Published on : 25 Aug 2020 18:01 pm

பேசும் படங்கள்... (25.08.2020)

Published on : 25 Aug 2020 18:01 pm

1 / 36
மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதக் கொள்கைகள், தனியார்மயமாக்கல், புதிய மோட்டார் வாகனத் திருத்த சட்டம் ஆகியவற்றைக் கண்டித்து.... வேலூர் கொணவட்டம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்துப் பணிமனையின் முன்பாக... இன்று (25.8.2020) சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம் : வி.எம்.மணிநாதன்
2 / 36
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர்கள் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்; அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்; டாஸ்மாக் பணியாளருக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; மதுக்கடைகள் இயங்கும் நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை என மாற்றி அமைக்க வேண்டும்... என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி... டாஸ்மாக் ஊழியர்கள் 2 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதா நேற்று (24.8.2020) அறிவித்திருந்தனர். இந்நிலையில் - டாஸ்மாக் ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தத்தை கைவிட்டு... கடைகளைத் திறக்க வேண்டும்; இல்லையென்றால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் கூறியதால்... வேலூர் - காகிதப்பட்டரை, புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை இன்று திறந்து மதுபான விற்பனையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஈடுபட்டனர். படம் : வி.எம்.மணிநாதன்
3 / 36
சென்னை - அடையாறில் உள்ள மருதம் கமாண்டோ வளாகத்தில் கரோனா தொற்றின் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கமாண்டோ பயிற்சிப் பள்ளி காவல் ஆய்வாளர் ஜொனாதன் பிரான்சிஸின் உருவப்படத்துக்கு... இன்று (25.8.2020) தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, சென்னை நகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். படம் : பு.க.பிரவீன்
4 / 36
5 / 36
6 / 36
7 / 36
8 / 36
9 / 36
தனியார் பேருந்தை வாடகைக்கு எடுத்து இயக்கும் முறையைக் கைவிடக் கோரி... போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில்... இன்று (25.8.2020) சென்னை பல்லவன் இல்லம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படங்கள் : ம.பிரபு
10 / 36
11 / 36
12 / 36
தாம்பரம் நகராட்சிப் பகுதிகளில் கரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில்.... இன்று (25.8.20200 தாம்பரம் - காந்தி ரோடு பகுதிகளில் பலருக்கு க ரோனா பரிசோதனை செய்யப்பட்டது. படங்கள் : எம்.முத்து கணேஷ்
13 / 36
14 / 36
15 / 36
16 / 36
17 / 36
18 / 36
19 / 36
20 / 36
சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பாகவே... விளம்பரம் செய்வதற்காக அரசியல் கட்சிகளால் சுவர்கள் எல்லாம் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் - இரும்புலியூர் பாலத்தின் சுவர்களில் எம்ஜிஆர், ஜெயலலிதா, பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோரது ஓவியங்கள் தற்போது வரையப்பட்டு வருகின்றன. இந்த ஓவியங்களை வரையும் இரட்டையர்கள்தான் முன்பு விமான நிலையச் சுவர்களில் படம் வரைந்து அழகு செய்தவர்கள். படங்கள் : எம்.முத்து கணேஷ்
21 / 36
22 / 36
23 / 36
24 / 36
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பூல்பாண்டியன் என்பவர்... தான் யாசகம் எடுத்து சேமித்த ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை... கரோனா நிவாரண நிதியாக இன்று மாவட்ட ஆட்சியரிடம் 10-வது முறையாக வழங்கினார். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
25 / 36
பொது போக்குவரத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 17 கோரிக்கைகளை வலியுறுத்தி... மதுரை - பழைய திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே... அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் அனைத்து சங்கங்களின் சார்பாக இன்று (25.8.2020) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
26 / 36
புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா பாதிப்பை குறைக்க... செவ்வாய்கிழமைதோறும் முழு ஊரடங்கை... அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் - புதுச்சேரி எல்லையான கன்னிக்கோயில் பகுதியில் புதுச்சேரிக்குள் வாகனங்கை விடாமல் திருப்பி அனுப்பும் காவல் துறையினர். படம்: எம்.சாம்ராஜ்
27 / 36
28 / 36
தமிழத்தில் பல்வெறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதையடுத்து... புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது, இந்நிலையில் இன்று (25.8.2020) மதிய வேளையில் பூமியை குளிர்விக்கும் விதமாக மழை பெய்தது. மழையில் நனைந்தபடி செல்லும் வாகன ஓட்டிகள். இடம் : புதுச்சேரி - சுண்ணாம்பாறு பகுதி படங்கள் : எம்.சாம்ராஜ்
29 / 36
30 / 36
31 / 36
புதுச்சேரியில் கரோனா தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவைதையடுத்து... அரசு பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டு பேருந்து நிலையத்தை காய்கறி அங்காடியாக மாற்றியது. இந்நிலையில் - முன்பு எப்போதும் துாய்மையாக காணப்பட்ட பேருந்து நிலையதில் காய்கறி கடை வைத்திருக்கும் வியாபாரிகள்... அழுகிய காய்கறிகளையும் பழங்களையும் ஆங்காங்கே கொட்டி வைத்துள்ளனர் . இதனால் இந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி... சுகாதாரகேட்டினை விளைவிப்பதாக புதுச்சேரி பொதுமக்கள் புகார் வாசிக்கின்றனர். படம்: எம்.சாம்ராஜ்
32 / 36
33 / 36
புதுச்சேரியில் கரோனா தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவைதையடுத்து... அரசு பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டு செவ்வாய்க்கிழமைதோறும் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்நிலையில் - வெறிச்சொடிக் காணப்பட்ட புதுச்சேரி - அண்ணா சாலை. படம் ; எம்.சாம்ராஜ்
34 / 36
புதுச்சேரியில் கரோனா தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவைதையடுத்து... அரசு பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டு செவ்வாய்க்கிழமைதோறும் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரி -நேரு வீதியில் செல்லும் வாகன ஓட்டியை சோதனை செய்யும் காவல் துறையினர். படம் ; எம்.சாம்ராஜ்
35 / 36
புதுச்சேரியில் கரோனா தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவைதையடுத்து... அரசு பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டு செவ்வாய்க்கிழமைதோறும் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கையடுத்து வெறிச்சோடிக் காணப்பட்ட புதுச்சேரி - காமராஜர் சாலை. படம் : எம்.சாம்ராஜ்
36 / 36

Recently Added

More From This Category

x