1 / 56
ஆந்திர மாநிலம் வனப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக, தமிழக ஆந்திர எல்லையில் கவுன்டன்யா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மோர்தானா அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணை நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.
படம்: வி.எம்.மணிநாதன்
2 / 56
சென்னை - தீவுத்திடலில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் இந்தியாவிலேயே முதன்முறையாக செயல்திறன் அளவீட்டு முறையில் ... திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தமிழக முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். விழாவில் அவர் தூய்மை பராமரிப்பு வாகனங்களைக் கொடியசைத்து தொடங்கி வைத்ததுடன் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினார். உடன் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், பெஞ்சமின்.
படங்கள் : ம.பிரபு
3 / 56
4 / 56
5 / 56
6 / 56
7 / 56
8 / 56
9 / 56
10 / 56
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும அலுவலகத்தில் (சி.எம்.டி.ஏ) துணை முதலவர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 265-வது குழுக் கூட்டம் நடைப்பெற்றது. இதில் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
படங்கள்: ம.பிரபு
11 / 56
தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தின் முன்பு திரண்டு நிற்கும் அவரது ஆதரவாளர்கள்... துணை முதல்வர் வாகனத்தின் முன்பு நின்று ’’வருங்கால முதல்வர்... அம்மாவின் ஆசிபெற்ற தலைவர்...’’ என இன்று (30.9.2020) கோஷமிட்டனர்.
படங்கள் : க,ஸ்ரீபரத்
12 / 56
13 / 56
14 / 56
15 / 56
16 / 56
17 / 56
18 / 56
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு... ஆரப்பாளையம் வட்டார அங்கன்வாடிப் பணியாளர் மூலம் காய்கறிகளால் செய்யப்பட்ட விநாயகர் சிலை கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.
படங்கள் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
19 / 56
20 / 56
21 / 56
22 / 56
23 / 56
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்துக்கு முன்பாக... அகவிலைப்படியை உயர்த்தி தர வேண்டும்; அனைத்து பணியாளர்களுக்கும் வேலை கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து... இன்று (30.9.2020) அனைத்து சங்கங்களின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
24 / 56
புதுச்சேரி வனம் மற்றும் வனவிலங்குத் துறை சார்பில் அமைக்கப்பட்ட ஊசுடு ஏரி பறவைகள் மற்றும் விலங்குகள் குறித்த... கருத்து காட்சி மையத்தை புதுச்சேரி - முதல்வர் நாராயணசாமி இன்று (30.9.2020) திறந்து வைத்து பார்வையிட்டார். அருகில் - அமைச்சர் ஷாஜகான், சிவா எம்எல்ஏ.
இந்த ஊசுடு ஏரி கருத்து காட்சி மையத்தில்... ஊசுடு ஏரியில் காணப்படும் பறவைகளான கருடன், மஞ்சள் மூக்கு நாரை, வெண்மார்பு மீன்கொத்தி, அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், புள்ளி மூக்கு வாத்து, நாமக்கோழி, புள்ளி அலகு கூழைக்கடா, சிறிய நீர் காகம் ,செந்நாரை உள்ளிட்ட பறவைகள் சிலைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
படங்கள்: எம்.சாம்ராஜ்
25 / 56
புதுச்சேரி வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட ஊசுடு ஏரி கருத்து காட்சி மையத்தில்... ஊசுடு ஏரியில் காணப்படும் கரண்டி வாயன் பறவை கூட்டில் இருப்பது போன்ற தோற்றத்தில் அமைக்கப்பட்ட கற்சிலை.
படம் : எம்.சாம்ராஜ்
26 / 56
27 / 56
28 / 56
29 / 56
30 / 56
புதுச்சேரி வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட ஊசுடு ஏரி கருத்து காட்சி மையத்தில்... ஊசுடு ஏரியில் காணப்படும் பச்சோந்தியை போன்ற தோற்றத்தில் அமைக்கப்பட்ட கற்சிலை.
படம்: எம்.சாம்ராஜ்
31 / 56
புதுச்சேரி வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட ஊசுடு ஏரி கருத்து காட்சி மையத்தில்... ஊசுடு ஏரியில் காணப்படும் மலைப்பாம்புவைப் போன்ற தோற்றத்தில் அமைக்கப்பட்ட கற்சிலை.
படம்: எம்.சாம்ராஜ்
32 / 56
புதுச்சேரி வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட ஊசுடு ஏரி கருத்து காட்சி மையத்தில்... ஊசுடு ஏரியில் காணப்படும் மரநாயை போன்ற தோற்றத்தில் அமைக்கப்பட்ட கற்சிலை.
