1 / 107
தமிழகத்தில் கோயில்கள் திறந்து இன்று (செப். 1) முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோயிலில்... கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தரிசனம் செய்ய வரும் பொதுமக்களை... சமூக இடைவெளி விட்டு நிற்க வைத்து, உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
படம் : வி.எம்.மணிநாதன்.
2 / 107
3 / 107
4 / 107
5 / 107
தமிழகம் முழுவதும் இன்று (செப்டம்பர் - 1) முதல் அரசுப் பேருந்துகளை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து... இன்று வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகளுக்கு கிருமி நாசினி மருந்து தெளித்து... சுத்தப்படுத்தி, பயணிகளுக்கு உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்யப்பட்டு மாநகராட்சி சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
படம்: வி.எம்.மணிநாதன்.
6 / 107
7 / 107
8 / 107
9 / 107
10 / 107
11 / 107
12 / 107
தமிழகம் முழுவதும் நேற்று (செப். 1) முதல் அரசுப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இன்று இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகளுக்கு கிருமி நாசினி மருந்து தெளித்து... சுத்தப்படுத்தி... பயணிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டன. மேலும் - குறைந்தபட்ச எண்ணிக்கையில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் குறைந்த எண்ணிக்கையிலான பொதுமக்களே பேருந்துகளில் பயணம் செய்தனர்.
படம் : வி.எம்.மணிநாதன்
13 / 107
14 / 107
15 / 107
16 / 107
17 / 107
கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு காரணமாக... ஆந்திர உள்ளிட்ட மற்ற மாநிலத்தில் இருந்து வாகனத்தில் தமிழக எல்லைக்குள் வருபவர்கள் இ-பாஸ் பெற்று வருகிறார்களா என காட்பாடியை அடுத்த கிறிஸ்டியான் பேட்டை பகுதி தமிழக -ஆந்திர எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் இன்று (1.9.2020) காவல்துறையினர் தீவிர சோதனை செய்தனர். மேலும் - அந்த வாகனங்களுக்கு சுகாதார துறையினர் கிருமி நாசினி மருந்து தெளித்து, ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளுக்கு காய்ச்சல் உள்ளதா என உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து... தமிழக எல்லைக்குள் அனுமதித்தனர். அத்தியாவசியத் தேவையின்றி இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பினர்.
படம் : வி.எம்.மணிநாதன்
18 / 107
19 / 107
20 / 107
21 / 107
22 / 107
23 / 107
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடிநீர் பிரச்சினை, தடுப்பனை மற்றும் பாதாள சாக்கடை பணிகள், கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு சிகிச்சை மற்றும் தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டம் தொடர்பாக, வேலூர் திமுக மத்திய மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அணைக்கட்டு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார். அருகில், வேலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன்.
படம்: வி.எம்.மணிநாதன்.
24 / 107
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க பல மாதங்களாக அரசுப் பேருந்துகள் இயங்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஏறக்குறைய 5 மாதங்கள் கழித்து சென்னையில்... மீண்டும் இன்று (1.9.2020) முதல் இயக்கப்பட்ட மாநகர பொது போக்குவரத்து.
இடம்: கோட்டை ரயில்நிலையம் சிக்னல்.
படம் : ம.பிரபு
25 / 107
26 / 107
27 / 107
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானதையொட்டி... அதற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் விதமாக.... இன்று (1.9.2020) சென்னை - சென்ட்ரல் ரரில் நிலையம் முன்பு... அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேசியக் கொடி.
படம் : ம.பிரபு
28 / 107
கரோன தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக பொது போக்குவரத்துக்கு விதித்திருந்த தடையை இன்று (1.9.2020) முதல் தமிழக அரசு விலக்கிக்கொண்டதையடுத்து... 5 மாதங்களுக்குப் பிறகு இன்று அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. பெருங்குளத்தூர் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்களும் பேருந்துகளும்.
படங்கள் : எம்.முத்து கணேஷ்
29 / 107
30 / 107
31 / 107
32 / 107
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக பொது போக்குவரத்துக்கு விதித்திருந்த தடையை இன்று (1.9.2020) முதல் தமிழக அரசு விலக்கிக் கொண்டதையடுத்து... 5 மாதங்களுக்குப் பிறகு இன்று சென்னை - பாரிமுனை பேருந்து நிலையத்தில் இருந்து பல இடங்களுக்குச் செல்ல பொதுமக்கள் வசதிக்காக அதிகளவில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள்.
படம் : ம.பிரபு
33 / 107
34 / 107
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக பொது போக்குவரத்துக்கு விதித்திருந்த தடையை இன்று (1.9.2020) முதல் தமிழக அரசு விலக்கிக் கொண்டதையடுத்து...
