1 / 39
சில நாட்களுக்கு முன்பு தமிழக மீனவர்கள் 8 பேர் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திசைமாறி மியான்மர் பகுதிக்குச் சென்றுவிட்டனர். அவர்கள் வெளியுறவு அமைச்சக உதவியுடன் தமிழக அரசால் மீட்கப்பட்டு இன்று (8.10.2020) சென்னை விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அந்த மீனவர்களை அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று மாலை அணிவித்து வரவேற்றார். அப்போது அங்கு வந்த திமுக மாவட்டச் செயலர் சுதர்சனம் மற்றும் அக்கட்சியினர் மீட்கப்பட்ட மீனவர்களுக்கு சால்வை அண்வித்தனர். இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த சிலர் தீடீரென்று ’’மு.க.ஸ்டாலின் வாழ்க...’’ என கோஷமிட்டதால் அந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
2 / 39
3 / 39
4 / 39
5 / 39
6 / 39
7 / 39
8 / 39
சென்னை - காந்தி மண்டபம் சாலையில் உள்ள காந்தி மண்டபம் பேருந்து நிறுத்தத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரை தாழ்வாக இருப்பதுடன்... சேதமடைந்து எந்த நேரத்திலும் பயணிகள் தலையில் விழலாம் என்கிற நிலையில் காணப்படுகிறது. எனவே - விபத்து ஏற்படுவதற்கு முன்பாக இது தொடர்புள்ள துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
படங்கள் : க.ஸ்ரீபரத்
9 / 39
10 / 39
’கரோனா’ தொற்றுத் தடுப்பு முன்னெச்சரிக்கையை முன்னிட்டு அமலில் இருந்த ஊரடங்கு காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் 6 மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரியில் இன்று (8.10.2020) முதல் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் தொடங்கின. இதையடுத்து இன்று காலையில் பள்ளி செல்வதற்கு முன்பாக மாணவ - மாணவியர் மணக்குள விநாயகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
படங்கள்: எம்.சாம்ராஜ்
11 / 39
12 / 39
’கரோனா’ தொற்றுத் தடுப்பு முன்னெச்சரிக்கையை முன்னிட்டு அமலில் இருந்த ஊரடங்கு காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் 6 மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரியில் இன்று (8.10.2020) முதல் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் தொடங்கின. இதையடுத்து இன்று காலையில் புதுச்சேரி - மணக்குல விநாயகர் கோயிலில் பள்ளி செல்வதற்கு முன்பாக ஒரு மாணவியின் தந்தை ‘’புள்ளையாரப்பா ரொம்ப நாளைக்கு பிறகு மகள் பள்ளிக்கூடத்துக்கு படிக்கப் போறா... காத்து, கருப்பு, கரோனா எதுவும் அண்டாம நீதான் காப்பாத்தணும்...’’ என்று மனம் உருகி வேண்டிக்கொண்டார்.
13 / 39
’கரோனா’ தொற்றுத் தடுப்பு முன்னெச்சரிக்கையை முன்னிட்டு அமலில் இருந்த ஊரடங்கு காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் 6 மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரியில் இன்று (8.10.2020) முதல் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் தொடங்கின. இதையடுத்து இன்று காலையில் புதுச்சேரி - மணக்குல விநாயகர் கோயிலில் ’’கரோனாவுக்கு மருந்தும் இல்லை... பள்ளிக்கூடமும் திறந்துட்டாங்க... விநாயகா நீதான் என்னை காப்பாத்தனும்..’’ என வேண்டிக்கொண்டு சந்நிதானத்தில் சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கும் ஒரு மாணவன்.
படம்: எம்.சாம்ராஜ்
14 / 39
’கரோனா’ தொற்றுத் தடுப்பு முன்னெச்சரிக்கையை முன்னிட்டு அமலில் இருந்த ஊரடங்கு காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் 6 மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரியில் இன்று (8.10.2020) முதல் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் தொடங்கின. இதையடுத்து இன்று காலையில் புதுச்சேரி - மணக்குல விநாயகர் கோயிலில் பள்ளிக்கு செல்லும் முன்பாக புதுச்சேரி மணக்குள விநாயகர் ஆலயத்தில் தந்தையுடன் சுவாமி தரிசனம் செய்யும் மாணவன்.
படம்: எம்.சாம்ராஜ்
15 / 39
’கரோனா’ தொற்றுத் தடுப்பு முன்னெச்சரிக்கையை முன்னிட்டு அமலில் இருந்த ஊரடங்கு காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் 6 மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரியில் இன்று (8.10.2020) முதல் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் தொடங்கின. இதையடுத்து இன்று காலையில் பள்ளி செல்லும் தன் மகளுக்கு முகக்கவசம் வாங்கும் தந்தை.
