1 / 51
ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்த முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் சென்னை பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் முதல் ஞாயிற்றுக் கிழமையான இன்று (6.9.2020) வாகனங்கள் அதிகமாக காட்சியளித்தன.
படங்கள்:எம்.முத்து கணேஷ்.
2 / 51
3 / 51
4 / 51
5 / 51
ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. பல்லாவரம் கண்டோன்மெண்டில் அமைந்துள்ள பூங்கா ஞாயிற்றுக்கிழமையான இன்று (6.9.2020) பொதுமக்கள் அதிகம் வராமல் வெறிச்சோடுக் காட்சியளித்தது.
படங்கள் : எம்.முத்து கணேஷ்
6 / 51
7 / 51
கரோனா ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால் ரயில்வே வாரியம் அனுமதி அளித்தவுடன் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குறைந்த அளவில் மின்சார ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே தயாராகி வருகிறது. இந்நிலையில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள மின்சார ரயில்களில் நேற்று தூய்மை பணிகள் நடைபெற்றன.
பங்கள்: பு.க.பிரவீன்
8 / 51
9 / 51
10 / 51
11 / 51
12 / 51
தளர்வுகளில்லாத முழு ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்ட முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று (6.9.2020) சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்க அலைமோதிய கூட்டம்.
படம் : பு.க.பிரவீன்
13 / 51
14 / 51
தமிழகத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்ட முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று (6.9.2020) மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும்... குடும்பம் குடும்பமாக பொதுமக்கள் திரண்டிருந்தனர்.
படம் : பு.க.பிரவீன்
15 / 51
16 / 51
17 / 51
18 / 51
19 / 51
20 / 51
21 / 51
22 / 51
23 / 51
நாளை (7.9.2020) முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கப்படவுள்ள நிலையில்... சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துகள்புதுப் பொலிவுடன் தயாராகி வருகின்றன.
படம் : பு.க.பிரவீன்
24 / 51
25 / 51
26 / 51
கரோனா ஊரடங்கு உத்தரவு தளர்வுக்குப் பின்னர் இன்று (6.9.2020) திருநெல்வேலி - பாளையங்கோட்டை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெற்ற முதல் ஞாயிற்றுக்கிழமை திருப்பலியில்... பங்கேற்ற கிறிஸ்தவர்கள்.
படங்கள் : மு. லெட்சுமி அருண்.
27 / 51
28 / 51
கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் அடிக்கும் நிலையில்... அவ்வப்போது சில இடங்களில் மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (6.9.2020) திருநெல்வேலி மாவட்டத்தில் வானிலை மேகமூட்டத்துடன் அருமையாக காட்சியளித்தது. திருநெல்வேலி - வண்ணாரப்பேட்டை ரயில் பாலத்தில் இருந்து பார்க்கும்போது மேகங்கள் மேற்குத் தொடர்ச்சி மழையின் மீது தவழ்ந்து செல்லும் காட்சி காவிய ஓவியம் போல் காட்சியளித்தது.
படம் : மு.லெட்சுமி அருண்.
29 / 51
நாளை முதல் தமிழகத்தில் ரயில் போக்குவரத்து தொடங்க உள்ளதையடுத்து... இன்று (6.9.2020) மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ரயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
30 / 51
கரோனா தொற்று காரணத்தால் 5 மாதங்களுக்கு மேலாக சென்னையில் மாநகரப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் - தற்போது மீண்டும் மாநகரப் பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளதையடுத்து... இன்று (6.9.2020) சென்னை - தியாகராய நகர் ரெங்கநாதன் தெருவில் வியாபாரம் களைகட்டியிருந்தது.
படங்கள் : க.ஸ்ரீபரத்
31 / 51
32 / 51
33 / 51
34 / 51
கரோனா தொற்று காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த கோவை - மைக்கேல் தேவாலயம் இன்று (6.9.2020) திறக்கப்பட்டு... சமூக இடைவெளியுடன் கிறிஸ்துவர்கள் பிராத்தனையில் கலந்துகொண்டனர்.
படங்கள் : ஜெ .மனோகரன்
35 / 51
36 / 51
கரோனா தடுப்புக்காக தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டிருந்த
பயணிகளுக்கான ரயில் போக்குவரத்து மீண்டும் நாளை முதல் (7.9.2020) தொடங்குவதால்... இன்று கோவை - ரயில் நிலையப் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ரயில்களை ரயில்வே ஊழியர்கள்சுத்தம் செய்தனர்.
படங்கள் : ஜெ, மனோகரன்
37 / 51
38 / 51
39 / 51
40 / 51
41 / 51
42 / 51
43 / 51
44 / 51
தமிழகத்தில் முதல்முறையாக கோவை - சாய்பாபா காலனியில் திருநங்கைகளால் ’கேட்டரிங் சர்வீஸ்’ தொடங்கப்பட்டுள்ள நிலையில்... இன்று (6.9.2020) பிரியாணி தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள திருநங்கைகள்.
படம் ; ஜெ .மனோகரன்
45 / 51
46 / 51
47 / 51
48 / 51
கரோனா தடுப்புக்காக இதுவரையில் அமலில் இருந்த ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை தற்போது அறிவித்துள்ள நிலையில் - சென்னை - தியாகராய நகர் பாண்டி பஜார் அருகில் - உஸ்மான் சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்துக்குக் கீழே உள்ள தரைக் கடைகளில் இன்று (6.9.2020) மீண்டும் வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியிருந்தது.
படங்கள்: க.ஸ்ரீபரத்
49 / 51
50 / 51
51 / 51
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில்.... தற்ஓது மீண்டும் மாநகரப் பேருந்துகள் இயங்க தொடங்கிவிட்ட நிலையில்... (இன்று (6.9.2020) ஞாயிற்றுக்கிழமை - சென்னை பூக்கடை பஜாரில் பூ வாங்க திரண்டிருந்த பொதுமக்கள்.
படங்கள் : க.ஸ்ரீபரத்