பி வெட்டினார். அருகில் துணை தலைவர் ஆர்.தாமோதரன், பொதுச் செயலர்கள் கே.சிரஞ்சீவி, டி.செல்வம், மற்றும் சுதா, ஜாண்சி ராணி, மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம்.
படம் : ம.பிரபு
70 / 75
சென்னை - விமான நிலைய விரிவாக்க பணிகள் பிரமாண்ட அளவில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இப்பணிகளுக்காக ராட்சத கிரேன்கள் மூலம் கர்டர்கள் பொருத்தும் பணியில் ஊழியர்கள் தற்போது (23.10.2020) ஈடுபட்டுள்ளனர்.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
71 / 75
72 / 75
73 / 75
74 / 75
75 / 75