Published on : 05 Sep 2020 18:01 pm

பேசும் படங்கள்... (05.09.2020)

Published on : 05 Sep 2020 18:01 pm

1 / 68
தமிழகத்தில் கரோனா தொற்றுத் தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதையொட்டி... நாளை விற்பனை செய்வதற்காக சென்னை பெரியபாளையம் பகுதியில் இன்று (5.9.2020) சந்தைக்கு வாத்துகளை ஓட்டிச் செல்கிறது ஒரு குடும்பம். படங்கள் : ம.பிரபு
2 / 68
3 / 68
4 / 68
5 / 68
6 / 68
கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக பல மாதங்களாக இயங்காமல் இருந்த ரயில் போக்குவரது சில தளர்வுகளுடன் மீண்டும் வரும் 7-ம் தேதிமுதல் இயங்கவுள்ளது. ரயிலில் பல்வேறு இடங்களுக்கு செல்லவேண்டி... முன் பதிவு செய்ய எக்மோர் ரயில் நிலையத்தின் முன்பதிவு மையத்தில் காத்திருக்கும் பொதுமக்கள். படங்கள் : க.ஸ்ரீபரத்
7 / 68
8 / 68
9 / 68
10 / 68
11 / 68
12 / 68
13 / 68
கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக பல மாதங்களாக இயங்காமல் இருந்த ரயில் போக்குவரது சில தளர்வுகளுடன் மீண்டும் வரும் 7.9.2020 முதல் இயங்கவுள்ளது. ரயிலில் பல்வேறு இடங்களுக்கு செல்லவேண்டி... முன்பதிவுசெய்யும் பணி தற்போது மதுரை ரயில் நிலைய முன்பதிவு மையத்தில் தொடங்கி நடந்து வருகிறது. படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
14 / 68
15 / 68
மதுரை வைகை ஆற்றின் மதிச்சியம் பகுதியில் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றும் பணியில் இன்று (5.9.2020) பொதுப்பணித் துறை மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
16 / 68
ஒரு டன் கரும்புக்கு ரூ.5 ஆயிரம் வழங்கக் கோரி மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தி... மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் இன்று (5.9.2020) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
17 / 68
சனிக்கிழமைகளிலும் அரசு அலுவலகங்கள் இயங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதைத் தொடர்ந்து... இன்று (5.9.2020) சென்னை - தலைமைச் செயலகம்... நாமக்கல் கவிஞர் மாளிகையில் அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். படங்கள் : க.ஸ்ரீபரத்
18 / 68
19 / 68
20 / 68
21 / 68
கரும்பு டன்னுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் இன்று (5.9.2020) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம் : வி.எம்.மணிநாதன்
22 / 68
கரோனா தொற்று ஊரடங்கு நடவடிக்கையைத் தொடர்ந்து தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள... தளர்வுகளின்படி, வரும் 7-ம் தேதி முதல் ரயில் போக்குவரத்து தொடங்கவுள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு செய்ய இன்று (5.9.2020) திருச்சி ரயில்வே நிலைய முன்பதிவு மையத்தில் முகக்கவசம் அணிந்து... சமூக இடை வெளியைப் பின்பற்றி காத்திருந்த பொதுமக்கள். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
23 / 68
24 / 68
கரோனா தொற்று ஊரடங்கு நடவடிக்கையைத் தொடர்ந்து தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள... தளர்வுகளின்படி, வரும் 7-ம் தேதி முதல் ரயில் போக்குவரத்து தொடங்கவுள்ளது. இந்நிலையில் திருச்சி ரயில்வே நிலைய முன்பதிவு மையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய இன்று (5.9.2020) குறைவானவர்களே வந்திருந்தனர். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
25 / 68
திருச்சியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால்... ’ஸ்மார்ட் சிட்டி’ கட்டுமானப் பணிகள் நடைபெறும் சத்திரம் பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள சாலைகள் முழுவதும் சேறும் சகதியுமாக மாறியிருந்தது. படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
26 / 68
27 / 68
28 / 68
திருச்சியில் - நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியசாமி டவர்ஸ் அடித்தளத்தில் இருந்த 100-க்கும் அதிகமான மொபைல் உதிரிபாகக் கடைகள் மழை நீரில் மூழ்கின. படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
29 / 68
30 / 68
