Published on : 03 Sep 2020 19:29 pm

பேசும் படங்கள்... (03.09.2020)

Published on : 03 Sep 2020 19:29 pm

1 / 44
கரோனா தடுப்புக்காக விதிக்கப்பட்டிருந்த தடைகளில் பல விதிகள் தளர்த்தப்பட்டதைத் தொடந்து வரும் 7-ம் தேதி முதல் மெட்ரோ ரயில் ஓடும் என அறிவிக்கப்பட்டது. அதனையொட்டி கிண்டி பகுதியில் இன்று (3.9.2020) மெட்ரோ ரயில் சோதனை ஓட்டமாக ஓட்டிப்பார்க்கப்பட்டது. படங்கள் : எம்.முத்துகணேஷ்
2 / 44
3 / 44
4 / 44
கரோனா தடுப்புக்காக விதிக்கப்பட்டிருந்த விதிமுறைகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து வரும் செப்.7-ம் தேதிமுதல் பயணிகளுக்கான ரயில் போக்குவரத்து தொடங்கவுள்ளதால்... மதுரை ரயில்வே நிலையத்தில் இன்று (3.9.2020) இருப்புப் பாதைகளில் தண்டவாளங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றது. படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
5 / 44
கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால்... கடந்த மார்ச் மாதம் தொடங்கி 5 மாதங்களுக்கு மேலாக மூடிக்கிடக்கும் மதுரை - மாட்டுத்தாவணி அருகே உள்ள காய்கறி மார்க்கெட். படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
6 / 44
கடந்த சில நாட்களாக வெயிலின் கொடுமை வாட்டியெடுத்து வருகிற நிலையில்... நேற்று (2.9.2020) மாலை பெய்த மழையால் குளிர்ந்த சூழ்நிலை நிலவியது. அதனால் இன்று காலை குறிச்சி பகுதியில் உள்ள நிலத்தின் மேல் பனி படர்ந்த ரம்மியமான காட்சி கண்களைக் கவர்ந்தன. படங்கள்: மு. லெட்சுமி அருண்.
7 / 44
8 / 44
9 / 44
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் நான்கு வழிச் சாலை அமைகப்பட்டு... வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
10 / 44
சென்னை - தேனாம்பேட்டை பகுதியில் உள்ள வீடுதோறும் சென்று... அரசுப் பள்ளியில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு தாம்பூலம் வைத்து அழைப்பு விடுத்த ஆசிரியர்கள். படங்கள்: பு.க.பிரவீன்
11 / 44
12 / 44
மதுரை - எல்லீஸ் நகர் பகுதி சத்தியமூர்த்தி நகரில்... புதிதாக மதுக்கடை திறக்கப்படுவதை கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் இன்று (3.9.2020) மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தனர். படம் : எஸ் .கிருஷ்ணமூர்த்தி
13 / 44
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக 5 மாதங்களுக்கு மேலாக ரத்து செய்யப்பட்டிருந்த -ரயில் போக்குவரத்து வரும் செப். 7-ம் தேதி முதல் மாநிலங்களுக்குள்ளேயே தொடங்கவுள்ளதை அடுத்து... இன்று (3.9.2020) எழும்பூர் தண்டவாளங்களை சரி செய்யும் ஊழியர்கள். படம்: பு.க.பிரவீன்
14 / 44
15 / 44
16 / 44
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பூல்பாண்டியன் என்பவர்... தான் பல இடங்களில் சுற்றித் திரிந்து பலரிடத்தில் யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கரோனா நிவாரண நிதியாக வழங்கினார். இவர் - இப்படி யாசகம் பெற்ற பணத்தை ஆட்சியரிடம் நிதியாக வழங்குவது 11-வது முறையாகும். படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
17 / 44
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று (3.9.2020) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... திருச்சி மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர் கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
18 / 44
19 / 44
20 / 44
