Published on : 17 Sep 2020 19:31 pm

பேசும் படங்கள்... (17.09.2020)

Published on : 17 Sep 2020 19:31 pm

1 / 95
பெரியார் பிறந்த நாளையொட்டி சென்னையில் அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு அதிமுக சார்பில்... தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் இன்று (17.9.2020) மலர் தூவி மரியாதை செலுத்தினர். படங்கள்: க.ஸ்ரீபரத்
2 / 95
3 / 95
4 / 95
பெரியார் பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று (17.9.2020) மலர்த் தூவி மரியாதை செலுத்தினார். படங்கள் : க.ஸ்ரீபரத்
5 / 95
6 / 95
7 / 95
8 / 95
9 / 95
மகாளய அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் - அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரி ஆற்று கரையோரங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பொதுமக்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்ததையடுத்து... இன்று (17.9.2020) அம்மா மண்டபம் மூடப்பட்டு தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. படம்: ஜி.ஞானவேல்முருகன்.
10 / 95
மகாளய அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் - அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரி ஆற்று கரையோரங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பொதுமக்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்ததையடுத்து... இன்று (17.9.2020) ஆள் ஆரவாரமின்றி அம்மா மண்டபம் படித்துறை வெறிச்சோடிக் காணப்பட்டது. படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
11 / 95
12 / 95
மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று (17.9.2020) ஸ்ரீரங்கம் - அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரி ஆற்று கரையோரங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பொதுமக்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்ததையடுத்து... நேற்று முன்தினம் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்க ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்கள் விட்டுச் சென்ற பழைய துணிகளை சேகரித்து வெய்யிலில் காய வைக்கும் தொழிலாளர். படம்: ஜி.ஞானவேல்முருகன்.
13 / 95
மகாளய அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் - அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரி ஆற்று கரையோரங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பொதுமக்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்ததையடுத்து... இன்று (17.9.2020) அம்மா மண்டபத்தில் புரோகிதர்கள் அமர்ந்து தர்ப்பணம் கொடுக்கும் இடம், முடித் திருத்தம் செய்யும் இடம் மற்றும் உள் மண்டபம் ஆகியவை வெறிச்சோடிக் காணாப்பட்டன. படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
14 / 95
15 / 95
16 / 95
மகாளய அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் - அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரி ஆற்று கரையோரங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பொதுமக்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்ததையடுத்து... இன்று (17.9.2020) வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் கிடக்கும் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம். சாலை. படம்: ஜி.ஞானவேல்முருகன்.
17 / 95
மகாளய அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் - அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரி ஆற்று கரையோரங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பொதுமக்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்ததையடுத்து... காவிரி ஆற்றில் அனுமதியில்லாததால் கொள்ளிடம் ஆற்றில் தங்களது முன்னோர்களுக்கு இன்று (17.9.2020) புரோகிதர் இன்றி தாங்களாகவே வழிபாடு செய்து பூஜை பொருட்களை பொதுமக்கள் ஆற்றில் கரைத்தனர். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
18 / 95
19 / 95
20 / 95
21 / 95
பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி பெரிய கடை வீதி சந்துக் கடை பகுதியில் பாஜக மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் தலைமையில் இன்று (17.9.2020) பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. படம் : ஜி.ஞானவேல்முருகன்.
22 / 95
23 / 95
மகாளய அமாவாசையை முன்னிட்டு ஆற்று கரையோரங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பொதுமக்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்ததையடுத்து... பொதுமக்கள் வருகையை தடுக்கும் வகையில் திருநெல்வேலி - வண்ணாரப்பேட்டை பேராட்சி அம்மன் கோயில் படித்துறைக்கு செல்லும் நுழைவாயிலில் இன்று (17.9.2020) போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. படங்கள் மு. லெட்சுமி அருண்
