1 / 37
2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கக் கோரி... திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு இன்று (23.9.2020) பெண் விடுதலைக் கட்சியின் நிறுவனர் சபரிமாலா தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்
2 / 37
3 / 37
4 / 37
5 / 37
2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கக் கோரி... திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு பெண் விடுதலைக் கட்சியின் நிறுவனர் சபரிமாலா தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்ததையொட்டி...இன்று (23.9.2020) அப்பகுதி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்
6 / 37
திருச்சியில் 38, 39, 40, 41, 42- வது வார்டுகளில் அதிகரித்து வரும் கொசுத் தொல்லையை கட்டுப்படுத்தக் கோரி... கைகைல் கொசுவத்திச் சுருளை ஏந்தியவாறு... திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று (23.9.2020) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்
7 / 37
8 / 37
மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து... திருச்சி தலைமை அஞ்சல் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் அனைத்து தொழிற் சங்கத்தினர் இன்று (23.9.2020) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்
9 / 37
10 / 37
திருச்சி - பாலக்கரை அன்னை நகரில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதைக் கண்டித்து... அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் இன்று (23.9.2020) பா.ஜ.க-வினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்
11 / 37
12 / 37
தூய்மைப் பணியாளர்கள் 300 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதைத் திரும்பப் பெற வலியுறுத்தி... வடசென்னை மாவட்ட சிஐடியு தொழிற்சங்கம் சார்பில்... ரிப்பன் மாளிகை அருகே இன்று (23.9.2020) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் பங்கேற்றார்.
படம் : ம.பிரபு
13 / 37
தமிழக பாஜக மாநில மகளிர் அணியின் செயற்குழுக் கூட்டம் இன்று (23.9.2020) எழும்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
இதில் - அகில இந்திய பாஜக மகளிர் அணித் தலைவி விஜய ரஹாத்கர், தமிழக பாஜக தலைவர் எல். முருகன், மாநிலப் பொதுச் செயலர் கரு. நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் - விஜய ரஹாத்கருக்கு எல்.முருகன் வேல் பரிசாக வழங்கினார்.
படங்கள் : ம.பிரபு
14 / 37
15 / 37
16 / 37
17 / 37
18 / 37
19 / 37
சென்னையை அடுத்த சிட்லபாக்கம் ஏரியைச் சுற்றி ஆக்கிரமிக்கப்பட்ட வீட்டினருக்கு ஊராட்சி அலுவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் இன்று (23.9.2020) நோட்டீஸ் வழங்கினர்.
படங்கள் : எம்.முத்து கணேஷ்
20 / 37
21 / 37
22 / 37
23 / 37
24 / 37
25 / 37
26 / 37
மதுரை - காஜிமார் தெருவில் உள்ள பள்ளிவாசலை... வக்ஃபு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டஹையடுத்து... அந்தப் பகுதி பொதுமக்கள் இன்று (23.9.2020) சாலை மறியலில் ஈடுபட்டனர்.
படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
27 / 37
ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்க வேண்டும்;
நிரந்தர தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும்... மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் சார்பாக இன்று (23.9.2020) மதுரை - தல்லாகுளம் அஞ்சல் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
28 / 37
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக... கடந்த 6 மாதங்களாக ரயில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில் ... சமீப நாட்களாக சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் சென்னை - புறநகர் ரயில் நிலையத்தில் புதிய தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
படங்கள் : பு.க.பிரவீன்
29 / 37
30 / 37
31 / 37
32 / 37
மத்திய அரசைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் புதுச்சேரி - தலைமை அஞ்சல் நிலையம் முன்பு கண்டன ஆர்பாட்டம் இன்று (23.9.2020) நடைபெற்றது.
படங்கள் : எம்.சாம்ராஜ்
33 / 37
34 / 37
புதுச்சேரியில் புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுத அனுமதி வழங்கக் கோரி... ஆசிரியர் பயிற்சி மைய மாணவ - மாணிவியர்... தேர்வை புறக்கணித்து இன்று (23.9.2020) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படம்.எம்.சாம்ராஜ்
35 / 37
புதுச்சேரியில் நாளுக்கு நாள் வெயில் அளவு அதிகரித்து வருவதையடுத்து புதுச்சேரி செல்லிப்பட்டு பகுதியில் வெயி்லை பயன்படுத்தி செங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் .
படங்கள்: எம்.சாம்ராஜ்
36 / 37
37 / 37
மத்திய
அரசு நடத்தும் நீட் தேர்வை தவறாக விமர்சிப்பதாகக் கூறி நடிகர் சூர்யாவை கண்டித்து.... மதுரையில் இன்று (23.9.2020) மதுரை முனிச்சாலை பகுதியில்
இந்து இளைஞர் முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படம்; எஸ். கிருஷ்ணமூர்த்தி