Published on : 30 Aug 2020 17:27 pm

பேசும் படங்கள்... (30.08.2020)

Published on : 30 Aug 2020 17:27 pm

1 / 67
தமிழகத்தில் - ’கரோனா’ தொற்றுப் பரவலைத் தடுக்க... ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ள நிலையில்... இன்று (30.8.2020) சென்னை - புறநகர் பகுதிகளான பல்லாவரம், வேளச்சேரி மற்றும் தாம்பரம் பகுதி சாலைகள் அனைத்தும் எந்த வாகனப் போக்குவரத்தும் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. படங்கள் : எம்.முத்து கணேஷ்
2 / 67
3 / 67
4 / 67
5 / 67
6 / 67
7 / 67
8 / 67
9 / 67
இரு தினங்களுக்கு முன்பு உடல் நலக் குறைபாட்டால் காலமான - கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமாரின் உடல்... அவரது சொந்த ஊரான அகஸ்த்தீஸ்வரத்தில் இருந்து சுக்குப்பாறை தெரிவிளைக்கு அடக்கம் செய்வதற்காக இன்று எடுத்துச்செல்லப்பட்டது. இதில் ஏராளமான அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். படங்கள்: மு.லெட்சுமி அருண்
10 / 67
11 / 67
12 / 67
13 / 67
14 / 67
இரு தினங்களுக்கு முன்பு உடல் நலக் குறைபாட்டால் காலமான - கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமாரின் உடல்... அவரது சொந்த ஊரான அகஸ்த்தீஸ்வரத்தில் இருந்து சுக்குப்பாறை தெரிவிளைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள தோட்டத்தில் இன்று (30.8.2020) நல்லடக்கம் செய்யப்பட்டது. படங்கள்: மு.லெட்சுமி அருண்
15 / 67
16 / 67
17 / 67
18 / 67
19 / 67
இரு தினங்களுக்கு முன்பு உடல் நலக் குறைபாட்டால் காலமான - கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமாரின் உடல்... அவரது சொந்த ஊரான அகஸ்த்தீஸ்வரத்தில் இருந்து சுக்குப்பாறை தெரிவிளைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள தோட்டத்தில் இன்று (30.8.2020) நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அகஸ்த்தீஸ்வரம் அதன் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலமான வசந்தகுமாருக்கு ஏராளமான கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. படங்கள் : மு.லெட்சுமி அருண்
20 / 67
இரு தினங்களுக்கு முன்பு உடல் நலக் குறைபாட்டால் காலமான - கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமாரின் உடல்... அவரது சொந்த ஊரான அகஸ்த்தீஸ்வரத்தில் இருந்து சுக்குப்பாறை தெரிவிளைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள தோட்டத்தில் இன்று (30.8.2020) நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் - காலமான வசந்தகுமாருக்கு அகஸ்த்தீஸ்வரம், வடக்கன் பற்று உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வீட்டு வாசலில், சாலைகளில் கருப்புக்கொடி ஏற்றிவைத்தும்... அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்தும் இப்பகுதி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். படங்கள் : மு.லெட்சுமி அருண்
21 / 67
22 / 67
23 / 67
24 / 67
25 / 67
இரு தினங்களுக்கு முன்பு உடல் நலக் குறைபாட்டால் சென்னையில் காலமான - கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமாரின் உடல்... அவரது சொந்த ஊரான அகஸ்த்தீஸ்வரத்து எடுத்துச் செல்லப்பட்டு... அங்கு அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. இன்று (30.8.2020) அவரது உடலுக்கு அஞ்சலி கன்னியாகுமரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணன், ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு .வடநேரே ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். படங்கள்: மு. லெட்சுமி அருண்.
26 / 67
27 / 67
28 / 67
29 / 67
30 / 67
31 / 67