24 / 95
மகாளய அமாவாசையை முன்னிட்டு ஆற்று கரையோரங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பொதுமக்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்ததையடுத்து... இன்று (17.9.2020) பொதுமக்கள் வருகை இல்லாததால் திருநெல்வேலி - வண்ணாரப்பேட்டை பேராட்சி அம்மன் கோயில் படித்துறை அமைதியாக காணப்பட்டது. படங்கள் : மு.லெட்சுமிஅருண்
25 / 95
26 / 95
கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மஹாளய அம்மாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஆற்றங்கரைகளில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து... திருநெல்வேலியில் - குறுக்குத்துறை படித்துறை இன்று (17.9.2020) வெறிச்சோடிக் காணப்பட்டது, படங்கள் : மு . லெட்சுமி அருண்
27 / 95
28 / 95
29 / 95
30 / 95
சென்னையில் - வண்டலூர் பகுதியில் நீண்டகாலமாக கட்டிவந்த புதிய மேம்பாலத்தை இன்று (!17.9.2020) முதல்வர் பழனிசாமி திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். உடன் அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் இருந்தனர்.
31 / 95
32 / 95
33 / 95
புரட்டாசி முதல் தேதியான இன்று (17.9.2020) மஹாளய அம்மாவாசையை முன்னிட்டு புதுச்சேரி கடற்ரைப் பகுதியில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் திரண்டிருந்தனர். படங்கள்: எம்.சாம்ராஜ்
34 / 95
35 / 95
புதுச்சேரி - அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் உள் இடஓதுக்கீடு அளிக்கக் கோரி... அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன், அசனா உள்ளிட்டோர் புதுச்சேரி சட்டப்பேரவையின் முன்பு கைகளில் கோரிக்கை பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் கல்வி அமைச்சர் கமலக்கண்ணன். படங்கள்: எம்.சாம்ராஜ்
36 / 95
37 / 95
பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி - வீராம்பட்டிணம் கடற்கரையில் பாரதியார் அரசு பல்கலைக்கூட சிற்பக்கலை மாணவர் குபேந்திரன்... மணலால் உருவாக்கிய தந்தை பெரியாரின் மணற்சிற்பத்தை பார்வையிடும் சிறுவர்கள். படங்கள்: எம்.சாம்ராஜ்
38 / 95
39 / 95
மஹாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சென்னை - வடபழனி கோயில் குளக்கரையைச் சுற்றி சமூக இடைவெளியைப் பற்றியும்... கரோனா பரவலைப் பற்றியும் அச்சமின்றி இன்று (17.9.2020) திரண்டிருந்த மக்கள் கூட்டம். படங்கள் : ம.பிரபு
40 / 95
41 / 95
42 / 95
43 / 95
44 / 95
45 / 95
பெரியார் பிறந்தநாளையொட்டி இன்று (17.9.2020) சென்னை - அண்ணா சாலை சிம்சன் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு முன்பு ... தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்டச் செயலர் குமரன் தலைமையில்... இரண்டு இணையருக்கு சாதி மறுப்புத் திருமணம் நடைபெற்றது. படங்கள் : ம.பிரபு
46 / 95
47 / 95
பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு தந்தை பெரியார் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று (17.9.2020) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார். படம் : எம்.சாம்ராஜ்
48 / 95
சென்னையில் - நீண்ட காலமாக கட்டப்பட்டு வந்த வண்டலூர் மேம்பாலத்தை இன்று,முதல் (17.9.2020) முதல்வர் பழனிசாமி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். அதற்கு முன்னதாக முதல்வருக்கு அதிமுக சார்பில் வரவேற்பு அளிிக்கப்பட்டது. திறப்பு விழா முடிந்ததும் பொதுமக்கள் புதிய மேம்பாலத்தில் அனுமதிக்கப்பட்டனர். படங்கள் : எம்.முத்துகணேஷ்
49 / 95
50 / 95
51 / 95
52 / 95
பெரியார் பிறந்த நாளையெட்டி சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியைதை செலுத்தினார்கள் படம் க.ஸ்ரீபரத்
53 / 95
54 / 95
55 / 95
மகாளய அமாவாசையையொட்டி சென்னை - வில்லிவாக்கத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற சிவன் கோயில் மற்றும் பெருமாள் கோயில் குளக்கரை அருகே தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய இன்று (17.9.2020) நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள். படங்கள் : ம.பிரபு
56 / 95
57 / 95
58 / 95
59 / 95
பெரியார் பிறந்த நாளையொட்டி சென்னை - அண்ணா சாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு இன்று (17.9.2020) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், உடன் திமுக நிர்வாகிகள். படங்கள் : ம.பிரபு
60 / 95
61 / 95
