பேசும் படங்கள்... (02.09.2020)
Published on : 02 Sep 2020 18:23 pm
1 / 34
கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக... 5 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த தியாகராய நகர் வெங்கட் நாராயணா பூங்கா நேற்று (1.9.2020) முதல் மீண்டும் திறக்கப்பட்டு... பொதுமக்கள் பயன் பாட்டுக்கு வந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் திறந்த அன்றே... பூங்காவில் உடற்பயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள்.
படங்கள்: க.ஸ்ரீபரத்
2 / 34
3 / 34
4 / 34
5 / 34
6 / 34
கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையால் 5 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த... சென்னை - தியாகராய நகர் - திருப்பதி தேவஸ்தானம் மீண்டும் நேற்று (1.9.2020) முதல் திறக்கப்பட்டு... பக்தர்களின் சுவாமி தரிசனம் நடைபெற்றது. படங்கள் : க.ஸ்ரீபரத்
7 / 34
8 / 34
9 / 34
காயிதே மில்லத் கல்லூரியில் சேர்வதற்கு... ஆன் லைன் மூலம் விண்ணப்பித்திருந்த மாணவிகளின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி அக்கல்லூரியில் இன்று (2.9.2020) நடைபெற்றது. அதற்காக - கல்லூரியில் திரண்டிருந்த மாணவிகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்.
படங்கள் : க.ஸ்ரீபரத்
10 / 34
11 / 34
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பணியின்போது செவிலியர் ஒருவர் மருத்துவரைத் தாக்கியதைக் கண்டித்தும்... அந்த செவிலியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும்... அம்மருத்துவமனையின் நிர்வாக அலுவலகம் முன்பு இன்று (2.9.2020) மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12 / 34
13 / 34
கடந்த 7 ஆண்டுகளாக காவலர் தேர்வு நடத்தாத புதுச்சேரி அரசைக் கண்டித்து இன்று (2.9.2020) மாணவர்கள் கூட்டமைப்பினர் புதுச்சேரி - தலைமை அஞ்சல் நிலையம் முன்பு... மெழுவத்தி ஏந்தியும் சங்கு ஊதியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படம் : .எம்.சாம்ராஜ்.
14 / 34
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் 5 மாதங்களுக்கும் மேலாக மூடிக்கிடந்த வழிபாட்டுத்தலங்கள் அனைத்தும் நேற்று (2.9.2020) முதல் திறக்கப்பட்ட நிலையில்... சென்னை வடபழனி முருகன் கோயிலில் இன்று முதல் பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டது.
படங்கள்: பு.க.பிரவீன்
15 / 34
16 / 34
17 / 34
18 / 34
19 / 34
20 / 34
சென்னை - கோபாலபுரம் போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதல்வர்
ஜெயலலிதாவின் வீடான ’வேதா இல்லம்’ முன்பு சசிகலா கட்டிக் கொண்டிருக்கும் புதிய கட்டிடம் நுழைவுவாயிலின் முன்பு வருமான வரித் துறை நோட்டீஸ் ஒட்டியுள்ளது. படங்கள் : பிரபு
21 / 34
22 / 34
23 / 34
மதுரை வைகை அணையில் இருந்து விவசாயப் பணிகளுக்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர் மதுரை கள்ளந்திரி கால்வாயை இன்று (2.9.2020) வந்தடைந்தது.
படங்கள் ; எஸ். கிருஷ்ணமூர்த்தி
24 / 34
25 / 34
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள பகுதியில் மின்வாரிய ஊழியர்கள் பழைய கம்பங்களை அகற்றிவிட்டு... புதிய மின் கம்பங்களை நடும் பணி இன்று (2.9.2020) நடைபெற்றனர்.
படம் ; எஸ். கிருஷ்ணமூர்த்தி
26 / 34
கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் சங்கர் ராஜ் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து.... இன்று தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
27 / 34
வடபழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக... அதற்கான திருப்பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
படங்கள் : பு.க.பிரவீன்
28 / 34
29 / 34
30 / 34
31 / 34
கரோனா தடைகள் தளர்வுக்குப் பின்னர் நேற்று (1.9.2020) முதல் கோயில்கள் மீண்டும் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டன. இருப்பினும் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே உள்ளது. திருநீர்மலை பெருமாள் கோயிலில் இன்று ஒருசில பக்தர்களே வந்ததாக கூறப்பட்டது.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
32 / 34
33 / 34
34 / 34