படம்: எம்.சாம்ராஜ்
16 / 39
’கரோனா’ தொற்றுத் தடுப்பு முன்னெச்சரிக்கையை முன்னிட்டு அமலில் இருந்த ஊரடங்கு காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் 6 மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரியில் இன்று (8.10.2020) முதல் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் தொடங்கின. இந்நிலையில் பள்ளிக்கு வரும் மாணவ - மாணவியர் தங்கள் பெற்றோரின் அனுமதிக் கடிதத்துடன் வர வலியுறுத்தப்பட்டுள்ளதால்... புதுச்சேரி - சுப்பிரமணி பாரதியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோரின் அனுமதி கடிதத்தை ஆசிரியர்களிடம் காண்பிக்கும் மாணவி.
படம்: எம்.சாம்ராஜ்
17 / 39
’கரோனா’ தொற்றுத் தடுப்பு முன்னெச்சரிக்கையை முன்னிட்டு அமலில் இருந்த ஊரடங்கு காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் 6 மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரியில் இன்று (8.10.2020) முதல் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் தொடங்கின. இதையடுத்து இன்று காலையில் புதுச்சேரி - பஸ்ஸி வீதியில் நண்பர்களுடன் சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்.
படம் : எம்.சாம்ராஜ்
18 / 39
புதுச்சேரியில் கரோனா பாதிப்பு இன்னும் குறையவே இல்லை... இந்நிலையில் பள்ளிகளைத் திறப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்
என வலியுறுத்தி... புதுச்சேரி - உப்பளம் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன்... இன்று (8.10.2020) காலையில் ஆட்டுப்பட்டி பகுதியில் அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியின் நுழைவுவாயிலை இழுத்து மூடி... போராட்டத்தில் ஈடுபட்டார்.
படங்கள்: எம்.சாம்ராஜ்
19 / 39
20 / 39
நவராத்திரி பண்டிகை வரும் 17-தேதி முதல் தொடங்குவதையொட்டி ’கரோனா’ தொற்றுப் பரவல் காரணமாக... வேலூர் சலவன்பேட்டைப் பகுதியில் வழக்கத்தைவிட குறைந்த எண்ணிக்கையிலான கொலு பொம்மைகளை தயார் செய்து வண்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.
படங்கள்: வி.எம்.மணிநாதன்.
21 / 39
22 / 39
23 / 39
24 / 39
சென்னை - எழும்பூர் அருங்காட்சியகம்... ஆசிய நிதி உதவி மற்றும் தமிழக அரசு சார்பில் ரூ.20 கோடி செலவில் புணரமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் கடந்த ஓர் ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.
மாற்றியமைக்கப்பட்ட பாதுகாப்பான மின்சார வசதிகள், உட்புறம் முழுவதும் புதிய சாலைகள், மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு... ஓரே இடத்தில் நீர் சேமிப்பு, இரவில் ஒளிரும் வகையில் வண்ண விளக்குகள், நுழைவாயில் கட்டணம் செலுத்த டிஜிட்டல்மயமாக்கம் போன்ற அம்சங்களுடன் புதுப்பொலிவு பெற்று வருகிறது.
இந்த அருங்காட்சியகத்தில் உள்ள 110 ஆண்டு பழமைகொண்ட விக்டோரியா ஹால் கட்டிடம்.... அதன் பழமைத்துவம் மாறாமல் தமிழக அரசு நிதியுதவியுடன் புதுப்பிக்கப்படுகிற்து. மேலும் இங்கு திறந்தவெளி அரங்குகள் மற்றும் குடில்களும் அமைக்கப்படுகின்றன.
படங்கள் மற்றும் தகவல் : ம.பிரபு
25 / 39
26 / 39
27 / 39
28 / 39
29 / 39
30 / 39
சென்னை நகர் பகுதிகளில் ‘கரோனா’ தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த அதிக அளவில் சிறப்பு மருத்துவ முகாகள் சென்னை மாநகராட்சி சார்பில் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. அண்ணா நகர் மண்டலம் என்.எஸ்.கே சாலைப் பகுதியில் நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியும் 2-ம்கட்ட மருத்துவ சிறப்பு முகாமை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அரசு முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று (8.10.2020) பார்வையிட்டார். உடன் சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் ஆகியோர்.
படங்கள் : ம.பிரபு
31 / 39
32 / 39
33 / 39
34 / 39
35 / 39
36 / 39
சென்னை எண்ணூரில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில்... மெட்ரோ ரயலைப் போன்ற ஓவியம் அழகுற வரையப்பட்டுள்ளது.
படங்கள்: பு.க.பிரவீன்
37 / 39
38 / 39
39 / 39