Published on : 09 Sep 2020 18:57 pm

பேசும் படங்கள்... (09.09.2020)

Published on : 09 Sep 2020 18:57 pm

1 / 51
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (9.9.2020) நடைபெற்ற கரோனா தொற்று தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பங்கேற்று - புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் அவர் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தூசி.கே.மோகன், பன்னீர்செல்வம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி. படங்கள்: விஎம்.மணிநாதன்
2 / 51
3 / 51
4 / 51
5 / 51
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் இன்று (9.9.2020) பங்கேற்ற முதல்வர் பழனிசாமி... செய்தியாளர்களிடம் பேசினார். அருகில், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தூசி.கே.மோகன், பன்னீர்செல்வம், மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி. படம்: விஎம்.மணிநாதன்.
6 / 51
7 / 51
8 / 51
திருச்சியில் இன்று(9.9.2020) நடைபெற்ற பாஜக கலை மற்றும் கலாச்சாரப் பிரிவின் நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் பேசிய அப்பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் உடன் நிர்வாகிகள்.படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
9 / 51
10 / 51
திருச்சி கள்ளிக்குடி மத்திய வணிக வளாகத்தில் நேற்று புதிதாக செயல்பட தொடங்கிய க டைகளில் பூஜை செய்து காய்கறி வியாபாரத்தை தொடங்கிய வியாபாரிகள். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
11 / 51
12 / 51
13 / 51
சென்னை - எழும்பூரில் தீயணைப்பு துறை வீரர்களுக்கு மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் பயிற்சியை தீயணைப்புத் துறை இயக்குநர் சைலேந்திர பாபு இன்று (9.9.2020) தொடங்கி வைத்தார். அருகில் இணை இயக்குநர் பிரியா ரவிசந்திரன். படங்கள் : பு.க.பிரவீன்
14 / 51
15 / 51
16 / 51
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள டி.டி.கே சாலையில் தனியார் கட்டிடத்தில் இன்று (9.9.2020) தீ விபத்து ஏற்பட்டபோது... அதை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புத் துறையினர். படங்கள் : பு.க.பிரவீன்
17 / 51
18 / 51
19 / 51
20 / 51
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டததில் இன்று (9.9.2020) பங்கேற்ற முதல்வர் பழனிசாமி... பின்னர் காரில் கிரிவலம் சென்றார். படம் : விஎம்.மணிநாதன்
21 / 51
ராமநாதபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட அருண் பிரகாஷ் வழக்கை... தேசிய புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று (9.9.2020) மதுரை முனிச்சாலை பகுதியில் இந்து மக்கள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
22 / 51
சென்னையில் இன்று (9.9.2020) நடைபெற்ற திமுக-வின் பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆக தேர்வு செய்யப்பட்ட துரைமுருகன் மற்றும் பொருளாளராகத் தேர்வு செய்யப்பட்ட டி.ஆர்.பாலு ஆகியோர் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். படங்கள்: க.ஸ்ரீபரத்
23 / 51
24 / 51
25 / 51
26 / 51
27 / 51
மதுரை புறநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் மாநிலப் பொதுச்செயலாளர் சீனிவாசன் தலைமையில்... 200-க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இன்று (9.9.2020) இணைந்தனர். படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
28 / 51
சென்னை - தியாகராய நகரில் இருந்த புகழ்பெற்ற நகைக் கடையொன்றில் மாதாந்திர நகைச்சீட்டு கட்டியவர்களை அந்நிறுவனம் ஏமாற்றியதைத் தொடர்ந்து.... அந்நகைக் கடையை நம்பி சீட்டு கட்டியவர்கள்.... தங்கள் சீட்டுத் தொகையை அந்த நகைக் கடையிடம் இருந்து வசூலித்து தரக் கோரி.... இன்று (9.9.2020) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்க வந்திருந்தனர். படங்கள்: க.ஸ்ரீபரத்
29 / 51
30 / 51
கரோனா தொற்று தடுப்புக்காக அமலில் இருந்த ஊரடங்கு விதிமுறைகளில் பல தளர்வுகளை தற்போது அரசு அறிவித்துள்ளது. இதில் மாநிலத்துக்குள்ளேயே அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்படுவதும் ஒன்று. இந்நிலையில் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வர மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை என்பது தெரிய வருகிறது. இதன் விளைவாக - எப்போதும் பெருங்களத்தூர் பகுதியில் அதிகாலை நேரங்களில் அதிகளவில் இருக்கும் வாகனங்களின் எண்ணிக்கையும், மனித நடமாட்டமும்.... கடந்த 3 நாட்களாக குறைவாகவே காணப்படுகிறது. வழக்கமாக அதிகாலைகளில் பயணிகளுக்காக காத்திருக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் கூறும்போது, ’வழக்கமாக ஒரு நாள் வருமானத்தை அதிகாலையில் 3 மணி நேரத்திலேயே சம்பாதிக்கும் நாங்கள் இப்போதெல்லாம் ஒரு சவாரிகூட கிடைக்காமல் கஷ்டப்படுகிறோம். கூவிக் கூப்பிடுவதற்குக் கூட பயணிகள் இல்லை’ எனப் புலம்பினர். படங்கள்:எம்.முத்துகணேஷ்
31 / 51
32 / 51
சென்னை - தாம்பரம் அருகே வள்ளுவர் குருகுலம் பகுதி ஜிஎஸ்டி சாலையில்... இன்று (9.9.2020) கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் பயணித்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். கார் முழுவதும் எரிந்து உருக்குழைந்தது. படங்கள் : எம்.முத்துகணேஷ்
33 / 51
34 / 51
35 / 51
36 / 51
37 / 51
38 / 51
39 / 51
40 / 51
41 / 51
42 / 51
கரோனா தடுப்புக்காக அமலில் இருந்த ஊரடங்கில் பல தளர்வுகளை அரசு அறிவித்துள்ள நிலையில் - 5 மாதங்களுக்குப் பிறகு சென்னை கோயம்பேடு - பரங்கிமலைக்கு இடையேயான மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் (9.9.2020) தொடங்கியது. படங்கள் : ம.பிரபு
43 / 51
விழுப்புரம் மாவட்டத்துக்கு இன்று (9.9.2020) வருகை தந்த தமிழக முதல்வர் பழனிசாமி பல்வேறு நலத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அருகில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், எம்எல்ஏ-க்கள் குமரகுரு, முத்தமிழ்செல்வன், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உள்ளிட்டோர். படங்கள் : எம்.சாம்ராஜ்
44 / 51
45 / 51
46 / 51
47 / 51
கோவையில் தேசிய புலனாய்வு முகமைப் பிரிவு அதிகாரிகளால் சோதனை நந்தகோபாலின் வீட்டில் ஆய்வு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் விசாரணைக்காக தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார். படம்: ஜெ.மனோகரன்.
48 / 51
கோவை மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள். படம்: ஜெ.மனோகரன்
49 / 51
மருத்துவக் கருவிகள் பொருத்தப்பட்ட அதிநவீன 108 அவசர கால ஊர்தியின் செயல்பாட்டை இன்று (9.9.2020) அமைச்சர் வேலுமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி. படம் : ஜெ.மனோகரன்
50 / 51
51 / 51
வேலூரை அடுத்த கணியம்பாடியில் இன்று (9.9.2020) பகல்பொழுதில் வான்மேகங்கள் மலை முகடுகளை உரசுவது மழையைப் பொழியவா அல்லது மண்ணின் மீது தான் கொண்ட அன்பை வெளிப்படுத்தவா? படம் : வி.எம்.மணிநாதன்

Recently Added

More From This Category

x