திருச்சியில் - நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியசாமி டவர்ஸ் அடித்தளத்தில் இருந்த 100-க்கும் அதிகமான மொபைல் உதிரிபாகக் கடைகள் மழை நீரில் மூழ்கின. மழைநீரில் ஏராளமான நனைந்து வீணாகியதாக கூறப்ப்படுகிறது. படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
31 / 68
32 / 68
திருச்சி - சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் மழைக்கு முன்னரே தூர்வார வேண்டிய சாக்கடைகளை... மழைபெய்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது அவசர அவசரமாக தூர்வாரும் மாநகராட்சினர். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
33 / 68
34 / 68
புதுச்சேரியில் மின்சார கட்டண உயர்வைக் கண்டித்து... திராவிடர் விடுதலைக் கழத்தினர் இன்று (5.9.2020) தங்களது கைகளில் தீப்பந்தத்தை ஏந்தி... கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். படங்கள்: எம்.சாம்ராஜ்
35 / 68
36 / 68
புதுச்சேரியில் அதிகரித்துவரும் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் இன்று (5.9.2020) காமராஜர் நகர் மடுவுபேட்டில் கரோனா பரிசொதனையில் ஈடுபட்டனர். அருகில் சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், மாவட்ட ஆட்சியர் அருண், சுகாதாரத் துறை இயக்குநர் மோகன்குமார். படங்கள்: எம்.சாம்ராஜ்
37 / 68
38 / 68
39 / 68
கடந்த 9 மாதங்களாக வழங்கப்படாத சம்பளத்தை வழங்கக் கோரி... புதுச்சேரி அரசு நிதி உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் இன்று (5.9.2020) கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு தலைமை அஞ்சல் நிலையம் முன்பு ஆர்பாட்டம் நடத்த பேரணியாக வந்தனர். படங்கள்: எம்.சாம்ராஜ்
40 / 68
41 / 68
கடந்த 9 மாதங்களாக வழங்கப்படாத சம்பளத்தை வழங்கக் கோரி... புதுச்சேரி அரசு நிதி உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் இன்று (5.9.2020) கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு தலைமை அஞ்சல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள். படங்கள்: எம்.சாம்ராஜ்
42 / 68
43 / 68
புதுச்சேரியில் பல ஆண்டுகளாக அரும்பார்த்தபுரம் பாலம் கட்டும் பணி நடந்து வரும் நிலையில்... தற்போது பாலத்தின் பணிகள் அனைத்தும் முடிவுற்று இறுதிகட்டப் பணியாக பாலத்தின் டிவைடர்கள் அமைக்கும் பணி நடந்து வருகறது. படங்கள்: எம்.சாம்ராஜ்
44 / 68
45 / 68
கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக பல மாதங்களாக இயங்காமல் இருந்த ரயில் போக்குவரது சில தளர்வுகளுடன் மீண்டும் வரும் 7.9.2020 முதல் இயங்கவுள்ளது. ரயிலில் பல்வேறு இடங்களுக்கு செல்லவேண்டி... முன்பதிவுசெய்ய திருநெல்வேலி ரயில் நிலையத்துக்கு இன்று வந்த பொதுமக்கள் . படங்கள் : மு.லெட்சுமி அருண்.
46 / 68
47 / 68
48 / 68
சென்னையில் வரும் 7-ம் தேதிமுதல் மீண்டும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கவுள்ள நிலையில்... சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் இன்று (5.9.2020) ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வின்போது சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் பிரதீப் யாதவ் உட்பட பலர் உடனிருந்தனர். படம் : பு.க.பிரவீன்
49 / 68
50 / 68
51 / 68
52 / 68
53 / 68
54 / 68
55 / 68
56 / 68
57 / 68
58 / 68
வேலூர் முக்கிய பகுதியான கிருபானந்த வாரியார் சாலையில் 100 ஆண்டுகள் பழமையான அரச மரம் இன்று (5.9.2020) சாலை நடுவே வேருடன் சாய்ந்தது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்ததுடன் 4 இருசக்கர வாகனங்களும் ஒரு காரும் சேதம் அடைந்தன. சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அப்புறப்படுத்தம் பணியில் வேலூர் தீயணைப்பு துறையினர் உட்பட சுமார் 20-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். வேலூரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாகவும், மரத்தின் அருகே கால்வாய் மற்றும் மின்சார கேபிள்கள் அமைக்க தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினாலும் மரத்தின் வேர்ப் பகுதிகள் பிடிமானம் இழந்து பழமையான மரம் சாய்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். படங்கள் : வி.எம்.மணிநாதன்
59 / 68
60 / 68
61 / 68
62 / 68
63 / 68
64 / 68
65 / 68
66 / 68
67 / 68
68 / 68

Recently Added

More From This Category

x