Published on : 02 Oct 2020 19:40 pm

பேசும் படங்கள்... (02.10.2020)

Published on : 02 Oct 2020 19:40 pm

1 / 47
காந்தி ஜெயந்தியையொட்டி திமுக சார்பில் காட்பாடியை அடுத்த வண்டரந்தாங்கலில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசினார். படங்கள்: வி.எம்.மணிநாதன்
2 / 47
3 / 47
4 / 47
5 / 47
6 / 47
7 / 47
8 / 47
உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை - சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே அக்கட்சியின் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர பி.சம்பத், சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலர் ஏ.பாக்கியம், மாநிலக்குழு உறுப்பினர்கள் க,பீம்ராவ், ஆர்.வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் படம் ; க.ஸ்ரீபரத்
9 / 47
முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவு தினத்தையொட்டி ஸென்னை - கிண்டியில் உள்ள அவரது நினைவகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் இன்று (2.10.2020) மலர்த் தூவி அஞ்சலி செலுத்தினர். படம் : க.ஸ்ரீபரத்
10 / 47
11 / 47
12 / 47
மதுரை - தமிழ்நாடு ஓட்டலில் நடைபெற்ற மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழாவில் சுதந்திர போராட்ட தலைவர்களின் வேடம் அணிந்துவந்து கலந்து கொண்ட சிறுவர்- சிறுமிகளுக்கு - சுற்றுலாத் துறை இயக்குநர் பாலசுப்ரமணியம் பரிசுகள் வழங்கினார். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
13 / 47
காந்தியின் 150-வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலைய கட்டிடச் சுவரில் 80 அடி பிரம்மாண்ட காந்தி ஓவியம் பொதுமக்கள் பார்வைக்காக நேற்று திறக்கப்பட்டது. படங்கள் : பிரபு
14 / 47
15 / 47
16 / 47
காந்தி ஜெயந்தியையொட்டி சென்னை - மெரினா கடற்கரையில் அவரது சிலை அருகே... காந்தி சர்வோதயா அமைப்புகள் சார்பில் காந்திய நெறியாளர்கள் நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த வந்திருந்தனர். நிகழ்ச்சியில் அளூநர் பன்வாரிலால் புரோஹித் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் . படம் : ம.பிரபு
17 / 47
18 / 47
19 / 47
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த புல்பாண்டி தான் யாசகமாக பெற்ற ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை மாவட்ட ஆட்சியரிடம் இன்று வழங்கினார். இதை பாராட்டும் விதமாக தமிழக வருவாய்த் அமைச்சர் ஆர். பி உதயகுமார் இன்று (2. 10. 2020) புல்பாண்டிக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். படம் ;எஸ். கிருஷ்ணமூர்த்தி
20 / 47
மதுரை பேருந்து நிலையம் அருகில்... ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் பணிகளை... இன்று (2.10.2020) தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார். அருகில் - மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன். படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
21 / 47
22 / 47
காந்தி ஜெயந்தியையொட்டி சென்னை - மெரினா கடற்கரையில் காந்தி சிலைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த காந்தியின் உருவப்படத்துக்கு இன்று (2.10.2020) ஆளுநர் பன்வாரிலால் புரொஹித், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர்த் தூவி மரியாதை செலுத்தினர். படம்: ம.பிரபு
23 / 47
24 / 47
இந்து முன்னணியின் மூத்த தலைவர் இராம கோபாலன் காலமானதை முன்னிட்டு... மதுரை - தெற்கு மாசிவீதி மற்றும் மேல மாசிவீதி சந்திப்பில்... இந்து முன்னணி தொண்டர்கள் இன்று (2.10.2020) மவுன பேரணி நடத்தினர். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
25 / 47
26 / 47
