1 / 40
சென்னை - எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில்
இன்று (18.9.2020) நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து... அவற்றை உரியவரிடம் ஒப்படைத்தார், உடன் காவல்துறை அதிகாரிகள்.
படங்கள் : க.ஸ்ரீபரத்
2 / 40
3 / 40
4 / 40
5 / 40
6 / 40
7 / 40
சென்னை - சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில் சாலையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மா.சுப்பிரமணியன் ’நீட்’ தேர்வு குறித்த துண்டுப் பிரசுரத்தை இன்று (18.9.2020) பொதுமக்களிடம் வழங்கினார்.
படங்கள் : க.ஸ்ரீபரத்
8 / 40
9 / 40
10 / 40
ரயில்வே துறையை தனியார்மயமாக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து... எஸ்ஆர்எம்யு தொழிற்சங்கம் சார்பாக இன்று (18.9.2020) மதுரை ரயில்வே நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
11 / 40
அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு 613 கிலோ எடைகொண்ட வெண்கலத்தில் செய்யப்பட்ட மணி... ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு.... இன்று (18.9.2020) மதுரை கே.கே. நகர் பகுதிக்கு வந்து சேர்ந்துது... இங்கு பூஜை செய்யப்பட்டு மேளதாளங்களுடன் மீண்டும் ரதயாத்திரை வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது.
படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
12 / 40
’நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரியும்... புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்யக் கோரியும்... நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று (18.9.2020) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படம் ; எஸ். கிருஷ்ணமூர்த்தி
13 / 40
கரோனா தொற்றுக்காக 5 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த கோயம்பேடு உணவு தானிய கிடங்கு முதல் கட்டமாக நேற்று திறக்கப்பட்டுள்ள நிலையில்... இன்று (18.9.2020) அதன் நுழைவுவாயிலில் பொதுமக்களுக்கு வெப்ப அளவு பரிசோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகு அனுமதி வழங்கப்பட்டது. இன்று முதல் நாள் என்பதால் கூட்டம் குறைவாகவே இருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா திறக்கப்பட்ட கடைகளைப் பார்வையிட்டார் படங்கள் : ம.பிரபு
14 / 40
15 / 40
16 / 40
17 / 40
18 / 40
19 / 40
20 / 40
21 / 40
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை நிரந்தரமாக தடை செய்யக் கோரி.... சென்னை - விருகம்பாக்கம் பகுதியில் தொடர் உண்ணாவிரதப் போரட்டத்தில் 6- வது நாளாக ஈடுப்பட்டுள்ள மக்கள் பாதை அமைப்பினர்.
படங்கள் : ம.பிரபு
22 / 40
23 / 40
கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக - கோவை கடலைக்காரத் தெரு அருகே மாநகராட்சி ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகளை இன்று (18.9.2020) சேகரித்தனர்.
படம் ; ஜெ .மனோகரன்
24 / 40
ரயில்வே துறையை தனியார்மயமாக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து கோவை - கூட் ஷெட் சாலையில் பொதுமக்களுக்கு 'உரிமைகளை காப்போம்... ’ என்ற வாசகம் அடங்கிய கைபிரதிகளை ரயில்வே எஸ்ஆர்எம்யு தொழிற்சங்கத்தினர் இன்று (18.9.2020) விநியோகித்தனர்.
படம்: ஜெ .மனோகரன்
25 / 40
26 / 40
27 / 40
கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவில் கூஸ் வகை வாத்துகள் இட்ட முட்டைகளை அடைகாக்க இன்று (18.9.2020) இன்குபேட்டர் கருவியில் வைக்கும் நிலைய அதிகாரி. படம் ; ஜெ .மனோகரன்
28 / 40
கோவை உக்கடம் சிவராம் நகர் அங்கன்வாடி மைய வளாகத்தில் ஊட்டச்சத்து தோட்டம் அமைக்கும் பணியில் இன்று (18.9.2020) ஈடுபட்டுள்ள பணியாளர்கள்.
படம் ; ஜெ .மனோகரன்
29 / 40
30 / 40
31 / 40
சென்னை - அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (18.9.2020) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்திருந்த முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அக்கட்சியினர் பெரும்திரளாகத் திரண்டு வரவேற்றனர்.
படங்கள் : க,ஸ்ரீபரத்
32 / 40
33 / 40
34 / 40
35 / 40
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காலை முதல் மேக மூட்டமாக காணப்பட்டது. மாலையின் தாம்பரம் பகுதியில் சிறிது மழை தலைக் காட்டியது.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
36 / 40
37 / 40
38 / 40
39 / 40
40 / 40