1 / 52
சென்னை - கலைவாணர் அரங்கில் (இன்று 14.9.2020) நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்துக்கு வந்திருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள்.
படங்கள் : க.ஸ்ரீபரத்
2 / 52
3 / 52
4 / 52
சென்னை - கலைவாணர் அரங்கில் (இன்று 14.9.2020) நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு... கரோனா தொற்று பாதுகாப்புப் பெட்டகம் வழங்கப்பட்டது.
படம் : க.ஸ்ரீபரத்
5 / 52
சென்னை - கலைவாணர் அரங்கில் (இன்று 14.9.2020) நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த திமுக தலைவரும், தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் ’நீட்’ தேர்வு எதிர்ப்பினை அடையாளப்படுத்தும் முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர்.
படங்கள் : க.ஸ்ரீபரத்
6 / 52
7 / 52
8 / 52
9 / 52
10 / 52
சென்னை - கலைவாணர் அரங்கில் இன்று(14.9.2020) நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனைத்து கட்சியையும் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் வந்திருந்ததால்.... கலைவாணர் அரங்க வளாகமே இன்று பகல் முழுவதும் பரபரப்பாக இருந்தது.
படங்கள் : க.ஸ்ரீபரத்
11 / 52
12 / 52
மருத்துவக் கல்வி படிப்பதற்கான
'நீட்' நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரியும், ’நீட்’ நுழைவு தேர்வு பற்றிய அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்ட குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும்... இந்திய மாணவர் சங்கம் சார்பில் சென்னை - சிந்தாதிரிப்பேட்டை மே தினப் பூங்காவில் இருந்து சட்டப்பேரவையை நோக்கி முற்றுகையிட முயன்ற மாணவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே இன்று (14.9.2020) தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
படம் : பு.க.பிரவீன்.
13 / 52
14 / 52
15 / 52
16 / 52
17 / 52
திருமணமாகி சில நாட்களிலேயே மனைவியை ஏமாற்றி கைவிட்டுவிட்டு... வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட நபர் மீது.... வழக்குப் பதிவுசெய்தும் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல் துறையைக் கண்டித்து.... இன்று (14.9.2020) திருமங்கலம் மகளிர் காவல் நிலையம் முன்பாக பாதிக்கப்பட்ட பெண் போராட்டம் நடத்தினார்.
படங்கள்: பு.க.பிரவீன்.
18 / 52
19 / 52
20 / 52
21 / 52
22 / 52
தமிழக ஏழை - எளிய மாணவர்கள் மீது ‘நீட்’ தேர்வை வலுக்கட்டாயமாக புகுத்துவதாகக் கூறி மத்திய மற்றும் மாநில அரசுகளைக் கண்டித்தும்...
’நீட்’ தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும்...
தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தமிழக சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்றவர்களை இன்று (14.9.2020) சிந்தாதிரி பேட்டை பாலம் அருகில் போலீஸார் தடுத்து நிறுத்தினர் .
படங்கள் : ம.பிரபு
23 / 52
24 / 52
25 / 52
கடந்த சில நாட்களாக வேலூரில் பெய்த மழையினால் வேலூரை அடுத்துள்ள அம்முண்டியில் உள்ள அபிதகுஜாம்பாள் உடனுறை அர்த்தநாரீஸ்வரர் ஆலய தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்பி அழகாக காட்சியளிக்கிறது.
படங்கள்: வி.எம்.மணிநாதன்.
26 / 52
27 / 52
28 / 52
தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால்... வேளாண் இயந்திரக் கருவிகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக - வேலூர் மாவட்டம், திருவலம் அடுத்துள்ள செம்பராய நல்லூரில் நேரடி நெல் நடவு முறையில் விதைகளை நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.
படம் : வி.எம்.மணிநாதன்.
29 / 52
30 / 52
31 / 52
32 / 52
33 / 52
திருச்சி மாநகர காவல்துறை சார்பில் முதற்கட்டமாக பாரதிதாசன் சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கென தனியாக பாதை பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்கம் போல் இன்று (14.9.2020) சாலை நடுவே பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள்.
படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்.
34 / 52
35 / 52
திருச்சி மாநகர காவல்துறை சார்பில் முதற்கட்டமாக பாரதிதாசன் சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கென தனியாக பாதை பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (14.9.2020)
இரு சக்கர வாகனங்கள் செல்ல பிரிக்கப்பட்ட பாதையில் இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்.படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்.
36 / 52
37 / 52
பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து சீராகி வரும் நிலையில் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (14.9.2020) மனு கொடுக்க அதிக அளவில் பொது மக்கள் வந்திருந்தனர். அலுவலக வாசலில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுவை போடும் மக்கள்.படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்.
38 / 52
39 / 52
பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து சீராகி வரும் நிலையில் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (14.9.2020) மனு கொடுக்க அதிக அளவில் பொது மக்கள் வந்திருந்தனர். இந்நிலையில்
-ஆட்சியரைப் பார்க்க அனுமதியில்லை எனவே பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை பெட்டியில் போட்டுவிட்டுச் செல்லுங்கள்’ என போலீஸார் கூறிய பின்னரும்... மனு கொடுக்க வந்த பலரும் ஆட்சியர் அலுவலக வாசலிலேயே நீண்ட நேரம் காத்திருந்தனர். படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்.
40 / 52
41 / 52
தனியார் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி பணத்தை இழந்தவர்கள்>... தங்கள் பணத்தை மீட்டுத் தருமாறு... திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்க இன்று (14.9.2020) மன்னார்புரத்தில் இருந்து ஊர்வலமாக வந்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீஸார் அவர்களுடன் பேச்சுவார்தை நடத்தி பேருந்தில் ஏற்றி... ஆட்சியர் அலுவலகத்துக்கு செல்ல வைத்தனர்.
படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்.
42 / 52
43 / 52
44 / 52
45 / 52
தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைமேடை பகுதிகளுக்கு நகரும் படிகட்டுகள் அமைக்கும் பணிகள் மந்தமாக நடந்து வருவதாகக் கூறப்படுவதை அடுத்து... புறநகர் ரயில் சேவை தடை செய்யப்பட்டுள்ள இந்நேரத்திலாவது அப்பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படங்கள்:எம்.முத்துகணேஷ்
46 / 52
47 / 52
வண்டலூர் கிளாம்பாக்கம் பகுதியில் கட்டப்பட்டுவரும் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில்... மாநகரப் பேருந்து நிலையம் அமைக்கும் பணி தற்போது (14.9.2020) மும்முரமாக நடைபெற்று வருகிறது.
படங்கள்:எம்.முத்துகணேஷ்
48 / 52
49 / 52
நீண்ட நாட்களாக கட்டப்பட்டு வந்த பல்லாவரம் மேம்பாலத்தை வரும் 17-ம் தேதி முதல்வர் பழனிசாமி திறந்து வைக்கவுள்ளார். அதற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்து இன்று (14.9.2020) அந்த பாலம் மின் விளக்கு ஓளியில் ஒளிர்ந்தது.
படங்கள்: எம்.முத்து கணேஷ்
50 / 52
51 / 52
52 / 52