புதுச்சேரி - அரசு மருத்துவமனையில் பணியில் இருந்தபோது காவல் ஆய்வாளர் தாக்கியதை கண்டித்தும்... அந்த காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் இன்று (2.10.2020) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அம்மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள். படம் : எம்.சாம்ராஜ்
27 / 47
புதுச்சேரி - காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த உண்ணாவிரதப் போராட்த்தில் கலந்து கொண்ட புதுச்சேரி - முதல்வர் நாராயணசாமி , அமைச்சர் கந்தசாமி மற்றும் அக்கட்சியினர். படம்: எம்.சாம்ராஜ்
28 / 47
புதுச்சேரி - கடற்கரை ச்சாலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு இன்று (2.10.2020) புதுச்சேரி - துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
29 / 47
புதுச்சேரி - கடற்கரைச் சாலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி ஆகியோர் இன்று (2.10.2020) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். படம்; எம்.சாம்ராஜ்
30 / 47
புதுச்சேரி - கடற்கரைச் சாலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு இன்று (2.10.2020) மாலை அணிவித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.
31 / 47
புதுச்சேரி - கடற்கரை சாலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தி சிலைக்கு இன்று (2.10.2020) மாலை அணிவிக்க வந்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி ஆகியோர் வணக்கங்களை தெரிவித்தனர். படம்: எம்.சாம்ராஜ்
32 / 47
புதுச்சேரியில் - இன்று (2.10.2020) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அஞ்சலி செலுத்த கூட்டமாக வந்த பாஜகவி-னரை சமூக இடைவெளியைக் கடைபிடிக்க கூறிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி. படம்: எம்.சாம்ராஜ்
33 / 47
34 / 47
புதுச்சேரி - இன்று (2.10.2020) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தி சிலைக்கு சமூக இடைவெளியை கடை பிடிக்காமல் அஞ்சலி செலுத்த்திய பாஜகவினர். படம்; எம்.சாம்ராஜ்
35 / 47
36 / 47
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று (2.10.2020) சென்னை - தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட பீமேஸ்வரர் நகர் சேவைக் குழுவினர் சார்பில்... இப்பகுதி குழந்தைகளுக்கு மரம் வளர்க்கும் பண்பை வளர்க்கும் விதமாக 500 மரக் கன்றுகளுடன் கூடிய பூச்செடிகள் வழங்கப்பட்டன. படங்கள் : எம்.முத்து கணேஷ்
37 / 47
38 / 47
39 / 47
40 / 47
சென்னையை அடுத்த அஸ்தினாபுரம் பகுதியில் பல்லாவரம் நகராட்சிப் பள்ளி சுவற்றில் அறிஞர்களின் படங்கள் ஓவியமாகத் தீட்டப் பட்டு வருகிறது . காந்தி ஜெயந்தி நாளான இன்று (2.10.2020) மகாத்மா காந்தியின் உருவப் படத்தையும்... அவருடைய பொன் வாசகங்களையும் தீட்டுகின்றார்... ஓவியர் ஒருவர். படங்கள் : எம் .முத்து கணேஷ்
41 / 47
42 / 47
43 / 47
44 / 47
கரோனா தடுப்புக்காக அமலுக்கு வந்த ஊரடங்கு காரணமாக... நிறுத்தப்பட்ட தேஜஸ் சிறப்பு ரயில் சேவை மீண்டும் இன்று முதல் (2.10.2020) தொடங்கியது. இன்று காலை 6 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த சிறப்பு ரயில் மதுரைக்கு பகல் 12 மணிக்கு வந்து சேர்ந்தது. படம் ; எஸ். கிருஷ்ணமூர்த்தி
45 / 47
46 / 47
47 / 47
உத்திரப்பிரதேசத்தில் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க, தடை உத்தரவை மீறி சென்ற ராகுல் காந்தியை.... போலீஸார் தடுத்து நிறுத்தியபோது, ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் அவர் கீழே விழுந்தார். இச்சம்பவத்துக்கு காரணமான போலீஸார் மற்றும் உ.பி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மனித உரிமைத் துறையின் சார்பில் சென்னை - மெரினாவில் உள்ள காந்தி சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டம் இன்று (2.10.2020) நடைபெற்றது. படம் : ம.பிரபு

Recently Added

More From This Category

x