படம்: எம்.சாம்ராஜ்
33 / 56
புதுச்சேரி வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட ஊசுடு ஏரி கருத்து காட்சி மையத்தில்... ஊசுடு ஏரியில் காணப்படும் மரம் கொத்திப் பறவையைப் போன்ற தோற்றத்தில் அமைக்கப்பட்ட கற்சிலை.
படம்: எம்.சாம்ராஜ்
34 / 56
புதுச்சேரி வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட ஊசுடு ஏரி கருத்து காட்சி மையத்தில்... ஊசுடு ஏரியில் காணப்படும் மரபல்லியைப் போன்ற தோற்றத்தில் அமைக்கப்பட்ட கற்சிலை.
படம்: எம்.சாம்ராஜ்
35 / 56
பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை கண்டித்து... இன்று (30.9.2020) மதுரையில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
36 / 56
கரோனா தொற்றும், அதை தடுக்க அமலில் இருக்கும் ஊரடங்கும் பலரது வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது. படத்தில் காணும் ஆட்டோ ஓட்டுநர் கரோனா ஊரடங்கு காலத்தில் வயிற்றுப் பிழைப்புக்காக தானே தயார் செய்த பிரியாணி பொட்டலங்களை... தனது ஆட்டோவில் சுமந்து திருமுடிவாக்கம் பைபாஸ் சாலை சந்திக்கும் இடத்தில் விற்பனையை தொடங்கினார். இன்று அவரது வாழ்க்கையில் அரை நாள் பிரியாணி விற்பனையிலேயே முடிகிறது. மற்ற நேரத்தில்தான் ஆட்டோ இயக்கம்.
’’
வாழ்ந்தே ஆக வேண்டும் என்பதற்காக ஆரம்பித்த பிரியாணி விற்பனைத் தொழிலில் இன்று
ஒரு நாளைக்கு 500-ல் இருந்து 800 ரூபாய் வரை கிடைக்கிறது. அதனால் பிரியாணி விற்பனையை விடாமல்
செய்து வருகிறேன்...’’
என்கிறார் இவர்.
படம்.முத்து கணேஷ்
37 / 56
38 / 56
39 / 56
40 / 56
41 / 56
புதுச்சேரியில் அரசு காலி பணியிடங்களை நிரப்பக் கோரி... சோசலிஸ்ட் யூனிடி ஆஃப் இந்தியா கட்சியின் சார்பில் புதுச்சேரி - தலைமை அஞ்சல் நிலையம் முன்பு இன்று (30.9.2020) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படம்: எம்.சாம்ராஜ்
42 / 56
மீண்டும் காந்தி வீதியில் கடை வைக்க அனுமதிக்கக் கோரி.. புதுச்சேரி ஏஐடியுசி சண்டே மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர்.... புதுச்சேரி சட்டசபைக்கு முன்பு இன்று (30.9.2020) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படம்: எம்: சாம்ராஜ்
43 / 56
இதய நோயைக் கண்டறியும் அதிநவீன அக்விலியன் ஓன் பிரிசம் 649 ஸ்லைஸ் சி.டி ஸ்கேன் வசதி இந்தியாவிலேயே முதல்முதலாக சென்னை - அப்பல்லோ மருத்துவமனையில் இன்று (30.9.2020) அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அறிமுக நிகழ்ச்சியில் - தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி, துணைத் தலைவர் பிரீத்தா ரெட்டி மற்றும் அப்பல்லோ குழும நிர்வாக இயக்குநர் சுனீதா ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
படம் : ம.பிரபு
44 / 56
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானதையொட்டி ... முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக... கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் கோவை ரயில்வே காவல் துணை கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள்... (இன்றூ 30.9.2020) மோப்ப நாய் மூலம் சோதனையில் ஈடுபட்டனர்.
படம் : ஜெ.மனோகரன்
45 / 56
46 / 56
47 / 56
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானதையொட்டி ... முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக... கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே (இன்றூ 30.9.2020) நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கண்ணீர்ப் புகைவண்டி.
படம் : ஜெ.மனோகரன்
48 / 56
மத்திய அரசின் கலாச்சார ஆய்வுக் குழுவை கலைக்கக் கோரி... கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் இன்று (30.9.2020) ஈடுபட்ட திராவிட பண்பாட்டுக் கூட்டு இயக்கித்தினர்.
படம் : ஜெ.மனோகரன்
49 / 56
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று (30.9.2020) தீர்ப்பு வெளியானதையொட்டி சென்னை - சென்ட்ரல் ரயில் நிலையத்தில்... ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே எஸ்பி இராஜன் தலமையில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுட சோதனையில் ஈடுபட்டனர்.
படமங்கள்: க.ஸ்ரீபரத்
50 / 56
51 / 56
52 / 56
53 / 56
54 / 56
55 / 56
56 / 56