5 மாதங்களாக வெறிச்சோடிக் கிடந்த சாலைகள் சென்னை - குரோம்பேட்டை பகுதி ஜிஎஸ்டி சாலை இன்று வாகனங்களால் நிரம்பி காட்சியளித்தது.
படங்கள் : எம்.முத்து கணேஷ்
35 / 107
36 / 107
37 / 107
38 / 107
39 / 107
தமிழ் நாடு தீயணைப்பு மீட்புப் பணித் துறைப் பணியாளர்கள் பிளாஸ்மா தானம் செய்யும் நிகழ்ச்சி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று (1.9.2020) நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தீயணைப்புத் துறை இயக்குநர் சைலேந்திர பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இடம்: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை,
படங்கள் : ம.பிரபு
40 / 107
41 / 107
42 / 107
43 / 107
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக பொது போக்குவரத்துக்கு விதித்திருந்த தடையை தமிழக அரசு விலக்கிக் கொண்டதையடுத்து... 5 மாதங்களுக்குப் பிறகு இன்று (1.9.2020) சென்னையில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில் - பாரிமுனையில் இருந்து கோயம்பேடுக்குச் சென்ற பேருந்து ஒன்று புரசைவாக்கம் பகுதியில் பிரேக் டவுன் ஆனதையடுத்து... பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டு போக்குவரத்து காவலர்கள் பொதுமக்கள் உதவியுடன் பேருந்தை தள்ளிக்கொண்டு போய் ஓரம் கட்டினர்.
படம். ம.பிரபு
44 / 107
45 / 107
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக பொது போக்குவரத்துக்கு விதித்திருந்த தடையை தமிழக அரசு விலக்கிக் கொண்டதையடுத்து... 5 மாதங்களுக்குப் பிறகு இன்று (1.9.2020) சென்னையில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன கரோனா அச்சம் மக்களிடம் இன்னும் குறையவில்லை என்பதை அறிவிக்கும் வகையில்... குறைந்த அளவு பயணிகளுடன் வேளச்சேரி பகுதியில் செல்லும் அரசுப் பேருந்து.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
46 / 107
47 / 107
48 / 107
அரசு அறிவித்துள்ள நடத்தை விதிகளின்படி அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் முகக்கவசத்துடன் பேருந்துகளை இயக்கினர். மேலும் வேளச்சேரி விஜய நகர பேருந்து நிலையத்தில் சமூக இடைவெளியுடன் பயணிகள் பேருந்துக்காக காத்திருந்தனர்.
படங்கள் : எம்.முத்து கணேஷ்
49 / 107
50 / 107
அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில்... இன்று சென்னை - வண்டலூர் பகுதியில் குவிந்த வாகனங்கள்.
படங்கள் : எம்.முத்து கணேஷ்
51 / 107
52 / 107
53 / 107
54 / 107
55 / 107
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக கோயில்களைத் திறக்க தடைவிதித்திருந்த நிலையில்... இன்று (1.9.2020) முதல் மீண்டும் கோயில்கள் திறக்கப்பட்டதையடுத்து... மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனத்துக்காக பக்தர்கள் காத்திருந்தனர்.
படங்கள்: பு.க.பிரவீன்
56 / 107
57 / 107
58 / 107
59 / 107
60 / 107
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அரசு தடைவிதித்திருந்த நிலையில்... இன்று (1.9.2020) முதல் மீண்டும் அவை எல்லாம் திறக்கப்பட்டதையடுத்து... சென்னை - அண்ணா சாலையில் உள்ள மசூதியில் வழிபாடு நடைபெற்றது.
படங்கள் : பு.க.பிரவீன்
61 / 107
62 / 107
63 / 107
64 / 107
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக வழிபாட்டு தலங்களைத் திறக்க அரசு தடைவிதித்திருந்த நிலையில்... இன்று (1.9.2020) முதல் மீண்டும் அவையெல்லாம் திறக்கப்பட்டன. ஆனால்... சென்னை - சாந்தோம் தேவாலயம் உள்ளே சென்று வழிபட சில காரணங்களால் இன்று அனுமதிக்காத நிலையில்... வெளியே இருந்து சிலர் வழிபட்டுச் சென்றனர்.
படங்கள்: பு.க.பிரவீன்
65 / 107
66 / 107
67 / 107
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அமலில் இருந்த ஊரடங்கு விதிமுறைகளில்...
