1 / 47
வேலூர் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தினமும் காலை 7 மணிக்கு உலகப் பொதுமறையாம் திருக்குறளில் இருந்து ‘தினம் ஒரு குறள்’ வாசித்து, அதன் விளக்கத்தை எடுத்துக் கூறவும் எஸ்பி செல்வகுமார் உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து... நேற்று திருக்குறளை வாசித்த காவலர் சாமூண்டீஸ்வரன்.
படம் : வி.எம்.மணிநாதன்
2 / 47
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ’வளமுடன்’ பூல்பாண்டியன்... தான் ஆங்காங்கே யாசகம் பெற்ற ரூ.12 ஆயிரத்தை இன்று (11.9.2020) கரோனா நிவாரண நிதியாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். இவர் இதுபோல் தனது யாசகப் பணத்தை ஆட்சியரிடம் இப்படி வழங்குவது 11-வது தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
3 / 47
4 / 47
கரோனா தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களாக மூடப்பட்ட கோயம்பேடு வணிக வளாகம் முதல் கட்டமாக உணவு தானிய மொத்த விற்பனை அங்காடி வளாகம். வருகின்ற 18 ம் தேதி திறக்கப்படுகிறது அடுகட்டமாக மொத்த காய்கறி வளாகம் திறக்கப்படுவதால் வண்ணம் பூசும் Uணி மற்றும் வளாகம் புதுப்பிக்கும் Uணிகள் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் Uணிகள் நடைப்பெற்று வருகிறது படங்கள் : ம.பிரபு
5 / 47
6 / 47
7 / 47
8 / 47
9 / 47
10 / 47
11 / 47
12 / 47
பாஜக கட்சியின் சென்னை தலைமை அலுவலகத்தில் இன்று (11.9.2020) நடைபெற்ற பாரதியாரின் நினைவு நாள் விழாவில்... பாரதி உருவப் படத்துக்கு... அக்கட்சியின் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். படங்கள் : க.ஸ்ரீபரத்
13 / 47
14 / 47
கோயில்களில் சுவாமியைத் தோளில் சுமந்து செல்லும் நிமிர்ந்தக்காரர்கள் (ஸ்ரீ பாதந்தாங்கிகள்) கரோனா தொற்றுக் காலத்தில் வேலையின்றி வாழ்வாதாரம் இழந்து நிற்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் தங்களுக்கு அரசு சலுகைகளும் நிதியுதவியும் கிடைக்கவும்; அறநிலையத் துறையால் தாங்கள் அங்கீகரிக்கபட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... சென்னை - சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் இன்று (11.9.2020) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படங்கள் : க.ஸ்ரீபரத்
15 / 47
16 / 47
சென்னை - பட்டினப்பாக்கம் சிக்னல் அருகில் இன்று (11.9.2020) காலை நடைபெற்ற விபத்தில் தண்ணீர் லாரி டயரில் சிக்கி 4 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார்... லாரி மோதி சாய்ந்த சிக்னல் கம்பத்தை சரிசெய்தனர்.
படங்கள் : க.ஸ்ரீபரத்
17 / 47
18 / 47
19 / 47
20 / 47
21 / 47
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (11.9.2020) நடந்த அரசு விழாவில் தமிழக முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டு அரசின் வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அருகில் - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, செங்கல்பட்டு ஆட்சியர் ஜான் லூயிஸ் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர்.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
22 / 47
23 / 47
24 / 47
25 / 47
26 / 47
27 / 47
28 / 47
29 / 47
சென்னை அருகே பல்லாவரம் கண்டோன்மென்ட் பகுதியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று வழக்கமாக நடைபெறும் பழமையான பல்லாவரம் சந்தை கரோனா தொற்று பரவல் தடுப்புக்காக 5 மாதங்களாக தடை செய்யப்பட்ட்டிருந்த நிலையில்... மீண்டும் இன்று (11.9.2020) திறக்கப்பட்டது. இதையடுத்து சந்தையில் பொருள் வாங்க பொதுமக்கள் வழக்கம்போல கூடியிருந்தனர்.
படங்கள் : எம்.முத்து கணேஷ்
30 / 47
31 / 47
32 / 47
33 / 47
34 / 47
35 / 47
சென்னை - உயர்நீதி மன்ற வளாகத்தில் உள்ள பெருநகர உரிமையியல் நீதிமன்றம், குடும்பம் நல நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு கீழமை நீதிமன்றங்கள் கடந்த 7-ம் தேதி முதல் நேரடி விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில்... வழக்கறிஞர்கள் தங்களது வழக்குகளை நீதிமன்றம் வளாகத்தில் தாக்கல் செய்வதற்கு பதிலாக... ’கரோனா’ தொற்று காரணமாக தற்போது எஸ்பிளேனேடு நுழைவுவாயில் முன்பு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அங்கேயே வழங்கறிஞர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் சரிப்பார்க்கப்பட்டு... கோப்புகள் பெறப்படுகின்றன.
படங்கள் : ம.பிரபு
36 / 47
37 / 47
38 / 47
39 / 47
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகண்டுஅ வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல்நாட்டி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அருகில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா செங்கல்பட்டு ஆட்சியர் ஜான் லூயிஸ் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர்.
படங்கள்:எம்.முத்து கணேஷ்
40 / 47
41 / 47
42 / 47
43 / 47
44 / 47
45 / 47
46 / 47
47 / 47