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக கடந்து 5 மாதங்களுக்கு மேலாக ரத்து செய்யப்பட்டிருந்த ரயில் போக்குவரத்து... வரும் 7-ம் தேதிமுதல் மாநிலங்களுக்குள்ளே தொடங்க உள்ளது. இதையொட்டி... எழும்பூர் ரயில் நிலையத்தில் கிருமிநாசினி தெளித்தல், தண்டவாளங்கள் சரிப்பார்த்தல், நடைமேடையில் பயணிகள் அமர புதிய இருக்கை அமைத்தல் போன்ற பணிகள் மும்முரமாக இன்று (3.9.2020) நடைபெற்றன. படங்கள் : ம. பிரபு
21 / 44
22 / 44
மாநகப் போக்குவரத்துக் கழகம்... தொழிலாளர்களிடம் இருந்து சொசைட்டிக்காக பிடித்தம் செய்த தொகை ரூ.54 கோடியினை... உடனே தொழிலாளர்களுக்கு வழங்கக் கோரி... இன்று (3.9.2020) அனைத்து சங்கக் கூட்டமைப்பு சார்பில்... பல்லவன் இல்லம் தலமை அலுவலகம் முன்பு முற்றுக போராட்டம் செய்தனர். படங்கள்: க.ஸ்ரீபரத்
23 / 44
24 / 44
25 / 44
தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக கடந்த சில மாதங்களாக மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. அரசு சில தளர்வுகளுடன் மீண்டும் பேருந்து போக்குவரத்துக்கு வரும் 7-ம் தேதி முதல் அனுமதியளித்துள்ளது. இதையொட்டி இன்று (3.9.2020) சென்னை பல்லவன் இல்லம் பணிமனையில் விரைவு பேருந்துகளை தயார் நிலையில் இருக்க ஏற்பாடுகளை கவணிக்கும் ஊழியர்கள். படங்கள் : க,ஸ்ரீபரத்
26 / 44
27 / 44
28 / 44
29 / 44
30 / 44
புதுச்சேரியில் வீடுவிடாக கரோனா கணக்கு எடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு... கடந்த 5 மாதங்களாக வழங்கப்படாத சம்பளத்தை வழங்கக் கோரி இன்று (3.9.2020) புதுச்சேரி- நலவழித் துறை இயக்குநர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: எம்.சாம்ராஜ்
31 / 44
கரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் புதுச்சேரியில் அதிகரித்து வருகிறது. இதையடுத்து இன்று (3.9.2020) புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகத்தின் கதவுகளை இழுத்து மூடி... தர்ணாப் போராட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், வையாபுரிமணிகண்டன் ஆகியோர் ஈடுபட்டனர் படம்: எம்.சாம்ராஜ்.
32 / 44
33 / 44
புதுச்சேரி - சுகாதாரத் துறை அலுவலகம் முன்பு இன்று (3.9.2020) தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், வையாபுரிமணிகண்டனிடம் புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநர் மோகன்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார் . படம்: எம்.சாம்ராஜ்
34 / 44
கரோனா சிகிச்சை பணிக்கு தற்காலிக செவிலியர்களை பணியமர்த்த... புதுச்சேரி அரசு ஊத்தரவிட்டுள்ளதையடுத்த... புதுச்சேரி சுகாதாரத் துறை அலுவலகத்தில் நேர்முக தேர்வுக்கு இன்று (3.9.2020) கலந்துகொள்ள வரிசையில் காத்திருக்கும் மருத்துவ மாணவிகள். படம்: எம்.சாம்ராஜ்
35 / 44
36 / 44
37 / 44
38 / 44
தமிழகம் முழுவதும் அரசு விரைவு பேருந்துகள் வரும் செப்.7-ம் தேதி முதல் இயக்கப்படவுள்ள நிலையில்... இன்று (3.9.2020) சென்னை - கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துகளை இயக்கி சோதனை செய்வது, அரசு வழிகாட்டுதலின்படி இருக்கைகளை அமைப்பது மற்றும் பேருந்து வளாகத்தை சுத்தம் செய்யும் பணி போன்றவை மேற்கொள்ளப்பட்டன. படங்கள் : ம.பிரபு
39 / 44
40 / 44
41 / 44
42 / 44
43 / 44
5 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சென்னை மாநகரில் வரும் 7-ம் தேதிமுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளதால்... இன்று (3.9.2020) பரிசோதனை ஓட்டம் நடந்தது. இடம் : கிண்டி கத்திபாரா மேம்பாலம் படங்கள் : ம.பிரபு
44 / 44

Recently Added

More From This Category

x