இன்று (1.9.2020) முதல் பல தளர்வுகளை அரசு அறிவித்துள்ள நிலையில்... கடற்கரையில் பொதுமக்கள் திரள தடை நீங்கவில்லை. எனினும் இன்று பொதுமக்கள் பலர் குடும்பத்துடன் மெரினா கடற்கரைக்கு வந்து உல்லாசமாக பொழுதைக் கழித்தனர்.
படங்கள்: பு.க.பிரவீன்
68 / 107
69 / 107
70 / 107
71 / 107
72 / 107
73 / 107
74 / 107
75 / 107
76 / 107
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக பொது போக்குவரத்துக்கு விதித்திருந்த தடையை தமிழக அரசு விலக்கிக் கொண்டதையடுத்து... 5 மாதங்களுக்குப் பிறகு இன்று (1.9.2020) சென்னையில் இயல்பு நிலை திரும்பியது. ஆலந்தூர் - கத்திப்பாரா சந்திப்புப் பகுதியில் சாலைகளில் அணிவகுத்த வாகனங்களும், அரசுப் பேருந்துகளும்..
படங்கள் : எம்.முத்துகணேஷ்
77 / 107
78 / 107
79 / 107
80 / 107
81 / 107
82 / 107
83 / 107
84 / 107
85 / 107
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக கடந்த 5 மாதங்களாக கோயில்கள் மூடப்பட்டிருந்தன. இதுவரை அமலில் இருந்த ஊரடங்கில் சில தளர்வுகளை அரசி அறிவித்துள்ளதை அடுத்து இன்று (1.9.2020) முதல் கோயில்கள் பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட்டன. இதையடுத்து சென்னை - நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் இன்று திறக்கப்பட்டு பக்தர்கள் சோதனைக்கு பின்பு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
86 / 107
87 / 107
88 / 107
89 / 107
வேலூரை அடுத்த பொய்கை கிராமத்தில் இன்று (1.9.2020) விவசாயப் பணியில் மும்மரமாக ஈடுபட்ட பெண் விவசாயத் தொழிலாளர்கள்.
படங்கள்: வி.எம்.மணிநாதன
90 / 107
91 / 107
92 / 107
சென்னை - அண்ணா நகரில் உள்ள வீ.ஆர். மாலில்... உள்ளே செல்ல இன்று திரண்டிருந்த பொதுமக்கள்... உடல் வெப்பப் பரிசோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்>
படங்கள் : ம.பிரபு
93 / 107
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக... தமிழகத்தில் அனைத்து மால்களும் மூடப்பட்டிருந்த நிலையில்... 5 மாதங்களுக்குப் பிறகு சென்னை அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசா ... இன்று (1.9.2020) மீண்டும் திறக்கப்பட்ட நிலையில்... குறைந்த அளவிலேயே பொதுமக்கள் வருகைபுரிந்தனர்.
படங்கள் : ம. பிரபு
94 / 107
95 / 107
96 / 107
இரு தினங்களுக்கு முன்னால் காலமான முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜியின் மறைவையோட்டி... புதுச்சேரி- காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவரது உருவப்படத்துக்க்கு... நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்ட்
படம்: எம்.சாம்ராஜ்
97 / 107
புதுச்சேரியில்... தொடர்ந்து வாட்டி வதைத்துக்கொண்டிருக்கும் வெயிலால் வெப்பச்சலனம் அதிகரித்த நிலையில்... இன்று மதியவேளையில் கொட்டிய மழையில் நனைந்தபடி செல்லும் வாகன ஓட்டிகள்.
இடம் : புதுச்சேரி -கோரிமேடு சாலை
படம்: எம்.சாம்ராஜ்
98 / 107
99 / 107
100 / 107
புதுச்சேரி - மொரடாண்டி சனீஸ்வரன் ஆலயத்தில் இன்று (1.9.2020) ராகு - கேது பெயர்ச்சியை முன்னிட்டு... ஸ்ரீ ராகு பகவானுகு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட கும்ப நீர் ஊற்றப்பட்டு அபிஷேகமும் வழிபாடும் நடந்தன.
படங்கள்: எம்.சாம்ராஜ்
101 / 107
102 / 107
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த
மதுரை - சொக்கிக்குளத்தில் உள்ள விஷால் டி மால்.
இன்று (1.9.2020) மீண்டும் திறக்கப்பட்டது.
படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
103 / 107
104 / 107
105 / 107
மதுரை பிடிஆர் இன்ஜினீயரிங் கல்லூரியில் ஜே இ இ தேர்வு நடைபெறும் வளாகத்தில் இன்று (1.9.2020) மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்து தேர்வு வளாகத்துக்குள் செல்லும் மாணவர்கள்.
படம் ; எஸ். கிருஷ்ணமூர்த்தி
106 / 107
107 / 107