பேசும் படங்கள்... (28.08.2020)
Published on : 28 Aug 2020 19:09 pm
1 / 21
கரோனா தொற்றுப் பரவலைக் குறைப்பதற்கான அனைத்து பணிக்குழுக்களிலும் பெண்களின் பிரிதிநிதித்துவத்தை 50 சதவீதம் உறுதி செய்ய வேண்டும்; கரோனா பாதிப்பை குறைப்பதற்காக பிரதமர் அமைத்த பணிக்குழுவில் 50 சதவீதம் பெண் உறுப்பினர்கள் இடம்பெறுவகையில் அப்பணிக் குழுவை மறு சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி.... இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் இன்று (ஆகஸ்ட் - 28) நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதையடுத்து, வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர்.
படம் : வி.எம்.மணிநாதன்
2 / 21
மதுரை - திருமலை நாயக்கர் மஹாலைச் சுற்றியுள்ள பகுதியை ’ஸ்மார்ட் சிட்டி திட்டம்’ மூலம் சீரமைக்கும் பணிகளை... தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோர் இன்று (ஆகஸ்ட் - 28) ஆய்வு செய்தனர்.
படங்கள் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
3 / 21
4 / 21
5 / 21
மதுரை மாநகர காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவர் கார்த்திகேயனின் தலைமையில் ’நீட்’ தேர்வு மற்றும் ’ஜே.இஇ’ தேர்வுகளை உடனடியாக ரத்து செய்யக் கோரி இன்று (ஆகஸ்ட் - 28) மதுரை - தல்லாகுளம் அஞ்சல் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
6 / 21
அடையாள அட்டை உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் நிவாரணம் வழங்கக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில்... மாற்றுத் திறனாளிகள் மாநில ஆணையர் அலுவலகம் முன்பு இன்று (ஆகஸ்ட் - 28) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படம்: க.ஸ்ரீபரத்
7 / 21
8 / 21
சென்னையில் சைதாப்பேட்டை தொகுதி அடங்கிய மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்ட ராமர் கோயில் குளத்தை ரூ.90 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளை சைதாப்பேட்டை தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் ம.சுப்பிரமணியன் இன்று (28.8.2020) தொடங்கி வைத்தார்.
படங்கள்: க.ஸ்ரீபரத்
9 / 21
10 / 21
11 / 21
மருத்துவப் படிப்புக்கான ’நீட்’ தேர்வை தள்ளி வைக்கக் கோரி... தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் கே.வி.தங்கபாலு தலைமையில் இன்று (28.8.2020) அக்கட்சியினர் ஆர்பாட்டம் செய்தனர்.
படங்கள்: க.ஸ்ரீபரத்
12 / 21
13 / 21
வரும் திங்கள் கிழமை நாடு முழுவதும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதையொட்டி... ரெட் ஹில்ஸை அடுத்துள்ள ஆரணியில் பயிரிடப்பட்ட ரோஜா பூக்களை சென்னைக்கு அனுப்பி விற்பனை செய்வதற்காக இன்று (28.8.2020) பறிக்கப்பட்டன. பயிரான பூக்களை பறவைகள் மற்றும் பூச்சிகளை சேதம் செய்துவிடாமல் தடுக்க அத்தோட்டங்களில் வண்ணத் துண்டுத் துணிகளை பாதுகாப்புக்காக கட்டி வைத்துள்ளனர்.
படங்கள் : ம.பிரபு
14 / 21
15 / 21
16 / 21
கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளிகள் எல்லா மூடிக்கிடக்கின்றன. இந்நிலையில் சென்னைக்கு அருகில் காரனோடைப் பகுதியில் விடுப்பு நாளில் என்ன செய்வதென்று தெரியாத நிலையில்... ஒரே சைக்கிளில் தனது நண்பர்களை ஏற்றிக்கொண்டு மகிழ்ச்சி ரவுண்ட் அடிக்கும் சிறுவன்.
படங்கள் : ம.பிரபு
17 / 21
18 / 21
ஒணம் பண்டிகையை முன்னிட்டு... கேரள மாநில அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில்... சென்னைையில் வசிக்கும் கேரள மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல . சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு... சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று மாலை திருவனந்தபுரத்துக்கு சென்றனர்.
படங்கள் : ம.பிரபு
19 / 21
20 / 21
21 / 21