இரு தினங்களுக்கு முன்பு உடல் நலக் குறைபாட்டால் காலமான - கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமாரின் உடல்... அவரது சொந்த ஊரான அகஸ்த்தீஸ்வரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு... அங்கு அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று (30.8.2020) வைக்கப்பட்டிருந்தது. அவருக்கு அஞ்சலி செலுத்த பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தரும் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை கூட்டத்தை கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. படங்கள் : மு.லெட்சுமி அருண்
32 / 67
33 / 67
இரு தினங்களுக்கு முன்பு உடல் நலக் குறைபாட்டால் காலமான - கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமாரின் உடல்... அவரது சொந்த ஊரான அகஸ்த்தீஸ்வரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று (30.8.2020) வைக்கப்பட்டிருந்த்து. காலமான வசந்தகுமார்... அவர் சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சியினரிடமும் , மாற்று கட்ட்சியினரிடமும்... அவர் சொந்த ஊர்வாழ் மக்களிடமும் மற்றும் ஏழை எளியோரிடமும் எளிமையாகவும் மிகவும் அன்பாகவும் பழகியவர். எனவே அவரது உடலுக்கு பாமர மக்கள் முதல் அவரிடம் பழகியவர்கள் வரை அஞ்சலி செலுத்த வந்திருந்தனர். படங்கள்: மு.லெட்சுமி அருண்
34 / 67
35 / 67
36 / 67
இரு தினங்களுக்கு முன்பு உடல் நலக் குறைபாட்டால் காலமான - கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமாரின் உடல்... அவரது சொந்த ஊரான அகஸ்த்தீஸ்வரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று (30.8.2020) வைக்கப்பட்டிருந்தது. காலமான வசந்தகுமாரின் உடலின் அருகே சோகமுடன் அமர்ந்திருக்கும் அவரது மகன்கள் மற்றும் குடும்பத்தினர். படங்கள் : மு.லெட்சுமி அருண்
37 / 67
38 / 67
39 / 67
40 / 67
இரு தினங்களுக்கு முன்பு உடல் நலக் குறைபாட்டால் காலமான - கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமாரின் உடல்... அவரது சொந்த ஊரான அகஸ்த்தீஸ்வரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று (30.8.2020) வைக்கப்பட்டிருந்த்து. காலமான வசந்தகுமார் யாரை பார்த்தாலும் சிரித்த முகத்துடன் வரவேற்பதை தனது வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தவர். தனது இறப்பு செய்தி அறிந்து தனது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த பொதுமக்களுக்கு இன்முகத்துடன் நன்றி தெரிவிப்பது போன்று அமைந்திருந்ததாக எண்ணி... வருந்தி... கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியைப் பார்த்து பொதுமக்கள் நெகிழ்ந்தனர். படங்கள் : மு. லெட்சுமி அருண்
41 / 67
42 / 67
43 / 67
இரு தினங்களுக்கு முன்பு உடல் நலக் குறைபாட்டால் காலமான - கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமாரின் உடல்... அவரது சொந்த ஊரான அகஸ்த்தீஸ்வரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று (30.8.2020) வைக்கப்பட்டிருந்த்து. காலமான வசந்தகுமாரின் உடல் இன்று அகஸ்த்தீஸ்வரம் அருகில் உள்ள சுக்குப்பாறை தேரி விளைப் பகுதியில் உள்ள அவரது சொந்தத் தோட்டத்தில் அடக்கம் செய்ய ஊர்வலமாக கொண்டுச் செல்லப்பட்டது. வழிநெடுகிலும் அருகில் உள்ள கிராம மக்கள் திரண்டு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர். படங்கள்: மு. லெட்சுமி அருண்
44 / 67
45 / 67
46 / 67
தமிழகத்தில் - ’கரோனா’ தொற்றுப் பரவலைத் தடுக்க... ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ள நிலையில்... இன்று (30.8.2020) சாலைகள் அனைத்தும் எந்த வாகனப் போக்குவரத்தும் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. இந்நிலையில் - போக்குவரத்து இடைஞ்சல் எதுவும் இல்லாததால்... பல்லாவரம் திருநீர்மலை சாலையில் குட்டியுடன் ஜாலியாக வலம்வரும் குதிரை. படங்கள் : எம்.முத்து கணேஷ்
47 / 67
48 / 67
