1 / 49
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலகக் கோரியும்... மனிஷா வால்மிகி குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும்... மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பாக இன்று (12.10.2020) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
2 / 49
வேளாண் சட்டத் திருத்த மசோதாக்களை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும்; நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும்; தொழிலாளர் சட்டத் திருத்தங்களை வாபஸ் வாங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மதுரை தலைமை அஞ்சல் நிலையம் முன்பு இன்று ( 12.10.2020) முன்பு மறியல் நடைபெற்றது.
படம் ; எஸ். கிருஷ்ணமூர்த்தி
3 / 49
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவினை வரும் அக்.30-ம் தேதி வழக்கம் போல கொண்டாடுவதற்கு அனுமதி வழங்குமாறு... நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் இன்று மனு கொடுக்க வந்தனர்.
படம் : எஸ் கிருஷ்ணமூர்த்தி
4 / 49
டிஜிபி அலுவலகத்தில் தாங்கள் கொடுத்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; காவல் துறையினர் யாரும் கைது செய்யப்படவில்லை எனக் கோரி
ஏகத்துவ ஜமாத் அமைப்பின் மாநில தலைவர் வேலூர் இப்ராஹிம் தலைமையில்
அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் சென்னை காந்தி சிலையில் இருந்து தலைமைச் செயலகம் வரை சென்று மனு அளிக்கச் சென்றனர். அவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி தலைமை செயலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
படங்கள் : ம.பிரபு
5 / 49
6 / 49
7 / 49
8 / 49
’பிங்க் அக்டோபர்’ என அழைக்கப்படும் ’மார்பகப் புற்றுநோய்’ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி... சென்னை - ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இன்று (12.10.2020) நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தலைமையில் மருத்துவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். உடன் - மருத்துவர் பாலாஜி, இணை இயக்குநர் சபிதா, கல்லூரி துணை முதல்வர் சகுந்தலா ராஜசேகர் மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்டனர்.
படங்கள்: ம.பிரபு
9 / 49
10 / 49
வரும் 16-ம் தேதி முதல் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதையொட்டி... சென்னை - கொசப்பேட்டையில் பொம்மைகள் தயாரிக்கப்பட்டு... விற்பனைக்கும் அனுப்பும் முன்பு பொம்மைகளின் வண்ணங்கள் சரிசெய்யப்படுகின்றன.
படங்கள் : ம.பிரபு
11 / 49
12 / 49
13 / 49
14 / 49
புதுச்சேரி - வாழைக்குளம் அக்காசாமி மடம் வீதியில் இன்று (12.10.2020) ஒரு ஆட்டோ ஓட்டுநர் வீட்டின் முன்பு... மர்ம ஆசாமிகள் நாட்டு குண்டை வீசியுள்ளனர். அந்த நாட்டு வெடிகுண்டு வெடித்த இடத்தை ஆட்டோ ஓட்டுநர் சுட்டி காட்டினார்.
படங்கள் : எம்.சாம்ராஜ்
15 / 49
16 / 49
கரோனா தொற்றுக்காக அமலில் இருந்த ஊரடங்கில் சில தளர்வுகள் இப்போது அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புதுச்சேரியில் பள்ளிகளில் 2-வது கட்டமாக இன்று (12.10.2020) 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்புகள் தொடங்கப்பட்டன. திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு கைளில் கிருமி நாசினி வழங்கப்பட்டு, உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டது.
படங்கள்: எம்.சாம்ராஜ்
17 / 49
18 / 49
19 / 49
20 / 49
21 / 49
22 / 49
தமிழகம் முழுவதும் வருகிற 2 நாட்களுக்கு பரவலாக மழை இருக்கும் என்று வானிலை அறிவித்துள்ள நிலையில்... இன்று (12.10.2020) சென்னை நகரில் மாலைப்பொழுதில் பல இடங்களில் மழை பெய்தது. கோயம்பேடு நெடுஞ்சாலையில் மழை நீரில்... வண்ண விளக்குகள் பிரபலித்ததை காண ரம்மியமாக இருந்தது.
படங்கள்: ம.பிரபு
23 / 49
24 / 49
25 / 49
26 / 49
சென்னை - அண்ணா சாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில்... மெய்நிகர் உண்மை (virtual reality) கருவி புதிதாக பொருத்தப்பட்டுள்ளது. அக்கருவியின் மூலம் அங்கு விற்பனைக்கு வைத்துள்ள அழகுச் சிலைகளின் முப்பரிமாணத்தையும் பார்வையிடும் வாடிக்கையாளர்.
படங்கள் : பு.க.பிரவீன்
27 / 49
28 / 49
29 / 49
30 / 49
சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் பெண் காவலர்களுக்கான ஒதுக்கீட்டின்கீழ் காவல் உதவி ஆய்வாளருக்கான உடற்தகுதித் தேர்வு இன்று (12.10.2020) நடைபெற்றது. இதில் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற காவலர்கள்.
படங்கள் : பு.க.பிரவீன்
31 / 49
32 / 49
33 / 49
34 / 49
35 / 49
தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (12.10.2020) மாலை திடீரென மழை கொட்டித் தீர்த்தது. சிறிது நேரமே மழை பெய்திருந்தாலும்.... சாலைகளில் மழைநீர் தேங்கியது. பெருங்களத்தூர் பகுதியில் ஜிஎஸ்டி சாலையில் பெருமளவு தேங்கிய நீரால் நீண்ட தூரம் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் அங்கு வந்த போக்குவரத்து போலீஸார் ஒருவர் மழைநீர் வடிகால் கால்வாயில்... தேங்கிய நீரை குத்திவிட... மழை நீர் வடிந்தது, போக்குவரத்தும் சீரானது. சரியான சமயத்தில் சமயோசிதமாக செயல்பட்ட போலீஸ்காரருக்கு ஒரு சபாஷ்!
படங்கள் : எம்.முத்து கணேஷ்
36 / 49
37 / 49
38 / 49
39 / 49
40 / 49
41 / 49
42 / 49
43 / 49
தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (12.10.2020) மாலையில் திடீரெனப் பெய்த மழையின் காரணமாக முடிச்சூர் சாலையில் மழைநீர் சூழ்ந்தது. மழைநீரில் அணிவகுக்கும் வாகனங்கள்.
படங்கள் : எம்.முத்து கணேஷ்
44 / 49
45 / 49
46 / 49
47 / 49
48 / 49
வண்டலூர் ஏரியில் இயந்திரங்கள் கொண்டு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஏரியின் நடுவில் - மணல் திட்டுகள், மரங்கள் என பறவைகள் சரணாலயம் போல அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் நிறைவடைந்தால் ஏரி முழுவதும் வரும் வட கிழக்கு பருவமழையின்போது நீர் நிரம்பி அழகு மிளிரும்..
படங்கள் : எம்.முத்து கணேஷ்
49 / 49