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு... வேலூருக்கு வந்த துரைமுருகன் வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அருகில், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார் மற்றும் திமுகவினர். படம்: வி.எம்.மணிநாதன்.
62 / 95
63 / 95
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து... வேலூருக்கு வந்த துரைமுருகன்... வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று (17.9.2020) பெரியார் பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்டிருந்த பெரியார் உருவப்படத்துக்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தினார். அருகில், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார் மற்றும் திமுகவினர். படம் : வி.எம்.மணிநாதன்.
64 / 95
65 / 95
திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டதை அடுத்து இன்று (17.9.2020) வேலூருக்கு வந்த துரைமுருகனை வேலூர் மாவட்ட எல்லையான பிள்ளையார் குப்பத்தில் மாலை அணிவித்து வரவேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார் மற்றும் திமுகவினர். படம்: வி.எம்.மணிநாதன்.
66 / 95
67 / 95
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டதை அடுத்து வேலூருக்கு வந்த துரைமுருகன்... இன்று (17.9.2020) பெரியார் பிறந்தநாளையொட்டி, வேலூர் அண்ணா சாலையில் உள்ள தந்தைப் பெரியார் சிலைக்கு... மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார் மற்றும் திமுகவினர். படம்: வி.எம்.மணிநாதன்.
68 / 95
69 / 95
திமுக மற்றும் பல்வேறு கட்சித் தொண்டர்கள் சிலர்... பிரதமர் மோடியின் 70-வது பிறந்த நாளான .இன்று (17.9.2020) பாஜகவின் மாநிலப் பொதுச் செயலர் சீனிவாசன் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில்... இணைந்தார். படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
70 / 95
உலக நோயாளிகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு....இன்று (17.9.2020) மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் டீன் சங்கு மணி தலைமையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
71 / 95
பிரதமர் மோடியின் 70-வது பிறந்த நாள் விழாவையொட்டி சென்னை - தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் - இன்று (17.9.2020) பாஜகவின் மாநிலத் தலைவர் எல்.முருகன் 70 அடி கேக் வெட்டி கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் காணொளிக் காட்சியும் வெளியிடப்பட்டது. படங்கள்: பு.க.பிரவீன்
72 / 95
73 / 95
74 / 95
சென்னை பெருநகர காவலர்களின் பயன்பாட்டுக்காக எழும்பூரில் காவலர் மருத்துவமனை கட்டப்பட்டது. கடந்த ஜூன் 19- ம் தேதி முதல் இந்த மருத்துவமனை கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு... அங்கு காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் முன்னிலையில் டாடா மற்றும் டிசிஎஸ் அறக்கட்டளை நிர்வாகிகள் ரூ.1 கோடியே 19 லட்சம் மதிப்புள்ள ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் மருத்துவ உபகரணங்களை எழும்பூர் காவல் மருத்துவமனை முதன்மை மருத்துவ அதிகாரி சித்ராவிடம் வழங்கினர். எழும்பூர், ஆணையர் அலுவலக சாலையில் உள்ள காவலர் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், காவல் கூடுதல் ஆணையர் அமல்ராஜ், இணை ஆணையர் எஸ்.மல்லிகா, துணை ஆணையர்கள் தர்மராஜன், பெரோஸ்கான் அப்துல்லா, எஸ்.விமலா, டிசிஎஸ் நிறுவன சென்னை செயலாக்க தலைவர் சுரேஷ்ராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். படங்கள்: பு.க.பிரவீன்
75 / 95
76 / 95
77 / 95
78 / 95
79 / 95
80 / 95
81 / 95
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளத்துக்கு வெளியே மகாளய அமாவாசையையொட்டி இன்று (17.9.2020) சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் ... தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். படம் : பு.க.பிரவீன்
82 / 95
83 / 95
84 / 95
85 / 95
86 / 95
மகாளய அமாவாசையையொட்டி கோவை பேரூர் நொய்யல் அற்று படித்துறையில் இன்று (17.9.2020) முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்த உறவினர்கள் . படங்கள் : ஜெ .மனோகரன்
87 / 95
88 / 95
89 / 95
90 / 95
நீண்ட காலமாக கட்டப்பட்டு வந்த பல்லாவரம் மேம்பாலத்தை இன்று 17.9.2020 தமிழக முதல்வர் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். இதையடுத்து இன்று மாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள நேரத்தில் வாகனங்கள் தடையின்றி... நெரிசலின்றி செல்வதைக் காண முடிந்தது. படங்கள்: எம்.முத்து கணேஷ்
91 / 95
92 / 95
93 / 95
94 / 95
95 / 95

Recently Added

More From This Category

x