Published on : 16 Sep 2020 19:47 pm

பேசும் படங்கள்... (16.09.2020)

Published on : 16 Sep 2020 19:47 pm

1 / 28
7-வது ஊதியக் குழுவின் அரசாணைப்படி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் அனைவருக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து... மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே - மதுரை மாவட்ட உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் இன்று (16.9.2020) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
2 / 28
பிரதமர் மோடியின் 70-வது பிறந்த நாள் நாளை வருவதையொட்டி... மதுரை புறநகர் மாவட்ட மேலமடையில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில்... அக்கட்சியின் தொண்டர்கள் தீபம் ஏற்றி கேக் வெட்டி இன்று (16.9.2020) கொண்டாடினர். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
3 / 28
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) அகில இந்திய பொதுச்செயலர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது பழிவாங்கும் நோக்கோடு போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை... உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி... மதுரை ஆரப்பாளையம் பகுதியில் இன்று (16.9.2020) அக்கட்சியினர்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
4 / 28
சென்னை - கலைவாணர் அரங்கத்தில் இன்று (16.9.2020) நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். உடன் அக்கட்சியினர். படம் : க.ஸ்ரீபரத்
5 / 28
6 / 28
சென்னை - கலைவாணர் அரங்கத்தில் இன்று (16.9.2020) நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேச வாய்ப்பு வழங்கப்படாததால்... பத்திரிகையாளர்களிடம் தன் தரப்பு நியாயத்தை பதிவுசெய்த சட்டப்பேரவை உறுப்பினர் கு.க. செல்வம். படம் : க . ஸ்ரீபரத்
7 / 28
சீத்தாராம் யெச்சுரி மீது பழிவாங்கும் நோக்கத்தில் பொய்வழக்கு பதிவு செய்த மத்திய அரசைக் கண்டித்து இந்திய மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று (16.9.2020) புதுச்சேரியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். படங்கள் : எம்.சாம்ராஜ்
8 / 28
9 / 28
புதுச்சேரியில் ஒருங்கிணைந்த சேவை மையக் கட்டிடத்தை காணொலிக் காட்சி மூலம் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி... இன்று (16.9.2020) திறந்து வைத்தார். அருகில் அமைச்சர் கந்தசாமி. படங்கள் : எம்.சாம்ராஜ்
10 / 28
புதுச்சேரியில் கடந்த 15 மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை நிலுவைத் தொகையுடன் வழங்கக் கோரி பொதுப்பணித் துறை ஒப்பந்த ஊழியர்கள் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் இல்லத்தை முற்றுகையிட்டு இன்று (16.9.2020) போராட்டத்தில் ஈடுபட்டனர். படங்கள் : எம்.சாம்ராஜ்
11 / 28
12 / 28
புகழ்பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் 99-வது பிறந்த நாள் விழாவில் இன்று (16.9.2020) ‘கி.ராஜநாராயணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்’ என்ற நூலை புதுச்சேரி - முதல்வர் நாராயணசாமி பெற்றுக் கொண்டார். அருகில் - டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பாளர் மு.வேடியப்பன், எழுத்தாளர்கள் பாரதி மார்க்ஸ், பி.என்.எஸ்.பாண்டியன், ஒளிப்படக் கலைஞர் புதுவை இளவேனில். படங்கள் : எம்.சாம்ராஜ்
13 / 28
புகழ்பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் 99-வது பிறந்த நாள் விழா இன்று (16.9.2020) புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் - எழுத்தாளர்கள் கண்மணி குணசேகரன், பாரதி மார்க்ஸ், கவிஞர் உமா மோகன், ஒளிப்படக் கலைஞர் புதுவை இளவேனில், எழுத்தாளர் பி.என்.எஸ்.பாண்டியன், ரம்யா, ஜவஹர் ஆகியோர் கலந்து கொண்டனர். படம் : எம்.சாம்ராஜ்.
14 / 28
15 / 28
16 / 28
கரோனா தொற்று பாதித்தோருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறி... தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் புதுச்சேரியில் செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். படங்கள் : எம்.சாம்ராஜ்
17 / 28
18 / 28
கரோனா தொற்று அச்சமின்றி பொதுமக்கள் எல்லா இடங்களிலும் அக்கறையின்றி இருப்பதால்... அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்படும்படி... மாநகரப் போக்குவரத்துப் போலீஸாருக்கு அரசு அறிவுறுத்தியுள்ளதால்... அத்தியாவசிய தேவைக்கு மட்டும் முகக்கவசத்துடன் வெளியே வரவும்... தேவையற்ற பயணங்களை தவிக்கவும்... தனித மனித இடைவெளியைக் கடைபிடிக்கவும்... வலியுறுத்தும் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகில் இன்று (16.9.2020) போலீஸார் பொதுமக்களுக்கு வழங்கினர். படங்கள் : ம.பிரபு
19 / 28
20 / 28
21 / 28
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அமலில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக 5 மாதங்களாக மூடிக்கிடந்த கோயம்பேடு வளாகத்தில்... முதல்கட்ட மாக உணவு தானியக் கிடங்கு மற்றும் வணிக வளாகம் நாளை மறுநாள் (செப்.1்8) திறக்கப்பட உள்ளதையொட்டி... வண்ணபூசும் வேலை , கடைகளில் பொருட்களை இறக்குதல், அடுக்கி வைக்கும் வேலைகள் இன்று நடந்தன. படங்கள்: ம.பிரபு
22 / 28
23 / 28
24 / 28
25 / 28
26 / 28
சென்னை - மெரினா கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தும்... இதை மீறி பொதுமக்கள் தொடர்ந்து வருவதையொட்டி... அப்பகுதியில் தமிழக காவல் துறை சார்பில் விழிப்புணர்வு பதாகை வைக்கப்பட்டு போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்ஹ்டு வருகின்றனர். படம் : பு.க.பிரவீன்
27 / 28
28 / 28

Recently Added

More From This Category

x