1 / 42
மத்திய அரசை கண்டித்து இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) சார்பில் புதுச்சேரியில் இன்று (22.9.2020) ஆர்பாட்டம் நடைபெற்றது.
படம் : எம்.சாம்ராஜ்
2 / 42
கடந்த ஒரு ஆண்டாக வழங்கப்படாத ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரி... இன்று (22.9.2020) புதுச்சேரி - தலைமை அலுவலகம் முன்பு புதுச்சேரி - கதர் வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படம் : எம்.சாம்ராஜ்
3 / 42
புதுச்சேரியில் இன்று (22.9.2020) நடைபெற்ற திட்ட மதிப்பீட்டுக் குழுக் கூட்டத்தில்... அக்குழுவின் தலைவர் அன்பழகன் கலந்து கொண்டு பேசினார். அருகில் - சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிவா, வெங்கடேசன், வையாபுரி மணிகண்டன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அருண், அதிகாரிகள்.
படம் : எம்.சாம்ராஜ்
படம் : எம்.சாம்ராஜ்
4 / 42
புதுச்சேரியில் இன்று (22.9.2020) நடைபெற்ற திட்ட மதிப்பீட்டுக் குழுக் கூட்டத்தில்... அக்குழுவின் தலைவர் அன்பழகன் கலந்து கொண்டு பேசினார். அருகில் - சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிவா, வெங்கடேசன், வையாபுரி மணிகண்டன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அருண், அதிகாரிகள்.
படம் : எம்.சாம்ராஜ்
படம் : எம்.சாம்ராஜ்
5 / 42
6 / 42
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின்கீழ்.... மதுரை - நேதாஜி சாலையில் உள்ள ஜான்சி ராணி பூங்காவில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ’ஏர்வெல் பிளாசா’ கட்டிடத்தை
கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று (22.9.2020) ஆய்வு செய்தார்.
படம் : எஸ் .கிருஷ்ணமூர்த்தி
7 / 42
மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படியில் மாற்றம் செய்ய வேண்டும்; ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்களின் மீதான எஃப். ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும்... என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து... மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (22.9.2020) தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை சங்கங்களின் சார்பாக ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது.
படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
8 / 42
இந்தியாவின் மாபெரும் பொதுத் துறை நிறுவனமாக விளங்கும் - இந்திய
ரயில்வே துறையைத் தனியார்மயமாக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும்... மேலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும்... டிஆர்எம்யு மற்றும் சிஐடியு சங்கங்களின் சார்பாக... இன்று (22.9.2020) மதுரை ரயில்வே மேற்கு நுழைவுவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
9 / 42
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்... ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு... இன்று (22.9.2020) திருப்பரங்குன்றம் வட்டாரம் அங்கன்வாடிப் பணியாளர்கள் உருவாக்கிய கண்காட்சி நடைபெற்றது.
படங்கள் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
10 / 42
11 / 42
சென்னை - நங்கநல்லூரில் நேற்று முன் தினம் திமுகவினருக்கும் பாஜகவினருக்கும் சுவர் விளம்பரம் செய்வது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து நங்கநல்லூரில் திமுகவினர் முறையற்று நடந்ததாகக் கூறி... அச்சம்பவத்தையும் அதில் ஈடுபட்ட திமுகவினரையும் கண்டித்து... சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில்... தென் சென்னை பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் - பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் எம். எம்.ராஜா, தேசிய பொதுக்குழு உறுப்பினர் காளிதாஸ் மற்றும் அக்கட்சியினர் ஏராளமானோர்
கலந்து கொண்டனர் .
படங்கள் : பு.க.பிரவீன்
12 / 42
13 / 42
14 / 42
15 / 42
16 / 42
17 / 42
18 / 42
சென்னை - பட்டினம்பாக்கம் அருகே இரையைத் தேடி காத்திருக்கும் வெளிநாட்டுப் பறவைகள்.
படங்கள்: பு.க.பிரவீன்
19 / 42
20 / 42
21 / 42
தெற்கு ரயில்வேயில் 2 வார தூய்மை பணியை முன்னிட்டு... ரயில் நிலையங்களில் தூய்மை மற்றும் அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே வரும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு... சென்னை - சென்ட்ரல் புறநகர் மின்சார ரயில் நிலையத்தில் காந்தி ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.
படங்கள்: பு.க.பிரவீன்
22 / 42
23 / 42
24 / 42
25 / 42
சென்னை நங்கநல்லூரில் நேற்று முன் தினம் சுவர் விளம்பரம் தொடர்பாக திமுக மற்றும் பாஜகவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டதை அடுத்து.... திமுகவினரால் பஜக தொண்டர்கள் தாக்கபட்டதாகக் கூறி, திமுகவினரைக் கண்டித்து நங்கநல்லூரில் பஜகவினர் இன்று (22.9.2020) கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
26 / 42
27 / 42
28 / 42
29 / 42
30 / 42
31 / 42
32 / 42
33 / 42
34 / 42
சென்னை - விமான நிலைய விரிவாக்கப் பணிகள் துரிதகதியில் நடந்து வருகின்றன. ராட்சத கிரேன்களைப் பயன்படுத்தி மேற்கூரை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் தற்போது (22.9.2020) ஈடுபட்டு வருகின்றனர்.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
35 / 42
36 / 42
37 / 42
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எளமரம் கரீம், ராஜேஷ் உள்ளிட்ட 8 நாடாளுமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ததை கண்டித்தும், விவசாயிகள் விரோத கார்ப்பரேட் ஆதரவு மசோதாக்களை கண்டித்தும்.... வேலூர் - கிருபானந்த வாரியார் சாலையில் இன்று (22.9.2020) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படம் : வி.எம்.மணிநாதன்
38 / 42
சென்னை -
மந்தவெளி அருகே உள்ள வன்னியம்பதி பகுதியில் குடிசை மாற்று வாரியத்தில் உள்ள குடியிருப்புகளைப் புதுப்பிக்கும் பணியை முன்னிட்டு... இன்றுமுதல் (22.9.2020) ஜே.சி.பி இயந்திரம் மூலம் வீடுகள் இடிக்கப்படுகின்றன. இந்த வீடுகளை காலி செய்ய அடுத்த மாதம் 5-ம் தேதி வரையில் கால அவகாசம் இருந்தும்... இடிக்கும் பணிகள் உடனே தொடங்கியதால்... இப்பகுதி மக்கள் அவசரகதியில் வீடுகளை காலி செய்தனர். அப்படி வீட்டை காலி செய்தவர்கள் அருகருகே திறந்தவெளியில் தங்கள் பொருட்களை வைத்துள்ளனர்.
படங்கள் : ம.பிரபு
39 / 42
40 / 42
41 / 42
42 / 42