தமிழகத்தில் - ’கரோனா’ தொற்றுப் பரவலைத் தடுக்க... ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ள நிலையில்... இன்று (30.8.2020) சென்னை - புறநகர் பகுதியான தாம்பரம் பகுதிகளில் அவசியமின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தோரின் வாகனங்களைப் பெருங்குளத்தூரில் போலீஸார் பறிமுதல் செய்தனர். படங்கள் : எம்.முத்துகணேஷ்
49 / 67
50 / 67
51 / 67
தமிழகத்தில் - ’கரோனா’ தொற்றுப் பரவலைத் தடுக்க... ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ள நிலையில்... இன்று (30.8.2020) திருச்சி நகரப் பகுதிகளில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாகவே காணப்பட்டது. திருச்சி - சிந்தாமணி அண்ணா சிலை அருகே... கண்காணிப்பில் ஈடுபட்ட போக்குவரத்து போலீஸாரால் ஒரு கட்டத்தில் கட்டுப்படுத்தவே முடியாத அளவுக்கு பொதுமக்கள் போக்குவரத்து இருந்தது. ’முகூர்த்த நாள், இறப்புக்கு செல்கிறோம்’ என பல்வேறு காரணங்களை கூறியவாறு பொதுமக்கள் கடந்து சென்றனர். ஒரே இருசக்கர வாகனத்தில் 3 பேர், ஒரே ஆட்டோவில் 6 பேர், அதிக அளவில் நபர்களை ஏற்றிச் சென்ற பெரிய வாகனம் என பல்வேறு வாகனங்களை தடுத்து... விசாரித்து போலீஸார் அபராதம் விதித்தனர். படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்
52 / 67
53 / 67
54 / 67
55 / 67
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இன்று (30.8.2020) முழு ஊரடங்கையொட்டி மதுரை மேல வெளிவீதி செல்லும் சாலை எந்த வாகனப் போக்குவரத்தும் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
56 / 67
ஞாயிற்றுக்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு... மதுரை - எல்லீஸ் நகரில் உள்ள வரசித்தி விநாயகர் கோயிலில் இன்று (30.8.2020) சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
57 / 67
கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில்... இன்று (30.8.2020) எந்த போக்குவரத்துமின்றி வெறிச்சோடிக் காணப்படும் சென்னை- அண்ணா சாலை. படங்கள்: க.ஸ்ரீபரத்
58 / 67
59 / 67
60 / 67
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க இன்று (30.8.2020) தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதையொட்டி... கன்னியாகுமரி மாவட்டம் - கொட்டாரம் கல்லூரி சாலையில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு, போக்குவரத்து ஏதுமின்றி காட்சியளித்தன. படங்கள்: மு. லெட்சுமி அருண்
61 / 67
62 / 67
கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக... தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமைதோறும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில்... இன்று (30.8.2020) பொதுமக்கள் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்துமின்றி வெறிச்சோடிக் காணப்படும் சென்னை - நுங்கம்பாக்கம் சாலை. படம் : க.ஸ்ரீபரத்
63 / 67
கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக... தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமைதோறும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில்... இன்று (30.8.2020) சென்னையில் சாலையோரங்களில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு... சென்னை டி1 திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் சீத்தாராமன்... தன் சொந்தச் செலவில் உணவளித்தார். படங்கள்: க.ஸ்ரீபரத்
64 / 67
65 / 67
66 / 67
67 / 67
சென்னை - ராயபுரம் மண்டலத்தைச் சேர்ந்த கடற்கரைச் சந்து தெரு, துறைமுகப் பகுதி மண்டலம் - 5 ஆகிய இடங்களில்... சென்னை மாநகராட்சியுடன் இணைந்து ’சகோதரன்’ எனும் சமூக அமைப்பு திருநங்கைகள் பங்கேற்று நடனமாடும் ’கரோனா’ விழிப்புணர்வூட்டும் மயிலாட்ட நிகழ்ச்சியை இன்று (30.8.2020) நடத்தியது. படம்: க.ஸ்ரீபரத்

Recently Added

More From This Category

x