Published on : 05 Oct 2020 21:40 pm

பேசும் படங்கள்... (05.10.2020)

Published on : 05 Oct 2020 21:40 pm

1 / 54
அத்தியாவசியப் பணிகளுக்கான ஊழியர்களை மட்டும் ஏற்றிச் செல்லும் வகையில் மின்சார ரயிலை இயக்க வேண்டும் என தென்னக ரயில்வே துறையை தமிழக அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி அரசு ஊழியர் என்பதற்கான அடையாள அட்டையை காண்பித்து... பயணச்சீட்டு பெற்றுக்கொண்டு பயணிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில்.... இந்த தகவல் பரவலாக தெரியாததால் இன்று (5.10.2020) தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயிலில் பயணிக்கும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே காணப்பட்டது. படங்கள் :.எம் முத்து கணேஷ்
2 / 54
3 / 54
4 / 54
5 / 54
6 / 54
7 / 54
8 / 54
9 / 54
மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்களுக்காக மட்டும் சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி மார்க்கமாக இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயிலில் இன்று (5.10.2020) முதல் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அத்தியாவசியப் பணியாளர்களும் அனுமதிக்கப்பட்டதால் திருவள்ளூரில் இருந்து சென்ட்ரல் வந்த ரயிலில் 5 மாதங்களுக்குப் பிறகு பயணிகளின் எண்ணிக்கை அதிகம் காணப்பட்டது. படங்கள் : ம.பிரபு
10 / 54
11 / 54
12 / 54
வட சென்னை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சார்பில்... இன்று (5.10.2020) சென்னை - மின்ட் தெருவில் உள்ள ஆதியப்பா சாலை எதிரே தீயணைப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தீயை எப்படி அணைப்பது? தீப்பிடித்த இடத்தில் சிக்கிக் கொண்டவர்களை எப்படி காப்பாற்றுவது? எவ்வாறு முதலுதவி அளிப்பது போன்ற பாதுகாப்பு செயல்பாடுகள் செய்து காட்டப்பட்டன. படங்கள் : க.ஸ்ரீபரத்
13 / 54
14 / 54
15 / 54
16 / 54
17 / 54
18 / 54
19 / 54
20 / 54
21 / 54
22 / 54
மதுரை - பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள திடீர் நகர் பகுதியில்... நேற்று இரவு ரவுடி கும்பலால் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் அடித்து நொறுக்கப்பட்டதைக் கண்டித்து... திடீர் நகர் பகுதி பொதுமக்கள் இன்று (5.10.2020) சாலை மறியலில் ஈடுபட்டனர். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
23 / 54
24 / 54
25 / 54
26 / 54
சென்னை - யானை கவுனி பாலம் புதுப்பிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில்... அதற்காக பாலத்தின் துண்களை ஜெசிபி இயந்திங்கள் மூலமாக இடிக்கும் பணி இன்று (5.10.2020) நடந்து வருகிறது. படம் : பு.க.பிரவீன்
27 / 54
28 / 54
29 / 54
30 / 54
31 / 54
32 / 54
33 / 54
34 / 54
தமிழகத்தில் அதிகரித்து வரும் காவல் நிலைய சித்திரவதைப் படுகொலையைக் கண்டித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே... ’காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம்’ சார்பாக இன்று (5.10.2020) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம்; எஸ்.கிருஷ்ணமூர்த்தி
35 / 54
வேளாண்மை பொறியியல் துறை சார்பில்... விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் வேளாண் பணிகளுக்குரிய மண் அள்ளும் இயந்திரங்கள், டிராக்டர்களை குறைந்த வாடகையில் வழங்கும் செயல்பாடுகளை முதல்வர் பழனிசாமி இன்று (5.10.2020) தொடங்கி வைத்தார். படங்கள்: க.ஸ்ரீபரத்
36 / 54
37 / 54
38 / 54
39 / 54
உத்தரப்பிரதேசத்தில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி... தாக்கப்பட்டதைக் கண்டித்து... புதுச்சேரி அமைப்புசாரா காங்கிரஸ் கட்சி சார்பில்... புதுச்சேரி - ராஜா தியேட்டர் சந்திப்பில் மணி அடித்து, சங்கு ஊதி நூதன முறையில் இன்று (5.10.2020) ஆர்பாட்டம் நடைபெற்றது. படங்கள்: எம்.சாம்ராஜ்
40 / 54
41 / 54
42 / 54
புதுச்சேரியில் - வரும் 8-ம் தேதி 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க... புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து... புதுச்சேரி சவரி ராயலு பெண்கள் அரசு மேல் நிலைப் பள்ளியில்... இன்று (5.10.2020) வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள். படங்கள்: எம்.சாம்ராஜ்
43 / 54
44 / 54
உத்திரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பெண்ணுக்கு நீதி வழங்கக் கோரி... சென்ற ராகுல் காந்தி மீதான தாக்குதலைக் கண்டித்து... தமிழ்நாடு காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் தலைமையில் சென்னை - அண்ணா சாலை ஜிம்கானா கிளப் அருகில்... காங்கிரஸ் கட்சியினர்இன்று (5.10.2020) அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். படங்கள் : க.ஸ்ரீபரத்
45 / 54
46 / 54
உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து, வேலூர் பேலஸ் கபே சிக்னல் பகுதியில் உள்ள காமராஜர் சிலை முன்பாக இன்று (5.10.2020) அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர். படம்: வி.எம்.மணிநாதன்
47 / 54
48 / 54
49 / 54
50 / 54
51 / 54
52 / 54
53 / 54
54 / 54

Recently Added

More From This Category

x